Google AI Edge Gallery: இன்டர்நெட் இல்லா AI மாடல்.. ஆஃப்லைன் உலகில் புது அத்தியாயம்.. இது ஆரம்பம் மட்டுமே!
21ஆம் நூற்றாண்டின் மனித வாழ்க்கையை 2ஆக பிரித்துவிடலாம். ஒன்று ஆன்லைன் வாழ்க்கை, மற்றொன்று ஆஃப்லைன் வாழ்க்கை. இதில் பலரது வாழ்க்கை ஆன்லைனுக்கும் ஆஃப்லைனுக்கும் சம்பந்தமே இல்லை என்று சொல்லும்படி இருக்கலாம். இது தனிப்பட்ட விஷயமாக இருந்தாலும், இதை பிரிப்பது இன்டர்நெட் என்பதை மறந்துவிடக்கூடாது. ஒருவரது எண்ணங்களுக்கு தீனி போடுவதில் இன்டர்நெட்டை அடித்து கொள்ள முடியாது. இப்படிப்பட்ட இன்டர்நெட் மூலமே, ஏஐ மாடல்கள் எந்தவொரு தொழில்நுட்பமும் எட்டாத இடத்துக்கு சென்றுள்ளது.
ஆனால், இதே ஏஐ மாடல்கள் ஆஃப்லைனிலும் அணுக கிடைத்தால், அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை யூகிப்பது சற்று சிரமமாக இருக்கலாம். இருப்பினும், கூகுள் ஏஐ எட்ஜ் கேலரி (Google AI Edge Gallery) வருகைக்கு பிறகு அதை மூலம் கொஞ்சம் புரிந்து கொள்ள முடிகிறது. கூகுள் நிறுவனத்தின் இந்த ஏஐ எட்ஜ் கேலரி ஆப் ஆனது சோதனை அடிப்படையில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

கிட்ஹப் (GitHub) மூலம் டவுன்லோட் செய்யவும் கிடைக்கிறது. இதை ஆண்ட்ராய்டு யூசர்கள் மட்டுமே பயன்படுத்த முடிகிறது. ஐஓஎஸ் யூசர்களுக்கு விரைவில் கிடைக்க இருக்கிறது. இதுவொரு ஜெனரேட்டிவ் ஏஐ மாடலாக (Generative AI Model) இருந்தாலும், இன்டர்நெட் இல்லாமலேயே ஆஃப்லைனில் பயன்படுத்த கிடைப்பதால், ஏஐ உலகில் தனி கவனம் பெற்றுள்ளது.
ஏனென்றால், சாட்ஜிபிடி (ChatGPT) வருகைக்கு பிறகு ஜெமினி (Gemini), கோபைலட் (Copilot), டீப்சீக் (DeepSeek) போன்ற ஏஐ மாடல்கள் அடுத்தடுத்து களமிறங்கின. இது கிட்டத்தட்ட போட்டியாகவே மாறிவிட்டது. சொல்லப்போனால், சீனாவின் டீப்சீக் வருகையால், அமெரிக்காவில் பங்கு சந்தை சரிவு ஏற்பட்டதை மறுக்க முடியாது. இப்படி ஏஐ போட்டியை உருவாக்கி வருகிறது.
இதே போட்டி ஆஃப்லைன் ஏஐ மாடல்களுக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கு காரணம், ஆஃப்லைன் ஏஐ மாடல்கள், ஆன்லைன் ஏஐ மாடல்களைவிட பாதுகாப்பானதாகவும், நம்பகத்தன்மையாகவும் இருக்க போகின்றன. உங்களது ஸ்மார்ட்போன், டேப்லெட், லேப்டாப் ஆகியவற்றின் டிவைஸ்களுக்குள்ளேயே ஜெனரேட்டிவ் ஏஐ அவுட்புட்களை பெற்று கொள்ள முடியும்.

