Home
News

கஸ்டமர் சர்வீஸ்-னா இப்படி இருக்கணும்.. பேட்டரி வீக்கம்-ஆ.. இலவச ரிப்பேர், பண இழப்பீடு அறிவித்த Google!

பிக்சல் 6ஏ (Pixel 6a) ஸ்மார்ட்போனில் தீ பிடிக்கும் மற்றும் வெடிக்கும் அபாயம் இருக்கிறது என்பது குறித்த புகார்களுக்கும், பிக்சல் 6ஏ மாடலை கொண்டுள்ள வாடிக்கையாளர்களின் கவலைகளுக்கும் செவி சாய்த்து.. இந்த சிக்கலை சரி செய்வதற்கான 2 முக்கிய அறிவிப்புகளை கூகுள் (Google) நிறுவனம் வெளியிட்டுள்ளது!

சில பிக்சல் 6ஏ யூனிட்களில் பேட்டரி வீக்கம் (Battery Swelling) மற்றும் டிவைஸ் எக்ஸ்ப்ளோஷன் (Device Explosion) உள்ளிட்ட கடுமையான பேட்டரி சிக்கல்கள் தொடர்பான அறிக்கைகள் மற்றும் புகார்கள் வெளியானதை தொடர்ந்து கூகுள் நிறுவனம் அதை தடுப்பட்டதற்கான 2 நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

பேட்டரி வீக்கம்-ஆ.. இலவச ரிப்பேர், பண இழப்பீடு அறிவித்த Google!

முதல் நடவடிக்கை: பிக்சல் 6 சீரிஸில் உள்ள மற்ற மாடல்கள் ஏற்கனவே ஆண்ட்ராய்டு 16 அப்டேட்டை பெற்றிருந்தாலும், பிக்சல் 6ஏ மாடல் ஆனது "எலைட்" பட்டியலில் இருந்து விலக்கப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட அப்டேட்டை பெறவில்லை. இதுகூட குறிப்பிட்ட பேட்டரி சிக்கலுக்கு காரணமாக இருக்கலாம். எனவே கூகுள் நிறுவனம் பிக்சல் 6ஏ மாடலுக்கான சாஃப்ட்வேர் அப்டேட்டை வெளியிடுவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியை கூகிள் அறிவித்துள்ளது.

கூகுளின் 'பேட்டரி பெர்பார்மென்ஸ் புரோகிராமின்' (Google Battery Performance Programme) ஒரு பகுதியாக, அனைத்து பிக்சல் 6ஏ பயனர்களும் கட்டாய ஆண்ட்ராய்டு 16 சாஃப்ட்வேர் அப்டேட்டை (Mandatory Android 16 Update) பெறுவார்கள், இது ஜூலை 8 முதல் தானாகவே வெளியிடப்பட உள்ளது.

கூகுள் பிக்சல் 6ஏ மாடல்களுக்கு வரவிருக்கும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அப்டேட் ஆனது, ஸ்மார்ட்போன்கள் அதிகமாக வெப்பம் அடையும் அபாயத்தை குறைக்க, முக்கியமான சில பேட்டரி மேனேஜ்மென்ட் அம்சங்களை (Crucial battery management features) ஆக்டிவேட் (Activate) செய்யும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒரு பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போனானது 400 சார்ஜ் சுழற்சிகளை (400 charge cycles) அடைந்ததும், அதன் பேட்டரி திறன் மற்றும் சார்ஜிங் செயல்திறன் தானாகவே சரிசெய்யப்படும் என்று கூகுள் குறிப்பிட்டுள்ளது. இந்த வரம்பை நெருங்கும் டிவைஸ்களை கொண்ட பயனர்கள் (375 சார்ஜிங் சுழற்சிகளில்) நினைவூட்டல் (Reminder) ஒன்றை பெறுவார்கள்.

பேட்டரி வீக்கம்-ஆ.. இலவச ரிப்பேர், பண இழப்பீடு அறிவித்த Google!

400 சார்ஜிங் சுழற்சி என்கிற குறியை கடக்கும் வரை பேட்டரி தொடர்பான மாற்றங்களும் புதிய அம்சங்களும் செயலற்ற (Inactive) நிலையில் தான் இருக்கும் என்பதையும் கூகுள் தெளிவுபடுத்தியுள்ளது. குறிப்பிட்ட வரம்பிற்குப் பிறகு, ஸ்மார்ட்போன் அதன் திருத்தப்பட்ட திறனுக்கு ஏற்ப மாறும்போது, ​​சார்ஜிங் வேகம் குறைவதையும் பேட்டரி லெவல் இண்டிகேட்டரில் தற்காலிக ஏற்ற இறக்கங்களையும் (Temporary fluctuations) பயனர்கள் கவனிக்கக்கூடும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது நடவடிக்கை: கூகுள் நிறுவனம் இழப்பீடு மற்றும் பழுதுபார்க்கும் திட்டத்தையும் அறிவித்துள்ளது. பேட்டரி பெர்பார்மென்ஸ் புரோகிராமின் கீழ், பாதிக்கப்பட்ட டிவைஸ்களாக வகைப்படுத்தப்பட்ட டிவைஸ்களை கொண்ட பிக்சல் 6ஏ பயனர்களுக்கு இலவச பழுதுபார்ப்பு (Free-of-charge repairs) கிடைக்கும். இதன்கீழ் பயனர்கள் தங்கள் பாதிக்கப்பட்ட டிவைஸ்களை இலவசமாக பழுதுபார்க்கலாம்.

மேலும் கூகுள் நிறுவனம் பண இழப்பீட்டையும் (Cash compensation) அறிவித்துள்ளது. தங்கள் பிக்சல் 6ஏ மாடலை பழுதுபார்க்க விரும்பாதவர்களுக்கு, பண இழப்பீட்டு விருப்பமும் உள்ளது. கடைசியாக ஸ்டோர் ஹார்வேர்ட் டிஸ்கவுண்ட்டும் (Store hardware discount)அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்கீழ் கூகுள் ஸ்டோர் மூலம் தங்கள் அடுத்த பர்சேஸை செய்யும்போது சில பொருந்தக்கூடிய தள்ளுபடி கிடைக்கும்.

ஒருவேளை உங்களுடைய பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போனும் இந்த சமீபத்தில் சிக்கல்களை எதிர்கொண்டு இருந்தால், அதற்கான தீர்வை பெற நீங்கள் ஆர்வமாக இருந்தால், ஆண்ட்ராய்டு 16 அப்டேட் கிடைத்தவுடன் அதை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்வது நல்லது. ஒருவேளை உங்களுக்கு எந்த சிக்கலும் இல்லை என்றாலும் கூட உங்கள் பிக்சல் 6ஏ மாடலுக்கு வரும் அப்பேட்டை பயன்படுத்தி கொள்வது - புத்திசாலித்தனம்!

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Announced Mandatory Android 16 Update Free Repair Cash Compensation For Pixel 6a Users
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X