Home
News

கூட்டு சேர்ந்த Google - Samsung நிறுவனம்.. Apple-க்கு 2026 இல் கும்மாங்குத்து!

கூகுள் மற்றும் சாம்சங் ஆகிய 2 நிறுவனங்களும் இணைந்து ஆண்ட்ராய்டு எக்ஸ்ஆர் ஸ்மார்ட் கிளாஸ்களை சந்தைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரியன் எகனாமிக் டெய்லியின் சமீபத்திய அறிக்கையின்படி, 2026 ஆம் ஆண்டு வாக்கில், கூகுள்-சாம்சங் கூட்டணியிலான ஆண்ட்ராய்டு எக்ஸ்ஆர் ஸ்மார்ட் கிளாஸ் வெளியீடு நடக்கும்

இது இவ்விரு நிறுவனங்களின் ஆக்மென்டட் மற்றும் எக்ஸ்டென்டட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தின் பரிணாம வளர்ச்சியில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. இது கூகுளின் மென்பொருளில் நிபுணத்துவத்தையும், வன்பொருளில் சாம்சங்கின் திறமையையும் ஒண்றிணைக்கும் என்பதால், ஆப்பிளின் விஷன் ப்ரோவிற்கு "ஆப்பு" கன்ஃபார்ம்!

கூட்டு சேர்ந்த Google - Samsung.. Apple-க்கு 2026 இல் கும்மாங்குத்து!

கூகுள் - சாம்சங் ஆண்ட்ராய்டு எக்ஸ்ஆர் கிளாஸ்களில் என்னென்ன அம்சங்கள் மற்றும் திறன்களை எதிர்பார்க்கலாம்? இந்த கிளாஸ்கள் மேம்பட்ட அம்சங்களை உள்ளடக்கியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் நேரடி மொழிபெயர்ப்பு அம்சம் இடம்பெறலாம். இது தடையற்ற தகவல்தொடர்புக்கான நிகழ்நேர மொழி மொழிபெயர்ப்பாய் வழங்கும்

மேலும் இது மெமரி ரீகால் அம்சத்தையும் கொண்டிருக்கலாம். இது பயனர்கள் சமீபத்திய விஷூவல் இன்புட்களை மீண்டும் பார்வையிட அனுமதிக்கும் ஒரு அம்சமாகும். கடைசியாக இது நேவிகேஷன் அம்சங்களை வழங்கலாம். இந்த அம்சங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை பயன்பாடுகளுக்காக இந்த கிளாஸ்களை ஒரு நடைமுறை கருவியாக நிலைநிறுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளன.

முந்தைய அறிக்கைகள் 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் சாத்தியமான கூகுள் - சாம்சங் ஆண்ட்ராய்டு எக்ஸ்ஆர் கிளாஸ் வெளியீட்டை பரிந்துரைத்திருந்தாலும், லேட்டஸ்ட் அப்டேட்கள், இது 2026 ஆம் ஆண்டில் தான அறிமுகம் செய்யப்படும் என்பதை குறிக்கின்றன. வியரபிள் தொழில்நுட்பத்தில் ஏற்கனவே இருக்கும் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, இந்த புதிய தயாரிப்பை உற்பத்தி செய்வதிலும், சந்தைப்படுத்துவதிலும் சாம்சங் திறமையாக செயல்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் ஆப்பிள் (Apple) நிறுவனம் அதன் ஆப்பிள் விஷன் ப்ரோ (Apple Vision Pro) ஹெட்செட்டிற்கான விஷன்ஓஎஸ் 2.4 அப்டேட்டை (visionOS 2.4 Update) வெளியிட்டதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இது ஒரு பெரிய அப்டேட் ஆக கருதப்படுகிறது. ஏனென்றால் இதன்கீழ் ஆப்பிள் நிறுவனம் எம்ஆர் ஹெட்செட்டுக்கான ஆப்பிள் இன்டலிஜென்ஸ் அம்சங்களின் முதல் தொகுப்பை அறிமுகப்படுத்துகிறது.

விஷன்ஓஎஸ் 2.4 அப்டேட் வழியாக ஆப்பிள் விஷன் ப்ரோவிற்கு கிடைத்துள்ள புதிய அம்சங்கள்: ரைட்டிங் டூல்கள் இப்போது ஆப்பிள் விஷன் ப்ரோவில் கிடைக்கின்றன. இது எழுத்துப்பிழை மற்றும் இலக்கண சரிபார்ப்புகளுடன் டாகுமெண்ட்களை எழுதுதல், ரீரைட் செய்தல் மற்றும் சரிபார்த்தல் ஆகியவற்றுக்கான விருப்பங்களை கொண்ட ஏஐ அம்சங்களை வழங்கும். மேலும் இதன் கீழ் டெக்ஸ்ட்-ஐ சுருக்கமாக எழுதலாம், பட்டியல்கள் மற்றும் அட்டவணைகளை உருவாக்கலாம் அல்லது டெக்ஸ்ட்-இல் இருந்து முக்கிய புள்ளிகளை முன்னிலைப்படுத்தலாம்.

மேலும் இந்த அப்டேட் இமேஜ் பிளேகிரவுண்ட்டையும் வழங்குகிறது, இது விளக்கமான ப்ராம்ப்ட்களின் அடிப்படையில் படங்களை உருவாக்க ஜெனரேட்டிவ் ஏஐ-ஐ பயன்படுத்தும் ஒரு தனித்த ஆப் ஆக செயல்படும். பயனர்கள் தங்கள் போட்டோஸ் ஆப்பில் இருந்து குறிப்பிட்ட நபரையும் தேர்ந்தெடுக்கலாம் மற்றும் வெவ்வேறு ஆர்ட் ஸ்டைல்களில் இருந்தும் தேர்வுகளை செய்யலாம்.

மேலும் ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் ஆனது இப்போது பயனர்கள் போட்டோஸ் ஆப்பில் சேமிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட படங்களை இயற்கையான மொழி வினவல்களுடன் தேட அனுமதிக்கிறது. மேலும், கிரியேட் ஏ மெமரி மூவீ என்கிற அம்சம் ஆனது, புகைப்படங்களிலிருந்து அடையாளம் காணப்பட்ட தீம்களின் அடிப்படையில் அத்தியாயங்களுடன் ஒரு கதைக்களத்தை வடிவமைக்கும், பயனர் உள்ளிடும் ப்ராம்ட்டை பொறுத்து அவற்றை ஒருதிரைப்படமாக ஒழுங்கமைக்கும்

விஷன்ஓஎஸ் 2.4 அப்டேட் ஆனது மெயிலில் ப்ரையாரிட்டிமெசேஜ்கள் செய்திகள், மெயில் சம்மரிஸ், நோட்களில் இமேஜ் வாண்ட், நோட்டிபிகேஷன் சென்டரில் ப்ரையாரிட்டி நோட்டிபிகேஷன் மற்றும் நோட்டிபிகேஷன் சம்மரிஸ் ஆதரவையும் கொண்டு வந்துள்ளது. கடைசியாக பயனர்களின் தனியுரிமையை பாதுகாக்க ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் ஆனது முடிந்தவரை ஆன்-டிவைஸ் ப்ராசஸிங்-ஐ பயன்படுத்துகிறது என்பதையும் ஆப்பிள் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது

More from GizBot

Best Mobiles in India

English summary
Google and Samsung collaborating to launch Android XR Smart Glasses in 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X