ஆண்ட்ராய்டு டிவி பயனர்களின் கவனத்திற்கு: Google வெளியிட்ட புதிய Android TV அப்டேட்டில் என்ன இருக்கு?

|

ஆண்ட்ராய்டு சாப்ட்வேரில் இயக்கும் ஆண்ட்ராய்டு டிவிகளுக்கான புதிய ஆண்ட்ராய்டு டிவி இடைமுக அப்டேட்டை கூகிள் நிறுவனம் தற்பொழுது வெளியிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த புதிய அப்டேட் புதிய Chromecast 3வது தலைமுறையில் பொருத்தப்பட்ட புதிய Google TV இடைமுகத்துடன் ஒத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய அப்டேட்டில் என்ன அம்சங்கள் வந்துள்ளது என்று பார்க்கலாம்.

அமெரிக்கா

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் 2 நாட்களுக்கு முன்பு கூகிள் தனது புதிய த்ரீ-டேப் தோற்றத்திற்கான வெளியீட்டைத் தொடங்கியது. கூகிள் தகவல்படி, இது வரும் வாரங்களில் அதிக நாடுகளில் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. புதிய அப்டேட்டில் டிவிக்கான UI வாய்ஸ் சர்ச் மற்றும் கூகிள் அசிஸ்டன்ட் அம்சங்கள் மேல் இடது மூலையில் வைக்கப்பட்டுள்ளது.

ஆனால்

ஆனால், பிளே நெக்ஸ்ட் அம்சம், ஆப்ஸ் மற்றும் அதர் ஆப்ஸ் பயன்பாடுகளின் பரிந்துரைகள் இருந்த இடத்திலிருந்து இப்போது புதிய அப்டேட்டில் இல்லாமல் போய்விட்டது. இவை அனைத்தும் இப்போது ஹோம், டிஸ்கவர் மற்றும் ஆப்ஸ் ஆகிய மூன்று புதிய டேப்களுடன் பிரிக்கப்பட்டுள்ளது. ஹோம் டேபில் உங்களுக்கு பிடித்த பயன்பாடுகள் மற்றும் சேனல்கள் மற்ற பரிந்துரைகளுடன் வருகிறது.

ரூ. 4,999 விலையில் Lava Z1 ஸ்மார்ட்போன் வாங்கலாம்.. உடனே முந்துங்கள்..ரூ. 4,999 விலையில் Lava Z1 ஸ்மார்ட்போன் வாங்கலாம்.. உடனே முந்துங்கள்..

அதேபோல்

அதேபோல், ஆப்ஸ் டேபில் உங்கள் டிவியில் நீங்கள் நிறுவிய அனைத்து பயன்பாடுகளையும் வைத்திருக்கிறது. இறுதியாக புதிய டிஸ்கவர் டேப், மெயின் மெனுவில் இறுதியாக வைக்கப்பட்டுள்ளது. இதில் முற்றிலுமான புதிய அனுபவங்களை பயனர்கள் அனுபவிக்க முடியுமென்று கூகிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. கூகிளின் கூற்றுப்படி, டிஸ்கவர் டேப் கூகிளில் பிரபலமாக இருப்பதைக் காண்பிக்கிறது.

இது தவிர

இது தவிர, நீங்கள் எதைப் பார்க்கிறீர்கள், உங்களுக்கு விருப்பமானவை என்ன என்ற அடிப்படையில் தனிப்பயனாக்கப்பட்ட பரிந்துரைகளை இந்த புதிய டிஸ்கவர் டேப் உங்களுக்கு வழங்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இந்த புதிய பரிந்துரைகள் உங்களிடம் உள்ள பயன்பாடுகளின் சந்தாக்களை அடிப்படையாகக் கொண்டவை என்பதை மறக்கவேண்டாம்.

5ஜி போனில் இதுதான் விலை கம்மி: புதிய Realme V11 5G அறிமுகம்.. மிஸ் பண்ணிடாதீங்க.!5ஜி போனில் இதுதான் விலை கம்மி: புதிய Realme V11 5G அறிமுகம்.. மிஸ் பண்ணிடாதீங்க.!

இந்த புதிய

இந்த புதிய ஆண்ட்ராய்டு டிவி அப்டேட் பிற சந்தைகளில் எப்போது களமிறங்கும் என்பது குறித்து எந்த செய்தியும் இன்னும் வெளியாகவில்லை, ஆனாலும், வரும் வாரங்களில் பல இடங்களில் இந்த புதிய அப்டேட் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது வருங்காலத்தில் இன்னும் அதிகப்படியான கூடுதல் அம்சங்களைப் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
Google Announced New Android TV Interface Update For TVs Running On Android Software : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X