Home
News

உங்கள் ஸ்மார்ட்போனில் 2GB-க்கு மேல் RAM இருக்கா.. அப்போ கிடைக்காது.. Google சேவையில் புது மாற்றம்!

ஒருவழியாக கூகுள் (Google) நிறுவனம் "இதை" அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது. கடந்த 9 ஆண்டுகளாக பலராலும் பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு கூகுள் அம்சம் 2025 ஆம் ஆண்டுடன் முடிவுக்கு வருகிறது. அது கடந்த 2016 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட கூகுள் அசிஸ்டண்ட் (Google Assistant) ஆகும்

கூகுள் அசிஸ்டண்ட்டை படிப்படியாக நிறுத்த திட்டமிட்டுள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது. அதாவது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் (Android Smartphones) கூகுள் அசிஸ்டண்ட்டிற்கான இடத்தை கூகுள் ஜெமினை (Google Gemini) நிரப்பும். இந்த மாற்றம் 2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நடக்கும் என்பதையும் கூகுள் குறிப்பிட்டுள்ளது.

Google சேவையில் புது மாற்றம்!

மேலும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்கள் இந்த மாற்றத்திற்கான குறிப்பிட்ட தேதியை முன்கூட்டியே பெறுவார்கள் என்றும், வரும் மாதங்களில் இன்னும் கூகுள் அசிஸ்டண்ட்டை பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு ஜெமினிக்கான மேம்படுத்தல் அறிவிப்பை (Upgrade Prompt) பெறுவார்கள் என்பதையும் கூகுள் உறுதிப்படுத்தி உள்ளது.

இது குறித்த அறிவிப்பில் "கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்கு பிறகு, இந்த முறை மற்றொரு பிளாட்ஃபார்ம் ஷிஃப்ட்டிற்கு (Platform shift) மத்தியில் நாம் இருக்கிறோம். ஜெனரேட்டிவ் ஏஐ (Generative AI) உதவியுடன் தொழில்நுட்பத்துடன் நாம் தொடர்பு கொள்ளும் விதத்தை இது முற்றிலுமாக மாற்றும்" என்று கூகுள் கூறியுள்ளது.

இருப்பினும், ஆண்ட்ராய்டு 9 அல்லது அதற்கு முந்தைய வெர்ஷன்களை கொண்டுள்ள ஆண்ட்ராய்டு போன்களில் மற்றும் 2 ஜிபி-க்கும் குறைவான ரேம்-ஐ கொண்டுள்ள போன்களிலும் இந்த மாற்றம் நிகழாது; மாறாக குறிப்பிட்ட ஆண்ட்ராய்டு போன்களில் ஏற்கனவே கூகுள் அசிஸ்டண்ட் அப்படியே தக்கவைக்கப்படும் என்பதையும் கூகுள் உறுதிப்படுத்தி உள்ளது.

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட பிக்சல், சாம்சங், ஒன்பிளஸ் மற்றும் மோட்டோரோலா பிராண்டின் கீழ் அறிமுகம் செய்யப்பட்ட பல புதிய ஆண்ட்ராய்டு போன்கள் ஏற்கனவே ஜெமினையை டீபால்ட் அசிஸ்டெண்ட் ஆக மாற்றியுள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. மில்லியன் கணக்கான பயனர்கள் ஏற்கனவே ஜெமினைக்கு மாறிவிட்டதாகவும் கூகுள் குறிப்பிட்டுள்ளது.

வரவிருக்கும் மாதங்களில், மொபைல் டிவைஸ்களில் அதிகமான பயனர்களை கூகுள் அசிஸ்டண்ட்டிலிருந்து ஜெமினைக்கு மேம்படுத்துகிறோம்; இந்த ஆண்டின் பிற்பகுதியில், கிளாசிக் கூகுள் அசிஸ்டண்ட் இனி பெரும்பாலான மொபைல் டிவைஸ்களில் அணுக முடியாது அல்லது மொபைல் ஆப் ஸ்டோர்களில் புதிய டவுன்லோட்கங்களுக்கு அணுக கிடைக்காது என்று கூகுள் கூறியுள்ளது

இதற்கிடையில் கூகுள் நிறுவனம், ஆண்ட்ராய்டு 16 பீட்டா 3 (Android 16 Beta 3) வெர்ஷனை வெளியிட்டுள்ளது. கூகுள் டைம்லைனின் படி, மற்ற ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கான ஸ்டேபிள் ஆண்ட்ராய்டு 16 வெர்ஷன் (Stable Android 16 Version) ஆனது 2025 மே அல்லது ஜூன் மாத தொடக்கத்தில் வெளியிடப்படலாம்.

அதுவே கூகுளின் பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு இந்த மாத இறுதிக்குள் அப்டேட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை ஸ்டேபிள் வெர்ஷனின் வெளியீட்டிற்கு முன், ஆண்ட்ராய்டு 16 வெர்ஷனில் ஏதேனும் பிழைகளை நிவர்த்தி செய்ய வேண்டி இருந்தால், 2025 ஏப்ரல் மாதத்தில் கூகுள் நிறுவனம் மேலும் ஒரு பீட்டா அப்டேட்டை வெளியிடலாம்.

இந்த அப்டேட் மேம்படுத்தப்பட்ட ப்ளூடூத் ஆராகாஸ்ட் ஆதரவு (Enhanced Bluetooth Auracast support ) உடன் வருகிறது. இது ஆடியோ ஒளிபரப்புகளில் இணைவதற்கான தரப்படுத்தப்பட்ட க்யூஆர் கோட்களையும், காது கேட்கும் குறைபாடுகள் உள்ள பயனர்களுக்கான ஹியரிங் எய்ட்கள் உடனான இணக்கத்தன்மையையும் வழங்குகிறது

அதோடு இந்த அப்டேட் அவுட்லைன் டெக்ஸ்ட் ஆதரவையும் (Outline text support) அறிமுகப்படுத்துகிறது, இது பார்வை குறைபாடுகள் உள்ள பயனர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இந்த அப்டேட்டில் உள்ள மற்றொரு முக்கிய அம்சம் - லோக்கல் நெட்வொர்க் ப்ரொடெக்ஷன் (Local Network Protection) ஆகும். லோக்கல் நெட்வொர்க் ப்ரொடெக்ஷன் அம்சமானது, லோக்கல் நெட்வொர்க்கில் இருக்கும் போது, தங்கள் டிவைஸ்களை அணுகக்கூடிய ஆப்களின் மீது பயனர்களுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவிற்க்கு அதிக கட்டுப்பாட்டை வழங்குகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Announced Gemini Will Replace Google Assistant on Android phones later in 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X