கூகுள் குரோம் பிரவுசரில் ஆண்டிவைரஸ் அறிமுகம்.!

Written By:

கூகுள் நிறுவனம் இப்போது பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது, அந்தவரிசையில் இப்போது கூகுள் நிறுவனம் ஹேக்கிங், வைரஸ் போன்ற பிரச்சனைகளை தடுக்க புதிய ஆண்டிவைரஸ் அம்சங்களை கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

கூகுள் குரோம் பிரவுசரில் ஆண்டிவைரஸ் அறிமுகம்.!

இந்த ஆண்டிவைரஸ் பொதுவாக டீஃபால்ட் செட்டிங்ஸ்களை தானாக மாற்றி பிழைகள் நிறைந்த டூல்கள் மற்றும் பிரவுசர் எக்ஸ்டென்ஷன்களை தடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த கூகுள் குரோம் பிரவுசரில் வரும் ஆண்டிவைரஸ்.

இப்போது கூகுள் கொண்டு வரும் இந்த வசதியைப் பொறுத்தவரை கணினியில் கிளீன்-அப் சேவை போன்று மட்டும் வேலை செய்யும் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் கணினிகளுக்கு அதிக பாதுகாப்பு தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டிவைரஸ் சேவை பொறுத்தவரை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பணிகள் துவங்கியுள்ளது. எனவே பல்வேறு மக்கள் இந்த புதிய பயன்பாட்டை உபயோகப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.English summary
Google adds some basic antivirus features to Chrome for Windows; Read more about this in Tamil GizBot
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot