கேட்டால் கிடைக்கும்: Google Assistant எத்தனை பேர் பயன்படுத்துகிறார்கள், என்ன பயன்?

|

இதற்கு முன்பு கூகுள் நிறுவனம் அளித்த வாய்ஸ் அசிஸ்டெண்ட் ஆப்பான 'கூகிள் நவ்'-வின் குறைபாடே அது இருவழி உரையாடலை மேற்கொள்ள இயலாது என்பதுதான். ஆனால் இந்த புதிய விர்ச்சுவல் அசிஸ்டெண்ட்டில் தொடர்ச்சியான உரையாடலை மேற்கொண்டு தகுந்த பதில்களை பெறலாம்.

குரல் மூலமாகவே இயக்க முடியும்

குரல் மூலமாகவே இயக்க முடியும்

உங்கள் மொபைலில் உள்ள ஓலா, உபேர், மியூசிக் மற்றும் வீடியோ போன்ற சில குறிப்பிட்ட ஆப்களை உங்கள் குரல் மூலமாகவே இயக்க முடியும். எடுத்துக்காட்டாக "தர்பார் படம் மாலை காட்சி டிக்கெட்" என்று ஆங்கிலத்தில் கூறினால் போதும் வேலை முடிந்துவிடும்.

கீபோர்டில் டைப் செய்வதற்கு பதிலாக வாய்ஸ்

கீபோர்டில் டைப் செய்வதற்கு பதிலாக வாய்ஸ்

அடுத்த கட்டத்தை நோக்கி பயணித்து கொண்டிருக்கும் காலத்தில், கீபோர்டில் டைப் செய்வதற்கு பதிலாக வாய்ஸ் கொடுப்பதன் மூலம் இந்த முறை இயக்கப்படுகிறது. வேகமாக நகர்ந்து கொண்டிருக்கும் காலத்தில் யாரும் முழுதாக டைப் செய்ய விரும்புவதில்லை அதற்கு பதிலாக பேசிக் கொள்ளும் இந்த முறை கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகள்

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகள்

கூகுள் நிறுவனம் இந்தியாவில் அன்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய அறிவிப்பை வெளியிட்டது, அதன்படி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்,பெங்காலி, இந்தி, மராத்தி, குஜராத்தி மற்றும் உருது அகிய மொழிகளில் கூகுள் அசிஸ்டெண்ட் வசதியை பயன்படுத்தலாம் எனத் தெரிவித்தது.

தமிழில் என்னுடம் பேசுங்கள்

தமிழில் என்னுடம் பேசுங்கள்

இந்த புதிய வசதி அனைத்து மொழிகளிலும் வந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதாவது தமிழில் என்னுடன் பேசுங்கள் என்று கேட்பதன் மூலம் கூகுள் அசிஸ்டன்ட் வசதியை தமிழில் பேச வைக்கலாம்.

வானிலை விவரம், செய்திகள், வழி

வானிலை விவரம், செய்திகள், வழி

குறிப்பாக வானிலை விவரம், செய்திகள், வழி தெரிந்துகொள்வது, தகவல்கள் பெறுவது என வாய்ஸ் மூலம் இயக்கப்படுவது கூகுள் அசிஸ்டண்ட். இந்த சேவையை பெற இணையவசதி முக்கியமானது. ஆனால் தற்போது அறிவித்த அறிவிப்பின் அடிப்படையில் இணைய சேவை இல்லமால் கூகுள் அசிஸ்டண்டை பயன்படுத்துவது மக்களுக்கு மகிவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Jio WiFi Calling கட்டணம் இல்லை: தமிழக மக்களுக்கு ஜியோவின் நற்செய்தி- வைபை கிடைத்தாலே கால் செய்யலாம்Jio WiFi Calling கட்டணம் இல்லை: தமிழக மக்களுக்கு ஜியோவின் நற்செய்தி- வைபை கிடைத்தாலே கால் செய்யலாம்

50 கோடிக்கும் அதிகமானோர்

50 கோடிக்கும் அதிகமானோர்

இந்த நிலையில் கூகுள் நிறுவனத்தின் அசிஸ்டண்ட் சேவையினை உலகம் முழுக்க சுமார் 50 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு அமேசான் நிறுவனம் அலெக்சா வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி கொண்ட சுமார் 10 கோடிக்கும் அதிகமான சாதனங்களை விற்பனை செய்ததாக அறிவித்து இருந்தது.

அமேசானை விட கூகுள் சேவை அதிகம்

அமேசானை விட கூகுள் சேவை அதிகம்

அமேசானை விட கூகுள் சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகம் ஆகும். கூகுளின் ஆண்ட்ராய்டு இயங்குதளம் சுமார் 250 கோடிக்கும் அதிகமான சாதனங்களில் இயங்குகிறது. அந்த வகையில் நான்கில் ஒரு சாதனத்திற்கும் குறைவாகவே கூகுள் அசிஸ்டண்ட் சேவை பயன்படுத்தப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Google Assistant Monthly users details announce

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X