சூப்பருங்க.. ரூ.401-க்கு Google-இன் புது திட்டம்.. 200GB ஸ்டோரேஜ்.. Veo 3 Fast வீடியோ.. ஜெமினி 2.5 Pro வருது!
கூகுள் நிறுவனத்தின் ஏஐ பிளஸ் (AI Plus) சந்தா அடிமட்ட விலைக்கு களமிறங்கி இருக்கிறது. மாதத்துக்கு ரூ.401 செலவில் 200 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ், வியோ 3 ஃபாஸ்ட் வீடியோ ஜெனரேட், ஜெமினி 2.5 ப்ரோ ஏஐ மாடல் கொடுக்கிறது. ஆனால், இந்தியாவில் கிடைக்கவில்லை. பின்வரும் நாட்டில் மட்டுமே முதலில் அறிமுகமாகி இருக்கிறது. இந்த கூகுள் ஏஐ பிளஸ் சந்தாவின் முழு சலுகை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் கூகுள் ஏஐ ப்ரோ (Google AI Pro) மற்றும் கூகுள் ஏஐ அல்ட்ரா (Google AI Ultra) ஆகிய திட்டங்கள் கிடைக்கின்றன. இதுபோக இலவச திட்டமும் கிடைக்கிறது. ஆனால், இந்தோனிசியாவில் கூகுள் ஏஐ பிளஸ் (Google AI Plus) திட்டம் அறிமுகமாகி இருக்கிறது. மாதத்துக்கு 75,000 இந்தோனேஷியன் ருபியாவாக (இந்திய மதிப்பில் ரூ.401) விலை இருக்கிறது.

இருப்பினும், 6 மாதத்துக்கு இந்த சந்தாவை பெறும் கஸ்டமர்களுக்கு 50 சதவீத தள்ளுபடியில் கிடைக்கிறது. கல்லூரி மாணவர்கள், கிரியேட்டர்களுக்கு ஏற்ற மலிவு விலை திட்டமாக இருக்கிறது. ஆகவே, இந்தியா உள்பட மற்ற நாடுகளிலும் எதிர்பார்க்கலாம். இந்த விலைக்கு என்னென்ன சலுகைகளை எதிர்பார்க்க முடியும் என்பதை பார்க்கலாம்.
கூகுள் ஏஐ பிளஸ் சந்தா
இந்த சந்தாவை பெறும் கஸ்டமர்களுக்கு ஜெமினி ஆப் (Gemini App) பயன்படுத்த கிடைக்கிறது. இதை ஜிமெயில் (Gmail), டாக்ஸ் (Docs), சிலைட்ஸ் (Slides) உள்ளிட்ட கூகுள் ஆப்களின் அனுகி கொள்ளலாம். மேலும், நோட்புக் எல்எம் (NotebookLM) மற்றும் ப்ளோவ் (Flow) கிடைக்கிறது. மேலும், ஜெமினி 2.5 ப்ரோ (Gemini 2.5 Pro) மாடலை பயன்படுத்தி கொள்ளலாம்.
200 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கிறது. அதேபோல மாதத்துக்கு 200 ஏஐ கிரெடிட்களை பெற்று கொள்ளலாம். ப்ளோவ் ஆப் மூலம் டெக்ஸ்ட் டூ வீடியோ (Text to video), இன்கிரிடியன்ட்ஸ் டூ வீடியோ (Ingredients to video) மற்றும் ஃபிரேம்ஸ் டூ வீடியோ (Frames to video) ஜெனரேட் செய்து கொள்ளலாம். இது ஃபிலிம்மேக்கர்களுக்கு பக்காவான அவுட்புட் கொடுக்கும்.
ஆனால், 5 ஜெனரேஷன்களுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்படுகிறது. இதில் ஆங்கிலத்தில் மட்டுமே ப்ராம்ப்ட் செய்து கொள்ள முடியும். மற்ற மொழிகளில் கிடைக்கவில்லை. கூகுள் குரோம் ஆப் மூலம் ஏஐ மோட் (AI Mode) பயன்படுத்தி கொள்ளலாம். நோட்புக்எல்எம் மூலம் ஆடியோ ஓவர்வியூகள் மற்றும் நோட்புக் அவுட்புட் எடுக்கலாம்.
ஆகவே, ரிசர்ச் மற்றும் ரைட்டிங் அசிஸ்டன்ட்டாக பயன்படுத்தி கொள்ளலாம். இதுபோக டீப் ரிசர்ச் (Deep Research) செய்து கொள்ள முடியும். ஜெமினி ஆப் மூலம் கோடிங், லாஜிகல் ரீசனிங் உள்ளிட்டவை செய்து கொள்ள முடியும். இப்போது, இந்தியாவில் கிடைக்கும் கூகுள் ஏஐ ப்ரோ மற்றும் கூகுள் ஏஐ அல்ட்ரா ஆகிய திட்டங்களின் சலுகையை பார்க்கலாம்.
கூகுள் ஏஐ ப்ரோ சந்தா
2 டிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கிறது. ஜெமினி 2.5 ப்ரோ மற்றும் டீப் ரிசர்ச்சிலும் 2.5 ப்ரோ மாடல் கிடைக்கிறது. வியோ 3 மூலம் வீடியோ ஜெனரேட் செய்யலாம். விஸ்க் மூலம் இமேஜ் டூ வீடியோ கிடைக்கிறது. மாதத்துக்கு 1000 ஏஐ கிரெடிட்கள் கிடைக்கிறது. நோட்புக்எல்எம், கூகுள் ஆப்ஸ் ஜெமினி இன்டிகிரேஷன் வருகிறது. மாதம் ரூ.1,950ஆக விலை உள்ளது.
கூகுள் ஏஐ அல்ட்ரா சந்தா
30 டிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கிறது. ஜெமினி 2.5 டீப் திங்க் (Gemini 2.5 Deep Think) வருகிறது. வியோ 3 வீடியோ ஜெனரேஷன் வருகிறது. மாதத்துக்கு 25,000 ஏஐ கிரெடிட்கள் கிடைக்கின்றன. யூடியூப் பிரீமியம் திட்டம் கிடைக்கிறது. இந்த பிரீமியம் திட்டத்தின் விலை ரூ.24,500ஆக இருக்கிறது. முதல் 3 மாதங்களுக்கு ரூ.12,200 விலைக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








