Home
News

Google Pay இருக்கா.. ரூ.199 கொடுங்க.. 6 மாசத்துக்கு அப்புறம், ரூ.399 கொடுங்க.. புதிய திட்டத்தை இறக்கிய Google!

கூகுள் நிறுவனம் மாதத்துக்கு ரூ.399 விலை கொண்ட கூகுள் ஏஐ பிளஸ் (Google AI Plus) திட்டத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. முதல் 6 மாதங்களுக்கு ரூ.199 செலுத்தினால் போதும், இந்த திட்டத்தின் சலுகைகளை பயன்படுத்தி கொள்ள முடியும். கூகுள் பே (Google Pay) வழியாக ஆட்டோபே மேன்டேட் செய்து கொள்ளலாம். இந்த புதிய திட்டத்தின் விவரங்களை பார்க்கலாம்.

கூகுள் ஏஐ ப்ரோ (Google AI Pro) திட்டத்தை ஏற்கனவே இந்தியாவில் கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது. சில நாடுகளில் மட்டும் கூகுள் ஏஐ பிளஸ் திட்டத்தை கொடுத்தது. இந்த ஏஐ பிளஸ் திட்டம் மலிவாக இருந்ததால், இந்தியாவில் இருக்கும் கூகுள் பிரியர்கள் இங்கு எப்போது அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்த்து கொண்டிருந்தனர். இவர்களுக்கு ஆஃபருடன் இப்போது வந்துள்ளது.

Google Pay இருக்கா.. ரூ.199 கொடுங்க.. 6 மாசத்துக்கு அப்புறம், ரூ.399!

இந்த கூகுள் ஏஐ பிளஸ் திட்டத்தின் விலை மாதத்துக்கு ரூ.399ஆக இருக்கிறது. இது கூகுள் ஏஐ ப்ரோ திட்டத்தைவிட மிகவும் மலிவாக இருக்கிறது. இதுபோக அறிமுக சலுகையாக முதல் 6 மாதங்களுக்கு இந்த திட்டத்தை வெறும் ரூ.199 விலைக்கு பெற்று கொள்ளலாம். அதன்பிறகு வழக்கமாக ரூ.399 செலுத்தி பயன்படுத்தி கொள்ளலாம் அல்லது 6 மாதங்களுக்கு பிறகு கேன்சல் செய்து கொள்ளலாம்.

கூகுள் ஏஐ பிளஸ் விவரங்கள் (Google AI Plus Details)
1. ஜெமினி (Gemini) ஆப் பயன்படுத்த கிடைக்கிறது. இதில் ஜெமினி 3 ப்ரோ (Gemini 3 Pro) மாடலை பயன்படுத்தி கொள்ளலாம். நானோ பனானா ப்ரோ (Nano Banana Pro) இமேஜ் ஜெனரேஷன் கிடைக்கிறது. மேலும், டீப் ரிசர்ச் (Deep Research) கிடைக்கிறது. வியோ 3.1 பாஸ்ட் (Veo 3.1 Fast) வீடியோ ஜெனரேஷன் கொடுக்கிறது.

2. ஏஐ ஃபிலிம் மேக்கிங்குக்கு கிடைக்கும் ப்ளோவ் (Flow) இந்த திட்டத்தில் கிடைக்கிறது. சினிமாடிக் சீன்கள் மற்றும் கதைகளை இதில் ஜெனரேட் செய்து கொள்ளலாம். ஆனால், லிமிடெட் அக்சஸ் மட்டுமே கிடைக்கும். வியோ 3.1 (Veo 3.1) வழியாக மட்டுமே ஜெனரேஷன் செய்து கொள்ள முடியும். இமேஜ் டூ வீடியோ கிரியேஷனுக்காக விஸ்க் (Whisk) அணுக கிடைக்கிறது.

3. 200 மாதாந்திர கிரெடிட்கள் மட்டுமே கொடுக்கப்படும். இந்த கிரெடிட்களுக்குள் மட்டுமே ப்ளோவ் மற்றும் விஸ்க் ஆகியவற்றில் வீடியோக்களை ஜெனரேட் செய்து கொள்ள முடியும். நோட்புக்எல்எம் (NotebookLM) இதில் கிடைக்கிறது. ரிசர்ச் மற்றும் ரைட்டிங் அசிஸ்டன்ஸ் ஆகியவற்றை இதில் செய்து கொள்ளலாம்.

4. ஜிமெயில் (Gmail), டாக்ஸ் (Docs) உள்ளிட்ட கூகுள் ஆப்களின் ஜெமினி அசிஸ்டன்ட்டை பயன்படுத்தி கொள்ளலாம். 200 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோர்ஜ் கிடைக்கிறது. இதை போட்டோஸ், டிரைவ் மற்றும் ஜிமெயிலில் பயன்படுத்தி கொள்ள முடியும். இதைவிட கூடுதல் அணுகல்கள் வேண்டுமானால், கூகுள் ஏஐ ப்ரோ திட்டத்துக்கு பயனர்கள் சென்று கொள்ளலாம்.

கூகுள் ஏஐ ப்ரோ விவரங்கள் (Google AI Pro Details)
1. இந்த திட்டத்தில் ஜெமினி 3 ப்ரோ மாடல் கிடைக்கிறது. நானோ பனானா ப்ரோ, பிளஸ் கிடைக்கிறது. வியோ 3.1 ஃபாஸ்ட் கிடைக்கிறது. வியோ 3.1 கொண்ட ப்ளோவ் வீடியோ ஜெனரேஷன் கிடைக்கிறது. அதேபோல வியோ 3 கொண்ட விஸ்க் ஜெனரேஷன் கிடைக்கிறது. இதற்கு 1000 மாதாந்திர கிரெடிட்கள் கிடைக்கின்றன.

2. நோட்புக்எல்எம் உள்ளது. இதில் 5X ஆடியோ ஓவப்வியூ கிடைக்கும். கூகுள் சர்சில் ஜெமினி 3 ப்ரோ இன்டிகிரேஷன் கிடைக்கும். ஜூல்ஸ் கோடிங் ஏஜென்ட் பயன்படுத்த கிடைக்கும். இதுபோ ஜெமினி கோட் அசிஸ்டன்ட் மற்றும் ஜெமினி சிஎல்ஐ கிடைக்கிறது. மேலும், கூகுள் ஆன்டிகிராவிட்டி மற்றும் கூகுள் ஆப்களில் ஜெமினி இன்டிகிரேஷன் உள்ளது.

மேலும், 2 டிபிக்கு கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கும். இதன் விலை மாதத்துக்கு ரூ.1950ஆக இருக்கிறது. இந்த திட்டங்களை கூகுள் பே மூலமாக ஆட்டோபேவில் பணம் எடுத்துக்கொள்ளும்படி பெற்று கொள்ளலாம். மாதம் மாதம் ஆட்டோபேவில் பணம் செலுத்தப்படும். இதை எப்போது வேண்டுமானாலும் கஸ்டமர்கள் கேன்சல் செய்து கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google AI Plus Plan Launched in India At Rs 399 Per Month First Six Months Only Rs 199 Per Month
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X