Home
News

வேறலெவல் வசதியுடன் கலக்கவரும் கூகுள் அசிஸ்டெண்ட் வசதி.! ஆண்ட்ராய்டு பயனர்கள் மகிழ்ச்சி.!

இந்தயாவில் அதிகளவு மக்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகின்றனர், குறிப்பாக ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை
பயன்படுத்தும் பயனர்கள் அனைவரும் கூகுள் அசிஸ்டெண்ட் என்ற வசதியை அதிகமாக விரும்பி பயன்படுத்துகின்றனர்.

 கூகுள் அசிஸ்டெண்ட் வசதி

கூகுள் அசிஸ்டெண்ட் வசதி

இந்த கூகுள் அசிஸ்டெண்ட் வசதி மூலம் நமக்கு வேண்டிய உதவியை நாமே போனிடம் பேசி கேட்டுப் பெறலாம், அதாவது உங்கள் நண்பர் பெயர் கூறி போன் போடு என்று ஆங்கிலத்தில் கேட்டால் நேரடியாக அந்த நண்பருக்கு கால் செய்யும். பின்பு குறிப்பிட்ட நபருக்கு மெசேஜ் அனுப்ப சொன்னால் அப்படியே மெசேஜ் அனுப்பிவிடும்.

வாசித்து காட்டும் வகையில் புதிய அப்டேட்

வாசித்து காட்டும் வகையில் புதிய அப்டேட்

இந்நிலையில் கூகுள் நிறுவனம் இப்போது ஸ்மார்ட்போனில் வரும் நோட்டிபிக்கேஷன் மெசேஜை, வாசித்து காட்டும் வகையில் புதிய அப்டேட்டை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இது தற்சமயம் சோதனை முயற்சி அளவில் உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன, விரைவில் இந்தத வசதி கொண்டுவரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்ஆப், பேஸ்புக்

வாட்ஸ்ஆப், பேஸ்புக்

குறிப்பாக வாட்ஸ்ஆப், பேஸ்புக் மெசேஞ்சர் என எந்த செயலியிலும் மெசேஜ் வந்தாலும், Hey Google, Read my Messages என்று சொன்னால் போதும், மெசேஜ்களை அப்படியே வாசித்துக்காட்டும் கூகுள் அசிஸ்டெண்ட்.

ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட் பல்ப்

ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட் பல்ப்

பின்பு வீட்டில் ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட் பல்ப் போன்ற சாதனங்களுடன் கூகுள் அசிஸ்டெண்ட்டை இணைத்து கொள்ளவும் வழிவகை செய்யப்படுகிறது. கூகுளை போலவே அமேசானில் எக்கோ மற்றும் அலெக்ஸா வசதி உள்ளது, இதில்
ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உள்ளீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அமேசான் அலெக்ஸா

அமேசான் அலெக்ஸா

மேலும் தமிழ் தெலுங்கு போன்ற மற்ற மொழிகளும் விரைவில் அமேசான் அலெக்ஸாவில் கொண்டுவரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு அனைவரும் தமிழில் அருமையாக பேசி கட்டளைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
google-assistant-new-feature-messages-out-loud : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X