Google சுந்தர் சாருக்கு ஒரு சல்யூட்.. Android 16 இல் பார்வை - கேட்கும் குறைபாடு உள்ளவர்களுக்கான அம்சங்கள்!
கூகுள் (Google) நிறுவனம் ஆண்ட்ராய்டு 16 பீட்டா 3 (Android 16 Beta 3) வெர்ஷனை வெளியிட்டுள்ளது. கூகுள் டைம்லைனின் படி, மற்ற ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கான ஸ்டேபிள் ஆண்ட்ராய்டு 16 வெர்ஷன் (Stable Android 16 Version) ஆனது 2025 மே அல்லது ஜூன் மாத தொடக்கத்தில் வெளியிடப்படலாம்.
அதுவே கூகுளின் பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு இந்த மாத இறுதிக்குள் அப்டேட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை ஸ்டேபிள் வெர்ஷனின் வெளியீட்டிற்கு முன், ஆண்ட்ராய்டு 16 வெர்ஷனில் ஏதேனும் பிழைகளை நிவர்த்தி செய்ய வேண்டி இருந்தால், 2025 ஏப்ரல் மாதத்தில் கூகுள் நிறுவனம் மேலும் ஒரு பீட்டா அப்டேட்டை வெளியிடலாம்.

ஆண்ட்ராய்டு 16 பீட்டா 3 வெர்ஷனில் கவனிக்க வேண்டிய அம்சங்கள் மற்றும் மேம்பாடுகள் என்னென்ன இந்த அப்டேட் மேம்படுத்தப்பட்ட ப்ளூடூத் ஆராகாஸ்ட் ஆதரவு (Enhanced Bluetooth Auracast support ) உடன் வருகிறது. இது ஆடியோ ஒளிபரப்புகளில் இணைவதற்கான தரப்படுத்தப்பட்ட க்யூஆர் கோட்களையும், காது கேட்கும் குறைபாடுகள் உள்ள பயனர்களுக்கான ஹியரிங் எய்ட்கள் உடனான இணக்கத்தன்மையையும் வழங்குகிறது
அதோடு இந்த அப்டேட் அவுட்லைன் டெக்ஸ்ட் ஆதரவையும் (Outline text support) அறிமுகப்படுத்துகிறது, இது பார்வை குறைபாடுகள் உள்ள பயனர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இந்த அப்டேட்டில் உள்ள மற்றொரு முக்கிய அம்சம் - லோக்கல் நெட்வொர்க் ப்ரொடெக்ஷன் (Local Network Protection) ஆகும்.
லோக்கல் நெட்வொர்க் ப்ரொடெக்ஷன் அம்சமானது, லோக்கல் நெட்வொர்க்கில் இருக்கும் போது, தங்கள் டிவைஸ்களை அணுகக்கூடிய ஆப்களின் மீது பயனர்களுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவிற்க்கு அதிக கட்டுப்பாட்டை வழங்குகிறது. இந்த அம்சம் எதிர்காலத்தில் ஒரு பெரிய ஆண்ட்ராய்டு வெளியீட்டின் ஒரு பகுதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கூகுள் கொண்டுவரும் முக்கியமான - சிஸ்டம் ப்ரைவஸி மற்றும் செக்யூரிட்டி அம்சமாக இருக்கும்.
கூகுளை போலவே சாம்சங் நிறுவனம் ஏற்கனவே அதன் ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான கஸ்டம் ஸ்கின் ஆன ஒன் யுஐ 8-ஐ உள்நாட்டில் சோதித்து வருகிறது. இருப்பினும் இதன் பப்ளிக் பீட்டா ரிலீஸ் கூடிய விரைவில் நடக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான ஒன் யுஐ 7 வெர்ஷனின் ஸ்டேபிள் ரிலீஸை முடித்த பிறகு, ஒன் யுஐ 7.1 ஐத் தவிர்த்து, சாம்சங் நிரூபணம் நேரடியாக ஒன் யுஐ 8.0 க்கு மாறக்கூடும்.
மற்ற ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களைப் பொறுத்தவரை, அவரவர்களின் ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான கஸ்டம் ஸ்கின் வெர்ஷன்களை பற்றிய தகவல்கள் குறைவாகவே உள்ளன. இப்போதைக்கு, ஆண்ட்ராய்டு 16 பீட்டா 3 உடன் கூகுள் நிறுவனத்தின் முன்னேற்றம் ஒரு நிலையான மற்றும் அம்சங்கள் நிறைந்த வெளியீட்டை நோக்கிய ஒரு நம்பிக்கைக்குரிய படியை குறிக்கிறது.
கூகுள் தொடர்பான மற்ற சமீபத்திய செய்திகளை பொறுத்தவரை பேட்டரி தீப்பிடிக்கும் அபாயம் உள்ளது என்று கூறி, கூகுள் நிறுவனமானது அதன் பழைய பிக்சல் ஸ்மார்ட்போன் மாடல் ஒன்றை ரீகால் (Recall) செய்ய தொடங்கி உள்ளது. கூடவே குறிப்பிட்ட பிக்சல் மாடலை கொண்டுள்ளவர்கள், அதற்கு கிடைக்கும் லேட்டஸ்ட் அப்டேட்டை இன்ஸ்டால் செய்ய வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்த மாடல் கடந்த 2020 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட - பிக்சல் 4ஏ (Pixel 4a) மாடலாகும். கூகுளின் இந்த சற்றே ஸ்மார்ட்போனுக்கு லேட்டஸ்ட் அப்டேட் ஒன்றின் காரணமாக ஆபத்து வந்துள்ளது. கடந்த ஜனவரி 2025 இல் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனிற்கு பேட்டரி பெர்பார்மென்ஸ் புரோகிராம் அப்டேட் (Battery Performance Program update) வெளியிடபட்டது.
இந்த சாப்ட்வேர் அப்டேட் ஆனது பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனில் ஒரு புதிய பேட்டரி மேலாண்மை அம்சத்தை கொடுக்கும்படி அமைக்கப்பட்டது. பழைய மாடலில் பேட்டரியின் செயல்திறனின் நிலைத்தன்மையை மேம்படுத்துவதே இதன் அப்டேட்டின் முக்கிய நோக்கமாக இருந்தது. இருப்பினும், பல பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களின் பேட்டரி லைஃப் சிதைந்து போனதாக புகார் அளித்ததால் இது எதிர் விளைவை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications








