Home
News

Google-இல் அடிக்கடி தேடுவீங்களா.. இந்தியர்களுக்கு வந்தது AI Mode.. இனிமே நீங்க தேடுவது அப்படியே மாறப் போகுது!

கூகுள் (Google) நிறுவனமானது, இந்தியாவில் ஏஐ மோட் (AI Mode) என்னும் புதிய சர்ச் முறையை களமிறக்கி இருக்கிறது. இது வழக்கமாக நாம் பயன்படுத்தும் சர்ச் போல் அல்லாமல், அட்வான்ஸ்டு மற்றும் உரையாடல்களை போல பதில்களை கொடுக்கிறது. ஒரே நேரத்தில் பல்வேறு கேள்விகளுக்கும் பதிலக்கும்படி உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், இப்போதைக்கு ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்க இருக்கிறது. இந்த கூகுள் ஏஐ மோட் (Google AI Mode) மூலம் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்தியா மட்டுமல்லாமல், உலகளவில் கூகுள் சர்ச் (Google Search) மற்ற சர்ச் என்ஜின்களை ஓரம்கட்டி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதனால், அதில் கொண்டுவரப்படும் அப்டேட்களும் மற்ற நிறுவனங்களைவிட கூடுதல் பீச்சர்கள், மேம்பட்ட யூசர் எக்ஸ்பீரியன்சை கொடுக்கிறது. இப்போது, கூகுள் ஏஐ மோட் அப்டேட்டை கொண்டுவந்திருக்கிறது.

Google-இல் அடிக்கடி தேடுவீங்களா.. இந்தியர்களுக்கு வந்தது AI Mode!

இது முதலில் அமெரிக்காவில் களமிறக்கப்பட்டது. இப்போது, ஆங்கில மொழியில் மட்டும் பயன்படுத்தும்படி இந்தியாவிலும் பைலட் முறையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது கூகுள் சர்ச்சில் வழக்கமாக கிடைக்கும் லிங்குகள், ஏற்கனவே தேடப்பட்ட கி-வேர்ட்கள் போன்றவற்றை கொடுப்பதை தவிர்த்து, இதுவே ஒரு பதிலை தயார் செய்து யூசர்களுக்கு கொடுக்கிறது.

கூகுள் ஏஐ மோட் எப்படி வேலை செய்கிறது?
இது கிட்டத்தட்ட ஏஐ சாட்பாட் போலவே வேலை செய்கிறது. அதாவது, ஜெமினி 2.5 கஸ்டமர் வெர்ஷன் (Gemini 2.5 Custom Version) மூலம் இதற்கான பதில்கள் கொடுக்கப்படுகின்றன. ஆனால், இதற்காக ஜெமினி ஆப்-ஐ ஓப்பன் செய்ய வேண்டியது கிடையாது. நேரடியாக கூகுள் சர்ச் அல்லது கூகுள் குரோம் (Google Chrome) மூலம் பயன்படுத்தி கொள்ளலாம். ஆகவே, அப்டேட் செய்ய வேண்டும்.

அதாவது, கூகுள் பிளே ஸ்டோருக்கு (Google Play Store) சென்று கூகுள் மற்றும் கூகுள் குரோம் ஆகிய ஆப்களை அப்டேட் செய்து கொள்ளுங்கள். இப்போது, ஏதாவது ஒரு ஆப்-ஐ ஓப்பன் செய்தால், சர்ச் பாருக்கு கீழே வழக்கமாக இருக்கும் ஆல் (All), நியூஸ் (News), இமேஜஸ் (Images), வீடியோஸ் (Videos), ஷாப்பிங் (Shopping) போன்ற டேப்களுக்கு முன்னதாக ஏஐ மோட் இடம்பெற்றிருக்கும்.

Google-இல் அடிக்கடி தேடுவீங்களா.. இந்தியர்களுக்கு வந்தது AI Mode!

அதை கிளிக் செய்தால், உங்களுக்கு ஏஐ சாட்பாட்களை போன்று கீழே சர்ச் பார் தோன்றும். அதேபோல மேற்கண்ட ஆல், நியூஸ், இமேஜஸ், வீடியோஸ் போன்ற டேப்களும் இடம்பெற்றிருக்கும். இப்போது, இதில் நீங்கள் வழக்கமாக ஏஐ சாட்பாட்களிடம் கேட்கும் கேள்விகளை கேட்கலாம். ஆனால், வெறும் லிங்குகள் மட்டும் இடம்பெறாமல், கூடுதலாக பதில்கள் கொடுக்கப்படும்.

அதாவது, நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு அந்த ஏஐ மோட் மூலம் ஒரு பதில் உருவாக்கப்பட்டு கொடுக்கப்படும். ஆகவே, இது சாட்பாடில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கிடைக்கும் பதில்களை போலவே இருக்கும். இது உரையாடலை போலவே உங்களுக்கு கிடைக்கிறது. அதுவும், பல்வேறு லிங்குகளை ஆராய்ந்து அதுவாகவே பதிலை தயார் செய்கிறது.

இதன் மூலம் நீங்கள் பல்வேறு லிங்குகளை ஓப்பன் செய்து அதை படித்து தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் குறைகிறது. கிட்டத்தட்ட நீங்கள் செய்ய வேண்டிய வேலையை இந்த ஏஐ மோட் செய்து முடிக்கிறது. இதில் ஒரே நேரத்தில் பல்வேறு கேள்விகளை கேட்டாலும், அதற்கு ஏற்ப பதில்களை அடுக்கி கொடுக்கிறது. டெக்ஸ்ட் மட்டுமல்லாமல், கூடுதல் ஆப்ஷன்களை கொடுக்கிறது.

கூகுள் ஏஐ மோட்: வாய்ஸ் மற்றும் போட்டோ:
வெறும் டைப்பிங் மூலம் மட்டுமே கேள்விகளை கேட்க அனுமதி கொடுக்கவில்லை. கூடுதலாக வாய்ஸ் மற்றும் போட்டோக்கள் மூலமும் யூசர்கள் கேள்விகளை கேட்டு கொள்ளலாம். இதற்காக கூகுள் லென்ஸ் (Google Lens) மற்றும் மைக்ரோபோன் இன்டிகிரேஷன் கிடைக்கிறது. ஆகவே, ஜெமினி, மெட்டா, சாட்ஜிபிடி போன்றவற்றில் கிடைக்கும் சில பதில்கள் இதிலும் கிடைக்கப் போகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google AI Mode in India Get More Advanced With Smarter Conversational Search
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X