இந்தியாவை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள்: அமெரிக்காவிற்கு கூகுள் கடிதம்- சுந்தர்பிச்சை பாராட்டு

|

இந்தியாவில் நடைபெற்று வரும் டிஜிட்டல் முறை பண பரிவர்த்தனைக்கு பல தரப்பினரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து ஆல்பாபெட் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவிக்கையில், இந்தியாவில் கூகுள் பே வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன என கூறினார். அதோடு மட்டுமின்றி கூகுள் பே விரைவில் புதுப்பிக்கப்பட்ட டிஜிட்டல் முறை செயலியாக உலகளவில் அறிமுகம் செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.

டிஜிட்டல் முறை பண பரிவர்த்தனை

டிஜிட்டல் முறை பண பரிவர்த்தனை

கடந்த 18 மாதங்களாக கூகுள் பண பரிவர்த்தனை தயாரிப்புகளில் ஏணைய முறைகளின் அப்டேட் கொண்டிருந்ததாக கூறிய அவர், இந்தியாவில் தான் வெற்றிகரமான தொடக்கத்தை தொடங்கியதாகவும் கூறினார். இந்தியாவில் அறிமுகம் செய்த செயலியின் மூலம் பல அம்சங்களைக் கற்றுக் கொண்டோம். 2018-19 ஆம் ஆண்டில் யுபிஐ வளர்ச்சி விகிதம் மேல்நோக்கி தொடர்ந்து உந்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது என கூறினார்.

அமெரிக்கா குறித்து கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை

அமெரிக்கா குறித்து கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை

அமெரிக்கா குறித்து கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை கூறுகையில், அமெரிக்கா மற்றும் கனடாவின் அரசு விவகாரத்துறை மற்றும் பொதுத்துறை கொள்கை பொருப்பாளரும், கூகுள் துணைத் தலைவருமான மார்க் இசகோவிட்ஸ் யூஎஸ் பெடரல் ரிசர்வ், இந்தியாவின் ஒருங்கிணைந்த பண பரிவர்த்தனை யுபிஐ போல் ஒரு கட்டமைப்பை உருவாக்குமாறு கேட்டுக் கொண்டார்.

ரூ.8,500 மட்டுமே: அட்டகாச Samsung Galaxy A01 - என்னென்ன சிறப்பம்சங்கள் தெரியுமா?ரூ.8,500 மட்டுமே: அட்டகாச Samsung Galaxy A01 - என்னென்ன சிறப்பம்சங்கள் தெரியுமா?

கூகுள் கற்றுக் கொண்ட கற்றல்கள்

கூகுள் கற்றுக் கொண்ட கற்றல்கள்

அதுமட்டுமின்றி யுபிஐ அமைப்பில் இருந்து கூகுள் கற்றுக் கொண்ட கற்றல்களையும் அமெரிக்காவுடன் பகிர்ந்து கொண்டார் கூகுள் துணைத் தலைவர்.

 கூகுள் தொடர்ந்து வெற்றிகரமான பங்கை அளிக்கிறது

கூகுள் தொடர்ந்து வெற்றிகரமான பங்கை அளிக்கிறது

இந்தியாவின் யுபிஐ பயன்பாட்டில் கூகுள் தொடர்ந்து வெற்றிகரமான பங்கை அளித்து வருகிறது. இந்தியாவில் பண பரிவர்த்தனையில் ஈடுபடும் மூன்று முன்னணி செயலிகளில் கூகுள் பே முக்கியத்துவம் வாய்ந்தவை என கூகுள் துணைத் தலைவர் அமெரிக்காவிற்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

செயலி மாதிரியை உருவாக்க வேண்டும்

செயலி மாதிரியை உருவாக்க வேண்டும்

அதோடு அமெரிக்க அரசு இதே போன்று பண பரிவர்த்தனை செயலி மாதிரியை உருவாக்க வேண்டும் என கூகுள் விரும்புவதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்தியாவின் டிஜிட்டல் கட்டண முறையை அமெரிக்கா பின்பற்ற வேண்டும் என்று கூகிள் நினைப்பதற்கான காரணங்கள் குறித்து பார்க்கலாம்.

