5 மில்லியன் டவுன்லோடுகளை கடந்த கூகுள் அல்லோ!

Written By:

கூகுள் நிறுவனத்தின் புதிய குறுந்தகவல் செயலியான அல்லோ, வாட்ஸ்ஆப் மற்றும் ஃபேஸ்புக் மெசன்ஜர் உள்ளிட்ட செயலிகளுக்கு கடுமையான போட்டியாக விளங்குகின்றது. கூகுள் பிளே ஸ்டோரில் இலவச ஆப் பட்டியலில் கூகுள் அல்லோ மிக விரைவில் முதலிடம் பிடித்திருக்கின்றது. கூகுள் பிளே ஸ்டோரில் 1 மில்லியன் டவுன்லோடுகளை கடந்து விட்ட நிலையில் மொத்த பட்டியலில் 8 ஆம் இடத்தில் இருக்கின்றது.

5 மில்லியன் டவுன்லோடுகளை கடந்த கூகுள் அல்லோ!

கூகுள் அல்லோ வெளியாகும் முன் வெளியிடப்பட்ட கூகுள் டூயோ செயலியை விட அல்லோ நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றது. இச்செயலியானது கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் கூகுள் தேடல் போன்ற ஆப்ஷன்களை வழங்குகின்றது.

கூகுளில் தேடுவதைப்போல் கூகுள் அல்லோவில் @google என டைப் செய்து பின் த‌ங்களது கேள்விகளை டைப் செய்தால், அதற்கான‌ பதில் அளிக்கப்படும். இதனால் சாட் செய்துகொண்டே கூகுள் தேடல்களையும் ஒரே திரையில் மேற்கொள்ள முடியும். அல்லோ பயன்பாட்டில், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மூலம் சக்தியூட்டப்பட்ட கூகுள் தேடல் (Google Search) அம்சமானது, கூகுளின் தகவல் களஞ்சியத்தைச் சார்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

5 மில்லியன் டவுன்லோடுகளை கடந்த கூகுள் அல்லோ!

முழுமையான என்க்ரிப்ஷன் சேவை, உடனுக்குடன் சாட்கள் அழுந்து போகும் அம்சங்களுடன் கூகுள் நிறுவனம் தனது இன்காக்நிட்டோ அம்சத்தையும் அல்லோ செயலியில் வழங்கியுள்ளது. பயனர்கள் நேரத்தைக் குறித்து வைத்து தங்களுது குறுந்தகவல்களை அனுப்பினால் குறிக்கப்பட்ட நேரத்தில் குறுந்தகவல்கள் தானாக அழிந்து போகும். குறைந்த பட்சம் 10 விநாடிகளில் இருந்து, 30 விநாடிகள், ஒரு நிமிடம், ஒரு மணி நேரம், ஒரு நாள் அல்லது அதற்கும் அதிகமான நேரத்தைக் குறிக்க முடியும்.English summary
Google Allo crosses 5 million downloads on Play Store Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot