சுந்தர் செய்த சம்பவம்.. நீ படிச்ச ஸ்கூல்ல நான் வாத்தியார் டா.. இந்தியாவில் ChatGPT கதை முடிஞ்சது.. ஏன்னா?
ஆன்லைன் சேர்ச் (Online Search) என்று வரும்போது பெரும்பாலான மக்களின் கைவிரல்கள் கூகுள் (Google) என்றே டைப் செய்கின்றன; கூகுளுக்குள் நுழைவதற்கான வழிகளையே தேடுகின்றன. அந்த அளவிற்கு.. சந்தேகத்திற்கு இடமின்றி.. பல ஆண்டுகளாக வெப் சேர்ச்சின் முடிசூடா மன்னனாக கூகுள் திகழ்கிறது.
சாட்ஜிபிடி (ChatGPT) என்கிற ஏஐ சாட்பாட்டின் (AI chatbot) திடீர் மற்றும் அபார வளர்ச்சியானது.. பெயர் அளவில் கூட கூகுள் சேர்ச்சின் போட்டியாளராக இல்லாத.. மைக்ரோஃசாப்ட் பிங் சேர்ச்சிற்கு அளவிட முடியாத புத்துணர்ச்சியை கொடுத்தது; எக்கச்சக்கமான புதிய பயனர்களையும் பெறவும் வழிவகுத்தது.

இருந்தாலும் கூட.. எப்படி பார்த்தாலும்.. "நீ படிச்ச ஸ்கூல்ல நான்வாத்தியார் டா" என்கிற வசனத்தை சொல்வதற்கான தகுதி கூகுளுக்கு மட்டுமே உள்ளது. அப்படியான ஒரு விஷயத்தை "நம்ம தலைவர்" சுந்தர் பிச்சை சைலன்ட் ஆக செய்துள்ளார். அது என்னது? அதனால் இந்தியர்களுக்கு என்ன பயன்? இதோ விவரங்கள்:
நினைவூட்டும் வண்ணம் கடந்த மே மாதத்தில் கூகுள் சேர்ச் ஒரு முழுமையான மாற்றத்தை பெற்றது. குறிப்பிட்ட மாதத்தில் நடைபெற்ற கூகுளின் வருடாந்திர நிகழ்வான கூகுள் ஐ/ஓ 2023-யின் போது ஏஐ (AI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஆர்டபிஷியல் இன்டெலிஜென்ஸ் உடன் இயங்கும் கூகுள் சேர்ச் அறிமுகம் செய்யப்பட்டது.
முன்னதாக இது அமெரிக்காவில் மட்டுமே அணுக கிடைத்தது. தற்போது இது இந்தியா மபுரோ ற்றும் ஜப்பானிலும் அணுக கிடைக்கும் என்று கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. ஏஐ கொண்டு இயங்கும் கூகுள் சேர்ச்சைபயன்படுவது எப்படி என்கிற படிப்படியான வழிமுறைகளை காணும் முன், கூகுள் சேர்ச்சிற்கு வந்துள்ள எஸ்ஜிஇ என்றால் என்ன? என்பதை பற்றி பார்த்துவிடலாம்.
எஸ்ஜிஇ (SGE) என்பது சேர்ச் ஜெனரேட்டிவ் எக்ஸ்பீரியன்ஸ் (Search Generative Experience) என்பதன் சுருக்கமாகும். எஸ்ஜிஇ என்பது ஜெனரேட்டிவ் ஏஐ-பவர்டு ரிசல்ட்களை (Generative AI-powered results) கூகுள் சேர்ச் எஞ்சின் கேள்வி-பதில் ரெஸ்பான்ஸ்களாக (Google search engine query responses) ஒருங்கிணைக்கும் சேர்ச் மற்றும் இன்டர்ஃபேஸ் திறன்களின் (Search and Interface Capabilities) தொகுப்பாகும்.
