Home
News

2025: இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.. Google பணியாளர்களுக்கு சுந்தர் பிச்சை கூறியது இதுதான்..

கூகுள் (Google) நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு தொழில்நுட்பங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. இந்நிலையில் 2025-ம் ஆண்டு செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என பணியாளர்களிடம் கூகுள் நிறுவனத்தின் சிஇஒ சுந்தர் பிச்சை (Sundar Pichai) கூறியுள்ளார்.

அதாவது நடப்பாண்டில் கூகுள் நிறுவனத்தின் செயல்பாட்டு வியூகம் குறித்தான ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் சுந்தர் பிச்சை தலைமையில் கலிபோர்னியாவில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அவர் கூறியது என்னவென்றால், இந்த தருணத்தின் அவசரத்தை உணர்ந்து அனைத்தையும் உள்வாங்கி நிறுவனத்தை வேகமாக நடத்திச் செல்ல வேண்டியது பணியாளர்களின் கடமை. அனைவருக்கும் நிறுவனத்தின் வளர்ச்சியில் அதிக பங்கு உள்ளது.

2025 Google: இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்..

குறிப்பாக 2025-ல் ஏஐ (AI) தொழில்நுட்பத்தின் நன்மைகளைக் கண்டறிந்து வெளிப்படுத்துவதிலும், பயனர் சிக்கல்களைத் தீர்ப்பதிலும் நாம் இடைவிடாமல் கவனம் செலுத்த வேண்டும். ஜெமினி (Gemini) ஆப் மூலமாக ஏஐ தொழில்நுட்ப பயன்பாட்டை துரிதமான முறையில் பரவலாக்க வேண்டும் என்பதே இந்த புதிய ஆண்டில் கூகுள் நிறுவனத்தின் முதன்மையான இலக்கு.

அதேபோல் கடந்த சில மாதங்களாகப் பயனர்களிடையே ஜெமினி ஆப்-க்கு அதிக வரவேற்பு உள்ளது. இருப்பினும் 2025-ல் இடைவெளியை சரி செய்வதற்கும், முதலிடத்தைத் தக்க வைப்பதற்கும் சில வேலைகளை நாம் செய்து முடிப்பதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.

மேலும் ஜெமினியை 500 மில்லியன் பயனர்கள் கொண்ட நுகர்வோர் தளமாக மாற்றுவது கூகுளின் மிக லட்சிய இலக்குகளில் ஒன்று. அதுவும் வரலாற்றில் எப்போதும் முதல் இடத்தில் இருக்க வேண்டியது அவசியமில்லை. ஆனாலும் நீங்கள் நன்றாக செயல்பட்டு முதல் தரமான பொருளை உருவாக்க வேண்டும். அது 2025-ல் நிறைவேறும் என்று நம்புகிறேன் என சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு சுந்தர் பிச்சை The David Rubenstein Show: Peer to Peer Conversations-இன் நேர்காணலில் தன்னுடைய நிறுவனத்தின் தனிப்பட்ட பணியிட கலாச்சாரம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டர்.

அதில் ஊழியர்களுக்கு இலவச உணவை வழங்கும் கூகுளின் வழக்கம் இந்த உரையாடலின் மிக முக்கியமான சிறப்பம்சங்களில் ஒன்றாகும். அதாவது சுந்தர் பிச்சை கூறியது என்னவென்றால், ஊழியர்களுக்கு இலவச உணவு வழங்குவது ஒரு பெரிய செலவாக இருக்காது எனவும் மாறாக அது நிறுவனத்திற்குப் பல நன்மைகளைத் தருகிறது என்று கூறியுள்ளார்.

2025 Google: இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்..

அதாவது இலவச உணவு ஊழியர்களின் படைப்பாற்றலை அதிகரிப்பதோடு, அவர்கள் ஒருவரையொருவர் இணைக்கும் வாய்ப்பையும் வழங்குகிறது. பின்பு கஃபேவில் அலுவலக நண்பர்களுடன் அரட்டை அடிப்பதன் மூலம் புதிய யோசனைகள் வருகின்றன என்றும் கூறினார். குறிப்பாக இந்த யோசனைகள் நிறுவனத்திற்குப் பல நன்மை கொடுக்கும் என்று கூறியுள்ளார்.

தற்போது கூகுள் நிறுவனம் உலகின் இணையதள சேவை மற்றும் செல்போன் செயலிகள் வணிகத்தில் முன்னிலை வகிக்கிறது. எனவே தான் இந்த கூகுள் நிறுவனத்தில் பணிக்குச் சேர்வது என்பது தற்போது பலரின் லட்சியமாக உள்ளது என்றே கூறலாம்.

Best Mobiles in India

English summary
Google AI Initiative Gemini Targets 500 Million Users: Sundar Pichai Gives Key Message to Employees
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X