Google Play 2022 இன் பெஸ்ட் ஆப்ஸ் மற்றும் கேம்கள் இதுதான்: கூகுள் உடைத்த உண்மை!

|

நாட்கள் ஓடியதே தெரியவில்லை என குறிப்பிடும் அளவிற்கு 2022 ஆம் ஆண்டு ஓடி விட்டது. இன்னும் சில தினங்களில் 2023 இல் அடியெடுத்து வைக்க இருக்கிறோம். 2022 ஆம் ஆண்டின் Google Play இல் சிறந்து விளங்கிய பயன்பாடுகளை கூகுள் அறிவித்துள்ளது. Turnip - Talk, chat மற்றும் stream ஆகியவை சிறந்த Fun ஆப்ஸ்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தனிப்பட்ட வளர்ச்சிக்கான சிறந்த ஆப் என்ற பட்டத்தை Filo: Instant 1-to-1 tutoring பெற்றிருக்கிறது.

ஷாப்ஸி ஷாப்பிங் ஆப்

ஷாப்ஸி ஷாப்பிங் ஆப்

கூகுள் வெளியிட்ட அறிவிப்பின்படி, "ஷாப்ஸி ஷாப்பிங் ஆப்" சிறந்த தினசரி அத்தியாவசிய ஆப் என்ற பட்டத்தை பெற்றது. மூத்த குடிமக்கள் பயன்பாடு நன்மைக்கான சிறந்த பயன்பாடாக கியாஸ் இருக்கிறது. சமீபத்தில் ஆப்பிள் தனது 2022 ஆம் ஆண்டிற்கான ஆப் ஸ்டோர் விருது வென்றவர்களை அறிவித்துள்ளது.

கூகுள் ப்ளே 2022

கூகுள் ப்ளே 2022

இந்த ஆண்டுக்கான கூகுள் ப்ளேயின் சிறந்த விருது வென்றவர்களை கூகுள் இந்தியா அறிவித்துள்ளது. ஆண்ட்ராய்டு போன்களுக்கான சிறந்த பயன்பாடாக கூகுள் ப்ளே ஸ்டோர் இருக்கிறது. சிறந்த ஆப்ஸ் மற்றும் கேம்களை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள பல பயனர்களுக்கு 2022 என்பது தொற்றுநோயின் பிந்தைய காலத்தை குறிக்கிறது என கூகுள் குறிப்பிட்டுள்ளது.

சிறந்த ஆப்ஸ்கள்

சிறந்த ஆப்ஸ்கள்

2022 ஆம் ஆண்டின் கூகுள் ப்ளே சிறந்த பயன்பாடுகளை கூகுள் அறிவித்துள்ளபடி, டர்னிப் - பேச்சு, சேட் மற்றும் ஸ்ட்ரீம் ஆகியவை சிறந்த ஃபன் ஆப்ஸ்களாக இருந்திருக்கிறது. அதே நேரத்தில் 'Filo: Instant 1-to-1 tutoring' தனிப்பட்ட வளர்ச்சிக்கான சிறந்த ஆப் என்ற பட்டத்தை வென்றிருக்கிறது. ஷாப்ஸி ஷாப்பிங் ஆப் - ஃபிளிப்கார்ட் சிறந்த அத்தியாவசிய செயலி என்ற தலைப்பை பெற்றிருக்கிறது. மூத்த குடிமக்களுக்கான சிறந்த பயன்பாடாக கியால் இருக்கிறது.

பிக் அப் மற்றும் ப்ளே விருது

பிக் அப் மற்றும் ப்ளே விருது

2022 இல் கூகுள் ப்ளேயில் உள்ள சிறந்த கேம்களின் பட்டியல் குறித்து பார்க்கையில். ராக்கெட் லீக் சைட்ஸ்வைப் சிறந்த மல்டிப்ளேயர் பட்டத்தை வென்றிருக்கிறது. அதேபோல் சிறந்த "பிக் அப் & ப்ளே" விருது Angry Birds Journeyக்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த இண்டி கேம் பட்டத்தை Dicey Dungeons வென்றிருக்கிறது. சிறந்த பயன்பாட்டுத் தலைப்பை Clash of Clans பெற்றிருக்கிறது. சமீபத்தில் ஆப்பிள் தனது ஆப் ஸ்டோர் 2022க்கான விருதை அறிவித்தது.

உங்கள் பாதுகாப்பு உங்கள் கையில்

உங்கள் பாதுகாப்பு உங்கள் கையில்

கூகுள் ப்ளே ஸ்டோரில் இருக்கும் பயன்பாடுகள் மற்றும் கேம்கள் பிற பயன்பாட்டு தளத்தில் இருப்பதை விட அதிகபட்சம் பாதுகாப்பானதாக தான் இருக்கும். ஆனால் முழுவதும் பாதுகாப்பானது என கூறிவிட முடியாது. காரணம் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருக்கும் ஸ்பேம் பயன்பாடுகள் கண்டறியப்பட்டு கூகுளே நீக்கிய நிகழ்வுகளும் தொடர்ச்சியாக அரங்கேறி வருகிறது. எந்த ஒரு பயன்பாட்டையும் பாதுகாப்பாக கையாள வேண்டும் என்பது அவசியம்.

மத்திய அரசு நடவடிக்கை

மத்திய அரசு நடவடிக்கை

கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் சட்டவிரோத கடன் பயன்பாடுகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் இதுபோன்ற கடன் பயன்பாடுகளால் துன்புறத்தல் சம்பவங்களும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து நாட்டில் உள்ள சட்டவிரோத/ஆதாரமற்ற கடன் பயன்பாடுகளை ஒடுக்குவதற்கு என மத்திய அரசு நடவடிக்கை எடுக்க இருப்பதாக அறிவித்தது.

பாதுகாப்பு வழிமுறைகள்

பாதுகாப்பு வழிமுறைகள்

கடன் வாங்குபவர்களை துன்புறத்தலில் இருந்து காப்பாற்றுவதற்கு என கட்டுப்பாடற்ற முறையில் கடன் வழங்கும் செயலிகளை தடை செய்வதற்கான சில வழிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி முன்னதாகவே கொண்டு வந்தது.

2000 ஆப்ஸ்கள் நீக்கம்

2000 ஆப்ஸ்கள் நீக்கம்

அதன்படி கூகுள் இந்தியாவில் கடன் வழங்கும் பயன்பாடுகளில் கவனம் செலுத்தி வருகிறது. இந்த நடவடிக்கையின் ஒருபகுதியாக கூகுள் தனது ப்ளே ஸ்டோரில் இருந்து சுமார் 2000 தனிநபர் கடன் பயன்பாடுகளை கடந்த சில தினங்களுக்கு முன்பாக நீக்கியது.

Best Mobiles in India

English summary
Google announced the best apps and games of 2022 on Google Play: Check the list

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X