இது வெறும் ஆரம்பம் தான்.. சுந்தர் பிச்சையவே கோபப்பட வச்சிடீங்களே டா.. Google Chrome இல் முக்கிய மாற்றம்!
ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி உடன் போட்டி உடன் முனைப்பின் கீழ் கூகுள் (Google) நிறுவனம் தனது க்ரோம் ப்ரவுஸரில் (Chrome Browser) அதன் ஏஐ மாடல் ஆன ஜெமினியை (Gemini AI) சேர்த்து உள்ளது. அமெரிக்காவில் உள்ள மேக், விண்டோஸ் மற்றும் மொபைல் டிவைஸ்களில் உள்ள க்ரோமில் ஜெமினியை வெளியிடுவதாக கூகுள் அறிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆன சுந்தர் பிச்சை (Google CEO Sundar Pichai), ஆரம்பத்திலிருந்தே, க்ரோமுக்கு தெளிவான இலக்குகள் இருந்தன: எளிமை, வேகம் மற்றும் பாதுகாப்பு. இப்போது ஏஐ மூலம், ப்ரவுஸரை இன்னும் பாதுகாப்பானதாகவும், புத்திசாலித்தனமாகவும், உதவிகரமாகவும் மாற்ற எங்களுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது. எங்கள் அடுத்த குரோம் சகாப்தம் இப்போதுதான் தொடங்குகிறது என்று கூறியுள்ளார்.

கூகுள் குரோமில் சேர்க்கப்பட்டுள்ள ஜெமினி ஏஐ எவ்வாறு பயனர்களுக்கு உதவும்? இந்த புதிய அம்சம், நீங்கள் ஓப்பன் செய்து வைத்து இருக்கும் வலைப்பக்கத்தை புரிந்துகொள்வது, பல டேப்களில் பணிபுரிவது, மீட்டிங்கை திட்டமிடுவது அல்லது யூட்யூப் (YouTube) வீடியோவை தேடுவது போன்ற பணிகளை நேரடியாக ப்ரவுஸரிலேயே செய்ய அனுமதிக்கும்.
மேலும் க்ரோமில் உள்ள ஜெமினி ஏஐ ஆனது பல டேப்களில் (Tabs) நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதன் சூழலை புரிந்து கொள்ளவும், கேள்விகளுக்கு பதிலளிக்கவும், கூகுள் டாக்ஸ் (Google Docs) மற்றும் கூகுள் காலண்டர் (Google Calendar) போன்ற பிற பிரபலமான கூகுள் சேவைகளுடன் ஒருங்கிணைக்கவும் முடியும்.
இது விரைவில் ஆண்ட்ராய்டு (Android) மற்றும் ஐஓஎஸ் (iOS) ஆகிய இரண்டிலும் கூட அறிமுகம் செய்யப்பட உள்ளது என்பதையும் கூகுள் உறுதிப்படுத்தியுள்ளது. க்ரோம் ப்ரவுஸரின் அட்ரெஸ் பாரில் ஏற்கனவே உள்ள ஏஐ மோட் (AI Mode) ஆனது, சேர்ச் பாரில் இருந்தபடியே சிக்கலான, மல்டி-பார்ட் கேள்விகளைக் கேட்க பயனர்களை அனுமதிக்கிறது; பயனர்கள் பாலோ-அப் கேள்விகளை கேட்பதன் மூலமும் தொடர்புடைய வெப் லிங்க்ஸ்களை ஆராய்வதன் மூலமும் ஆழமாக செல்லலாம் என்று கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.
க்ரோமில் சேர்க்கப்பட்டுள்ள ஜெமினி குறித்து பேசுகையில், கூகுளின் பிளாட்பார்ம்ஸ் மற்றும் டிவைஸ்களின் மூத்த துணைத் தலைவர் ஆன ரிக் ஓஸ்டர்லோ (சிஎன்பிசி வழியாக) கூறுகையில், சில ஆண்டுகளுக்கு முன்பு கூட நாங்கள் நினைத்திருக்காத வழிகளில், இணையத்திலிருந்து அதிகப் பலன்களை பெற உதவும் வகையில் ப்ரவுஸர் மேம்படுத்தப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கூகுள் நிறுவனமானது ஜெமினி ஃபார் ஹோம் (Gemini for Home) என்கிற ஏஐ அசிஸ்டெண்ட்டை (AI Assitant) அறிமுகம் செய்து இருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. இது பயனர்கள் தங்கள் ஸ்மார்ட் ஹோம்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள் என்பதை மாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட அடுத்த தலைமுறை ஏஐ அசிஸ்டன்ட் ஆகும்.
அதாவது கூகுளின் ஜெமினைனி ஆனது கூகுள் அசிஸ்டண்டை மாற்றுகிறது. கூகுள் நெஸ்ட் ஸ்பீக்கர்கள் மற்றும் டிஸ்பிளேக்களில் உள்ள கூகுள் அசிஸ்டண்டை ஜெமினி ஃபார் ஹோம் கொண்டு மாற்ற தயாராக இருப்பதாகவும் கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. ஜெமினி ஃபார் ஹோம் ஆனது ஆழமான பகுத்தறிவு, மேம்பட்ட தேடல் திறன்கள் மற்றும் அதிக உரையாடல்களை வழங்கும். இருப்பினும் 'ஹே கூகுள்' என்றுதான் இதை ஆக்டிவேட் செய்ய முடியும் என்பதையும் கூகுள் உறுதிப்படுத்தியுள்ளது.
கூகுளின் மிகவும் மேம்பட்ட ஜெமினி ஏஐ மாடல்களில் கட்டமைக்கப்பட்ட இந்த ஏஐ அசிஸ்டண்ட் ஆனது - மீடியா பிளேபேக் மற்றும் ஸ்மார்ட் டிவைஸ் கண்ட்ரோல் தொடங்கி சமையல் மற்றும் அன்றாட பணிகளில் மிகவும் இயற்கையான, அறிவார்ந்த மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட உதவியை வழங்கும் என்று கூகுள் உறுதியளிக்கிறது.
நினைவூட்டும் வண்ணம், புதிய ஏஐ அசிஸ்டண்ட் உடன் ஜெமினை லைவ்வும் (Gemini Live) அறிமுகம் செய்யப்பட்டது. இது ஒரு உரையாடல் மாடலாகும். இது வேக் வோர்ட்-ஐ மீண்டும் சொல்லாமல் முன்னும் பின்னுமாக உரையாட அனுமதிக்கிறது. உதாரணத்திற்கு "ஹே கூகுள், சாட் செய்யலாம்" என்று ஜெமினி லைவ் உரையாடலை தொடங்கி, அதிலிருந்து, இயல்பான முன்னும் பின்னுமாக விவாதம் செய்யலாம். அதாவது டிக்கடி "ஹே கூகுள்" சொல்ல வேண்டிய தேவைகள் இருக்காது.


Click it and Unblock the Notifications








