ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் சார்ஜ் நிற்கவில்லையா? ’இதோ 'இந்த" சேவைதான் காரணமாய் இருக்கலாம்.!
இன்று அனைத்து தரப்பு மக்களும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கு பெரும்பாலும் சார்ஜிங் போனில் நிற்கவில்லை என்று புலம்புகின்றனர். இதற்கு கூகுளும் ஒரு காரணமாக கூறப்படுகின்றது. இதுகுறித்து நாம் காணலாம்.

போன்கள் பயன்பாடு
இன்று அனைத்து தர மக்களுக்கும் இன்றியமையாதாக மாறிவிட்டது செல்போன்கள். அதன் மூலம் நாம் தகவல் தொடர்புகளுக்கு பயன்படுத்தி வருகின்றோம். இந்நிலையில், இதிலும் ஒரு சில சிக்கல் வருது உண்டு.

கூகுள் அசிஸ்டென்ட் சேவை
ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்துவோர் கூகுள் அசிஸ்டென்ட் சேவையைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால் உங்களது மொபைலின் சார்ஜ் குறைந்து கொண்டேதான் வரும். காரணம், சமீபத்தில் ‘பக்' ஒன்று கூகுள் ஹோம் மற்றும் கூகுள் பிக்சல் சாதனங்களைத் தாக்கியுள்ளது.

வாய்ஸ் கமாண்ட் சேவை
இத்தகைய சூழலில் நாம் கூகுள் அசிஸ்டென்ட், வாய்ஸ் கமாண்ட் சேவையைப் பயன்படுத்தினோம் என்றால் சார்ஜ் வேகமாக நீர்த்துப்போகும்.

சர்வதேச அளவில் பிரச்னை
இந்தியாவில் மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் பயனாளர்களுக்கு இந்த அசெளகரியம் ஏற்பட்டு வருகிறது. பேட்டரி நீர்த்துப்போவது மட்டுமல்லாமல் உங்களது மொபைலில் உள்ள தகவல்களும் கசிய வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

கூகுளுக்கு புகார்கள்
கூகுளிடம் இதுகுறித்தப் புகார்கள் சென்றுள்ளது. ஆனாலும், இதுவரையில் இப்பிரச்னைக்குத் தீர்வு எட்டப்படவில்லை. கூகுள் அசிஸ்டென்ட் சேவையைப் பயன்படுத்தாமல் இருப்பது தற்காலிகத் தீர்வாகக் கூறப்படுகிறது


Click it and Unblock the Notifications








