Home
News

Google ஆப் விண்டோஸ் VS குரோம் பிரவுசர்.. வெப் சர்ச் மட்டுமல்ல.. லோக்கல் ஃபைல்கள் கூட.. ஒரே சார்ட்கட் போதும்!

கூகிள் (Google) நிறுவனம் விண்டோஸ் தளங்களுக்கான புதிய கூகிள் ஆப் (Google App) என்னும் குயிக் சர்ச் பாரை (Quick Search Bar) அறிமுகப்படுத்தியுள்ளது. இது வெப் மட்டுமல்லாமல், லோக்கல் ஃபைல்கள், ஆப்கள் மற்றும் கூகிள் டிரைவ் போன்றவற்றுடன் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே சர்ச் பாரின் கீழ் அவற்றை கொண்டு வருகிறது. இது விண்டோஸ் யூசர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* குயிக் சர்ச் (Quick Search)
* யூனிஃபைட் சர்ச் (Unified Search)
* ஏஐ மோட் (AI Mode)
* கூகுள் லென்ஸ் இன்டிகிரேஷன் (Google Lens Integration)
* கஸ்டமைசேஷன் (Customization)
* கூகுள் குரோமுடன் (Google Chrome) ஒப்பிடு

Google ஆப் விண்டோஸ் VS குரோம் பிரவுசர்.. வெப் சர்ச் மட்டுமல்ல!

குயிக் சர்ச்: நீங்கள் விண்டோஸ் மூலம் கேம்‌ விளையாடிக் கொண்டிருந்தாலும் சரி, மூவிக்கள் பார்த்துக் கொண்டிருந்தாலும் சரி‌, எங்கேயும் நேவிகேட் செய்யாமல், இதில் சர்ச் செய்ய முடியும். கீ-போர்டு சார்ட்கட் மூலம் அதை செய்து கொள்ளலாம். ஆல்ட் + ஸ்பேஸ் (Alt + Space) கீகளை கிளிக் செய்தால் போதும் கூகுள் ஆப் சர்ச் பார் தோன்றும். நீங்கள் அதில் சர்ச் செய்யலாம்.

யூனிஃபைட் சர்ச்: இந்த கூகுள் ஆப் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட சர்ச் கிடைக்கிறது. அதாவது, விண்டோஸ் தளத்தில் ஏற்கவே கீழே கொடுக்கப்பட்டிருக்கும் டாஸ்க் மேனேஜரில் (Task Managers) சர்ச் பார் இருக்கிறது. ஆனால், அது ஃபைல்கள், ஆப்கள் மற்றும் செட்டிங்ஸ் ஆகியவற்றுக்கு உங்களை நேவிகேட் செய்யும். அதில் வெப் போல பிரவுசிங் செய்ய முடியாது.

Google ஆப் விண்டோஸ் VS குரோம் பிரவுசர்.. வெப் சர்ச் மட்டுமல்ல!

ஆனால், இந்த புது சர்ச் ஆப் மூலம் பைல்கள், ஆப்கள், கூகுள் டிரைவ் போன்ற லோப்டாப் அல்லது டெக்ஸ்டாப்பில் இருக்கும் லோக்கல் ஃபைல்களை மட்டுமல்லாமல், வெப் மூலம் பிரவுசிங்கும் செய்து கொள்ள முடியும். இதனால், நீங்கள் எளிதாக நேவிகேட் செய்து கொள்ளலாம். இது முன்பைவிட பல மடங்கு வேகமாக உங்களுக்கு ரிசல்ட்களை கொடுக்கும்.

* வெப் (கூகுள் சர்ச்)
* லோக்கல் ஃபைல்கள் (கம்ப்யூட்டர்)
* பைல்கள் (கூகுள் டிரைவ்)
* இன்ஸ்டால்டு அப்ளிகேஷன்கள் (Installed Applications)

ஏஐ மோட்: கூகுள் நிறுவனம் குரோம் பிரவுசரில் ஏஐ மோட் சர்ச் பீச்சரை அண்மையில் சேர்த்தது. இது வழக்கமான வெப் சர்ச் போல் வெறும் ப்ளூ லிங்குகளை கொடுக்காமல், அதுவே பல்வேறு வெப்சைட்களை அலசி ஆராய்ந்து உங்களுக்கு சாட் செய்வதை போல ரிசல்ட்களை கொடுக்கிறது. இந்த ஏஐ மோட் இந்த விண்டோஸ்-க்கான கூகுள் ஆப்பிலும் கிடைக்கிறது.

Google ஆப் விண்டோஸ் VS குரோம் பிரவுசர்.. வெப் சர்ச் மட்டுமல்ல!

கூகுள் லென்ஸ் இன்டிகிரேஷன்: கூகுள் யூசர்கள் குரோம் பிரவுசரில் வழக்கமாக பயன்படுத்தும் கூகுள் லென்ஸ் இதிலும் கிடைக்கிறது. ஆகவே, இமேஜ்களில் இருக்கும் டெக்ஸ்ட்களை டிரான்ட்லேட் செய்து கொள்ளலாம். கணக்குகளை சால்வ் செய்து கொள்ளலாம். அதேபோல ஸ்கிரீனில் தோன்றும் எந்தவொரு ஆப்ஜெக்ட் குறித்தும் தகவல்களை பெற்று கொள்ளலாம்.

கஸ்டமைசேஷன்: இந்த கூகுள் ஆப் சர்ச் கஸ்டமைஸ் செய்து கொள்ளும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது, உங்களுக்கு எளிதாக இருக்கும்படி கீபோர்ட் சார்ட்கட்களை மாற்றி கொள்ளலாம். அதேபோல டார்க் மற்றும் லைட் மோட்களையும் சர்ச் பாரில் வைத்து கொள்ளலாம். இதன் மூலம் சர்ச் பாரை நொடியில் உங்களது வசதிக்கு ஏற்ப மாற்றி கொள்ள முடிகிறது.

Google ஆப் விண்டோஸ் VS குரோம் பிரவுசர்.. வெப் சர்ச் மட்டுமல்ல!

கூகுள் குரோமுடன் ஒப்பிடு: குரோம் பிரவுசரில் லோக்கல் ஃபைல்களை அனுக முடியாது. முற்றிலும் பிரவுசிங் மட்டுமே செய்ய அது வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆகவே, வெப் பிரவுசிங், வெப்சைட் விசிட்டிங், வெப் அப்ளிகேஷன் ரன்னிங் ஆகியவற்றை மட்டுமே அதில் செய்ய முடியும். குயிக் அக்சஸ் கிடைத்தாலும், அதை டாஸ்க் மேனேஜரில் வைத்து அதன்பிறகு ஓப்பன் செய்ய வேண்டும்.

ஆனால், கூகுள் ஆப் அப்படி கிடையாது. வெப் சர்ச், ஏஐ சர்ச் மட்டுமல்லாமல், லோக்கல் ஃபைல் சர்ச் கொடுக்கிறது. இதை நேவிகேட் செய்து ஓப்பன் செய்ய வேண்டியது கிடையாது. சார்ட்கட் கீ கொடுத்தால் போதும் ஓப்பன் செய்யப்படும். கூகுள் சர்ச் லேப்ஸ் (Google Search Labs) மூலம் சோதனை முயற்சியில் கிடைக்கிறது. அமெரிக்காவில் மட்டுமே இப்போதைக்கு கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google App for Windows Key Features and Comparison to Google Chrome
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X