இன்னும் புரியும்படி சொல்லவேண்டும் என்றால்.. பொதுவாக, நீங்கள் கூகுள் வழியாக எதையாவது தேடும்போது, வலைப்பக்கங்களுக்கான இணைப்புகளின் பட்டியலை பார்ப்பீர்கள், மேலும் உங்களுக்கு தேவையான தகவலை தரும் பல்வேறு இணைப்புகளை அணுக வேண்டி இருக்கும். அப்படித்தானே?
ஆனால் எஸ்ஜிஇ-யின் கீழ், கூகுளே அனைத்து வேலைகளையும் செய்யும். சேர்ச் ரிசல்ட்களின் மேலே, உங்களுக்கு தேவையான விவரங்களை உள்ளடக்கிய ஏஐ-ஜெனரேடட் சம்மரி (AI-generated summary) ஒன்றை வழங்கும். இது தவிர, கூகுள் தனது உங்களது தேடலை காட்சி வடிவத்திலும் கொடுக்கும். அதாவது சேர்ச் ரிசல்ட்டில் பல புகைப்படங்களும் இருக்கும்.
அமெரிக்காவிற்கு வெளியே இந்த அம்சத்தை பெறவுள்ள முதல் நாடுகளில் - இந்தியாவும் ஜப்பானும் உள்ளது. குறிப்பாக, இந்தியாவிற்கென ஒரு சிறப்பு அம்சம் உள்ளதாகவும் கூகுள் குறிப்பிட்டுள்ளது. ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய இரண்டிற்கும் இடையே எளிதாக மாறுவதற்கு உதவும் வகையில் லேங்குவேஜ் டாகில் (Language Toggle) ஒன்று இடம்பெறுமாம்.
மேலும் இந்திய பயனர்களால் தங்களுக்கு கிடைக்கும் ரிசல்ட்களை கேட்கவும் முடியுமாம்; இது எஸ்ஜிஇ-யின் கீழ் கிடைக்கும் மிகவும் பிரபலமான விருப்பமாகும். ஒட்டுமொத்தமாக சாட்ஜிபிடி-ஐ அடிப்படையாக கொண்ட மைக்ரோசாப்ட்டின் ஏஐ பிங்கிற்கு கூகுள் சேர்ச் எஸ்ஜிஇ கடும் நெருக்கடியை கொடுக்கவுள்ளது.
கூகுள் சேர்ச்சிற்கு வந்துள்ள எஸ்ஜிஇ அம்சத்தை எவ்வாறு பயன்படுத்துவது? முதலில் கூகுள்.காமிற்கு (Google.com) செல்லவும். பின்னர் ஸ்க்ரீனின் மேல் வலதுபுறத்தில் உள்ள சேர்ச் லேப்ஸ் ஐகானை (Search Labs Icon) கண்டறிந்து, அதை கிளிக் செய்யவும். இப்போது எஸ்ஜிஇ ஜெனரேட்டிவ் ஏஐ இன் சேர்ச் (SGE generative AI in Search) பற்றி பேசும் பாப்அப் ஒன்றை காண்பீர்கள்.
இப்போது "வென் டர்ன்டு ஆன், எஸ்ஜிஇ மே அப்பியர் வென் யு சேர்ச்" (When turned on, SGE may appear when you search) என்கிற வரிக்கு அடுத்துள்ள டாகில் பட்டனை கிளிக் செய்யவும். அவ்வளவு தான். உங்கள் கூகுள் சேர்ச்சில் எஸ்ஜிஇ இயக்கப்பட்டு இருக்கும். இனிமேல் நீங்கள் தேடும் விஷயங்களை பற்றிய விவரங்கள் / தரவுகள் "முக்கிய புள்ளிகள்" வடிவத்தில் உங்களுக்கு அணுக கிடைக்கும். உடனே முயற்சி செய்து பாருங்கள்!


Click it and Unblock the Notifications








