Home
News

கூகுள் நிறுவனம் ஊழியர்களுக்கு கொடுத்த மிகப் பெரிய சர்ப்ரைஸ்.! என்ன தெரியுமா?

கூகுள் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்றுதான் கூறவேண்டும். பின்பு இந்நிறுவனம் தனது ஊழியர்களின் நலனைக் காப்பதில் எப்போதுமே ஒரு படி முன்னர் தான் இருக்கிறது என்று கூறவேண்டும்.

 கூகுள் நிறுவனம்

அந்தவகையில் கூகுள் நிறுவனம் தற்போது எடுத்துள்ள முடிவு அந்நிறுவனத்தின் ஊழியர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த கொரோனா தொற்று காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாகப் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்தது. பின்பு பல நிறுவனங்கள் தனது பணியாளர்களை வேலையிருந்தும் நீக்கியது.

 பிறகு தற்போது உலகெங்கிலும்

பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலைசெய்ய அனுமதித்திருந்தன. சரியாக ஆறு மாதங்களுக்குப் பிறகுதற்போது உலகெங்கிலும் பல நாடுகளில் ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டுப் பல நிறுவனங்கள் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டுள்ளன.

ஆறு மாதங்களில் ஊழியர்கள் வீட்டில்

இந்த ஆறு மாதங்களில் ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே வேலை செய்யப் பழகி இருந்தாலும், நிறுவனத்தில் சென்று வேலை செய்வதை விட வீட்டில் சற்று அதிகமான பணி கொடுக்கப்பட்டது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக மீட்டிங், இரவு-பகல் வேலை என ஊழியர்களுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது. ஆனாலும் கொரோனா தொற்று இன்னும் முழுமையாக கட்டுக்குள் வராத நிலையில் உடல் மற்றும் மனநலத்தைப் பாதுகாப்பது அவசியம் என்பதை உணர்ந்த கூகுள் நிறுவனம் தொழிலாளர்களுககு மூன்று நாட்கள்
வாரவிடுமுறை அளித்துள்ளது.

மூன்று நாட்கள் விடுமுறையில்

அதாவது இந்த மூன்று நாட்கள் விடுமுறையில் வெள்ளிக்கிழமை திடீரென அவசர வேலை வந்துவிட்டால் வெள்ளிக்கிழமை விடுமுறையை
மற்றொரு நாளில் மாற்றி எடுத்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

கொரோனா தொற்றுநோய் முடிவுக்கு வராத

இந்த கொரோனா தொற்றுநோய் முடிவுக்கு வராத நிலையில் தொழிலாளர்களின் உடல் நலம் மற்றும் மன நலத்தைப் பாதுகாப்பது அவசியம் என்றும் அதிக அழுத்தம் மன உளைச்சலை அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளது. பின்பு இந்நிறுவனத்தின் இந்த அறிவிப்பு அதன் ஊழியர்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்துள்ளது

பல நிறுவனங்களில் விடுமுறை

மேலும் பல நிறுவனங்களில் விடுமுறை விதிமுறைகள் என்பது மிகவும் கடுமையாக உள்ளது. இந்தச்சூழல்நிலையில் கூகுள் நிறுவனத்தை போலவே மற்ற நிறுவனங்களும் அருமையான விடுமுறை திட்டங்களை கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Google Announced Only Three Working Day in a Weekend: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X