வாடிக்கையாளர்கள் வசதிக்காக கூகுள் வழங்கும் கிப்ட் கார்டு சேவை

Posted By: Staff
வாடிக்கையாளர்கள் வசதிக்காக கூகுள் வழங்கும் கிப்ட் கார்டு சேவை

கூகுள் மிக விரைவில் தனது கூகுள் ப்ளே கிப்ட் கார்ட் சேவையை தொடங்க இருக்கிறது. இந்த கிப்ட் கார்டுகள் 10, 25 மற்றும் 50 அமெரிக்க டாலர்கள் விலைக்குக் கிடைக்கும். அமெரிக்காவைச் சேர்ந்த சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடும் ரேடியோ ஷேக், டார்க்கெட் மற்றும் கேம்ஸ்டாப் போன்றவற்றில் இந்த கிப்ட் கார்டுகள் கிடைக்கும்.

ஆனால் அமெரிக்காவிற்கு வெளியே இந்த கிப்ட் கார்டுகள் கிடைக்குமா என்று தெரியவில்லை. ஆனால் அமெரிக்காவிற்கு வெளியிலும் இந்த கிப்ட் கார்டுகள் விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கூகுள் கிப்ட் கார்டுகளுக்கு பீஸ் எதுவும் கிடையாது. மேலும் இந்த கார்டுகள் செயல் இழப்பதில்லை. அவ்வாறு இழந்தாலும் ரிடம்சன் கோடைக் கொண்டு இந்த கார்டுகளை செயல்படுத்த முடியும்.

இவற்றைப் பயன்படுத்துபவர்கள் தங்களது மொபைல்கள் வழியாக கிப்ட் கோடை குகுள் பிளேயில் பயன்படுத்தலாம். அமெரிக்காவிற்கு வெளியில் யாராவது ஒருவருக்கு இந்த கிப்ட் கார்டு அல்லது அதன் கோட் எதாவது கிடைத்தால் அதை அவர் பயன்படுத்த முடியாது.

இந்த கூகுள் கார்டுகள் ஒரு சில கட்டுப்பாடுகளையும் கொண்டிருக்கின்றன. குறிப்பாக ஆன்ட்ராய்டு அப், மேக்கசின் போன்றவற்றை சப்ஸ்க்ரைப் செய்யவோ அல்லது ஹார்ட்வேர் மற்றும் அக்சஸரிஸ்களை வாங்குவதற்காகவோ இந்த கிப்ட் கார்டுகளைப் பயன்படுத்த முடியாது.

அதுபோல் அமெரிக்காவிற்கு வெளியிலும் இந்த கார்டுகளைப் பயன்படுத்த முடியாது. ஆனால் பாடல்கள், திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள், இ-புக்குகள், ஆன்ட்ராய்டு ஆப்ஸ் போன்றவற்றை கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து வாங்க இந்த கார்டுகளைப் பயன்படுத்தலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்