கூகுள் ஏஐ எட்ஜ் கேலரி எப்படி வேலை செய்கிறது? இன்டர்நெட் அல்லது வை-பை போன்ற எந்தவித கனெக்டிவிட்டியும் இல்லாமலேயே ஆஃப்லைன் மூலம் இது வேலை செய்கிறது. ஆஸ்க் இமேஜ் (Ask Image), ப்ராம்ப் லேப் (Prompt Lab), ஏஐ சாட் (AI Chat) ஆகிய பீச்சர்கள் முதன்மையாக இருக்கின்றன. இதில் ஆஸ்க் இமேஜ் மூலம் ஒரு போட்டோவை அப்லோட் செய்து, அது தொடர்பான கேள்விகளை கேட்கலாம்.
ஆப்ஜெக்ட்களை அறிந்து கொள்ளுதல், அதை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளுதல் போன்றவற்றை செய்யலாம். லாங் லேங்குவேஜ் மாடல் (Large Language Models) மூலம் ப்ராம்ப் லேப் பயன்படுத்த கிடைக்கிறது. இதன் மூலம் டெக்ஸ்ட் சம்மரைஸ், ரீரைட்டிங், கோட் ஜெனரேட்டிங் , அல்லது ஃப்ரீஃபார்ம் ப்ராம்ட்களை கேட்கலாம். ஏஐ சாட் மூலம் உரையாடலாம்.
இதுகிட்டத்தட்ட ஆரம்ப காலத்தில் இன்டர்நெட்டுடன் கிடைத்த ஏஐ மாடல்களை போலவே இருக்கிறது. அதே நேரத்தில் அதைவிட வேகமாகவும் இருக்கிறது. ஏனென்றால், இன்டர்நெட் தேவைப்படும் ஏஐ மாடல்களில் கிளவுட்டில் டேட்டா ஷேர் செய்யப்பட்டு உங்களுக்கான பதில்கள் மற்றும் அவுட்புட் கிடைக்கும். ஆனால், ஆஃப்லைனில் இது கிடையாது, வேகமாக இருக்கும்.
ஆஃப்லைன் ஏஐ மாடல்களின் எதிர்காலம் எப்படி? இது வரும் காலங்களில் தவிர்க்க முடியாத மாடல்களாக உருவாகும் என்பதில் சந்தேகமில்லை. ஏனென்றால், இது ஆஃப்லைனில் கிடைக்க இருப்பதால், செக்யூரிட்டி அதிகமாக இருக்கும், பர்ஃபாமென்ஸ் வேகமாக இருக்கும், தனிப்பட்ட டேட்டாக்களில் கசிவு இருக்காது, கஸ்டமைசேஷன் ஆப்ஷன்கள் ஏராளமாக இருக்கும்.
ஆஃப்லைன் ஏஐ மாடல்களால் என்ன மாறும்? இந்த மாடல்களால் ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் லெவலில் மாற்றங்கள் ஏற்படும். ஏனென்றால், ஆன்-டிவைஸ் இன்ஃபெரன்ஸ் (on-device inference) தேவைப்படுவதால், அதற்கு ஏற்ப நியூரல் ப்ராசசிங் யூனிட்கள் மற்றும் ஏஐ அக்சிலரேட்டர்களில் அப்கிரேட்கள் இருக்கும். ஆனால், இன்டர்நெட்டுக்கு நிகராக எனர்ஜி எபிசியன்சி தேவைப்படும்.
இது வரும் காலத்தில் துறை சார்ந்த ஆஃப்லைன் மாடல்களாகவும் மாற வாய்ப்புள்ளது. அதாவது, ஹெல்த்கேர், ஃபைனான்ஸ், எண்டர்டெயின்மெண்ட் போன்றவற்றுக்கு பிரத்யேக ஆஃப்லைன் மாடல்களையும் எதிர்பார்க்க முடியும். ஆகவே, லார்ஜர் ஆஃப்லைன் மாடல்களும் கிடைக்கும். காஸ்ட்லியாகவும் இருக்கும். அதேபோல ஸ்மாலர் டிவைஸ்களுக்கு ஏற்ப மாடல்களும் பயன்படுத்த கிடைக்கும்.
அதே நேரத்தில் ஹைபிரிட் ஏஐ மாடல் (Hybrid AI Model) உருவாகுவதையும் இது ஊக்குவிக்கும். அதாவது, ஆன்லைனிலும் ஆப்லைனிலும் பயன்படுத்தும்படியும் இந்த மறுஉருவாக்கம் செய்யப்படலாம். இதனால், ஏற்கனவே, இருக்கும் ஏஐ மாடல்களில், குறிப்பிட்ட சில பீச்சர்கள் மட்டும், ஆஃப்லைனில் வேலை செய்யும்படியான சேவைகளை டெக் நிறுவனங்கள் கொடுக்கலாம்.
ஆஃலைன் ஏஐ மாடல்களுக்கு இருக்கும் சாவல்கள்? ஆஃப்லைனில் கிடைப்பதால், உங்களது ஸ்மார்ட்போன், டேப்லெட், லேப்டாப் ஆகிவற்றில் இருக்கும் ரேம் மற்றும் ஸ்டோரேஜ் பயன்பாடு அதிகமாக இருக்க வேண்டிவரும். ஆகவே, லார்ஜ் ஆஃப்லைன் மாடல்களுக்கு லிமிட்டேஷன் மற்றும் கான்பிகரேஷன் தேவைப்படும். அடிக்கடி அப்டேட் செய்ய இன்டர்நெட் தேவைப்படும்.
அதேபோல ஏதாவது தொழில்நுட்ப கோளாறு (Technical Bug) ஏற்பட்டால், அதற்கும் இன்டர்நெட் தேவைப்படும். இறுதியாக ஆஃப்லைனில் கொடுக்கக்கூடிய லிமிட்டுக்குள்ளேயே ஏஐ அவுட்புட் கிடைக்கும். இது லார்ஜர் மற்றும் ஸ்மாலர் ஆஃப்லைன் மாடல்களுக்கு ஏற்ப மாறுபடும். அதே நேரத்தில் தேவைக்கு ஏற்ப அப்கிரேட் செய்து ஆஃப்லைனில் பயன்படுத்த முடிவதால், இதை தவிர்க்க முடியாது.
Image Source: Google & GitHub


Click it and Unblock the Notifications