என்.பி.சி.ஐ அமைத்த யுபிஐ கட்டமைப்பு

என்.பி.சி.ஐ அமைத்த யுபிஐ கட்டமைப்பு

கூகிளின் கூற்றுப்படி, 2016 ஆம் ஆண்டில் என்.பி.சி.ஐ அமைத்த யுபிஐ கட்டமைப்பு வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் அது முழு சிந்தனையுடன் திட்டமிடப்பட்டிருந்தது.

வெற்றிக்கு காரணம் அந்த அம்சங்களின் கட்டமைப்பு

வெற்றிக்கு காரணம் அந்த அம்சங்களின் கட்டமைப்பு

கூகிளின் தெரிவிப்புப்படி, யுபிஐ சிந்தனையுடன் திட்டமிடப்பட்டது மற்றும் அதன் முழு வெற்றிக்கு காரணம் அந்த அம்சங்களின் கட்டமைப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தின் அறிவிப்பு போல் ஆரம்பக்கட்டத்தில் யுபிஐ 9 உறுப்பு வங்கிகளுடனே தொடங்கியது ஆனால் தற்போது 140-க்கும் மேற்பட்ட உறுப்பு வங்கிகள் பங்கேற்றுள்ளன தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிப்படையான அமைப்பாக இருந்தது

வெளிப்படையான அமைப்பாக இருந்தது

அதேபோல் யுபிஐ அமைப்பு உண்மையான வெளிப்படையான அமைப்பாக இருந்தது. கூகுளின் கடிதமானது இந்தியாவின் யுபிஐ முழுமையாக பாராட்டும் விதமாக அமைந்துள்ளது. யுபிஐ தொழில்நுட்பமானது பயனர்கள் தங்களது வங்கிக் கணக்குகளுக்கு உள்ளேயும் வெளியேயும் நேரடியாக தங்களால் நிர்ணயிக்க முடியும் என கூறினார்.

BSNL-பதுங்கிய புலி பாய்ந்தது: ஜியோவை விட இரு மடங்கு நன்மை- குறைந்த விலையில் தினசரி 3ஜிபி டேட்டா!BSNL-பதுங்கிய புலி பாய்ந்தது: ஜியோவை விட இரு மடங்கு நன்மை- குறைந்த விலையில் தினசரி 3ஜிபி டேட்டா!

குறைந்த பணம் முதல் அதிக பணம் வரை பரிவர்த்தனை

குறைந்த பணம் முதல் அதிக பணம் வரை பரிவர்த்தனை

இந்தியாவின் யுபிஐ ஆனது குறைந்த பணம் முதல் அதிக பணம் வரை பரிவர்த்தனை அனுமதிக்கிறது. இதன் மூலமாகவே ஆரம்பத்தில் ஓன்பது வங்கிகளுடன் தொடங்கப்பட்ட யுபிஐ தற்போது 140-க்கும் மேற்பட்ட உறுப்பு வங்கிகளுடன் ஒரு இடைப்பட்ட பரிமாற்ற அமைப்பை வழங்குகிறது.

1.15 பில்லியனாக மாறியது

1.15 பில்லியனாக மாறியது

இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனையானது. முதன் நான்கு ஆண்டுகளில் 100,000 ஆக இருந்தது. ஆனால் குறுகிய காலத்தில் 77 மில்லியனில் இருந்து 480 மில்லியனாக மாறியது. அடுத்த சிறு காலத்திலேயே 480 மில்லியனில் இருந்து 1.15 பில்லியனாக மாறியது. இந்த டிஜிட்டல் பண பரிவர்த்தனை மிக வேகமாக வளர்ந்து வருகிறது.

உள்நாட்டு உற்பத்தியில் பெரும்பங்கு

உள்நாட்டு உற்பத்தியில் பெரும்பங்கு

அதேபோல் இந்திய யுபிஐ வழியாக வருடாந்திர பண பரிவர்த்தனையில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்று ஆண்டுகளில் சுமார் 19 சதவீதம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 800 மில்லியன் மாத பரிவர்த்தனை எனவும் அது சுமார் 19 பில்லியன் டாலர் மதிப்புடையவை எனவும் கூகுள் துணைத் தலைவர் மார்க் இசகோவிட்ஸ் கடிதத்தில் தெரிவித்துள்ளார். யுபிஐ மூலம் வருடாந்திர ரன் பரிவர்த்தனை விகிதம் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Google and Sundar Pichai think India is better than the US in digital payment

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X