ஆண்ட்ராய்டு பை ஸ்மார்ட்போன்களுக்கு ஏற்பட்ட திடீர் குறை என்ன தெரியுமா?

பேட்டரி சேவர் என்ற தன்மை ஒருசில நிமிடங்களுக்கு ஸ்மார்ட்போன் செயல்படும் வகையில் செய்யும் என்பது தெரிந்ததே.

|

ஸ்மார்ட்போன்களில் பேட்டரியின் சார்ஜ் குறையும்போது அதில் உள்ள பேட்டரி சேவர் என்ற தன்மை ஒருசில நிமிடங்களுக்கு ஸ்மார்ட்போன் செயல்படும் வகையில் செய்யும் என்பது தெரிந்ததே. தற்போது வெளிவரும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் இருக்கும் இந்த வசதியை மேனுவலாக நாம் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த வசதியால் சார்ஜ் குறைவாக உள்ள நேரத்தில் தேவையில்லாமல் செயல்படம் செயலிகளை செயலிழக்க செய்வதோடு, தானாகவே டிஸ்ப்ளேவின் பிரைட்னெஸ்ஸை குறைத்துவிடும்.

ஆண்ட்ராய்டு பை ஸ்மார்ட்போன்களுக்கு ஏற்பட்ட திடீர் குறை என்ன தெரியுமா?

இதனால் சார்ஜ் ஒருசில நிமிடங்களுக்கு பாதுகாக்கப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் அறிமுகமான 'ஆண்ட்ராய்டு பை' என்ற மொபைல்களில் தானாகவே இந்த வசதி ஏற்படும் என்பதை அதன் பயனாளிகள் உணர்ந்திருப்பார்கள். பல ஆண்ட்ராய்டு பை பயனாளிகள் இந்த வசதி தானாகவே இயங்குவதை அறிந்து அதிர்ச்சி அடைந்து இருப்பார்கள். இந்த வசதி ஒரு ஸ்மார்ட்போனில் பேட்டரியின் 75% சார்ஜ் இருக்கும்போது டர்ன் ஆகிவிடுவதால் ஒருசிலருக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஒருசில புகார்கள் ரெடிட் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு பை பயனாளிகள் குறிப்பாக ஆண்ட்ராய்டு 9 பை பயனாளிகள் இதுகுறித்த புகார்களை ரெடிட் உள்பட ஒருசில இடங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து கூகுள் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியபோது, தானாகவே இந்த வசதி செயல்படுவது ஒரு விபத்து என்றும், இதுகுறித்து தங்கள் டெக்னீஷியன்கள் ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஒருசிலர் தங்களுடைய பேட்டரி சேவர் தானாகவே ஆன் ஆகிவிடுவதாக புகார் கொடுத்துள்ளனர். இது ஒரு பேட்டரி சேவர் குறித்து இண்டர்னல் சோதனையாக பார்க்கப்பட்டதாகவும், ஆனால் தவறுதலாக பயனாளிகளுக்கு இந்த சேவை சென்றுவிடுவதாகவும் கூறியுள்ளார். மேலும் இதனை சரிசெய்யும் முயற்சி தொடன்க்கிவிட்டதாகவும், இனிமேல் இதுபோன்ற தவறுகள் ஏற்படாது என்றும், தவறுக்கு வருந்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆண்ட்ராய்டு பை ஸ்மார்ட்போன்களுக்கு ஏற்பட்ட திடீர் குறை என்ன தெரியுமா?

குறிப்பாக கூகுள் பிக்சல், ஒன்ப்ளஸ் 6, சியாமி மி 6, நோக்கியா 7.1 பிளஸ் ஆகிய மாடல்களில் தான் இந்த தவறு அதிகம் நடந்துள்ளது. இந்த மாடல் மொபைல்களில் ஆண்ட்ராய்டு பை ஓஎஸ் இருப்பதால் மட்டுமே இந்த தவறு நடந்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் இதனால் ஸ்மார்ட்போனுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும், இந்த தவறு சரிசெய்யப்பட்டுவிட்டதால் பயனாளிகள் பயம் கொள்ள தேவையில்லை என்றும் கூகுள் அரிவித்துள்ளது. அதையும் மீறி பேட்டரி சேவர் வசதி தானாகவே உங்கள் ஸ்மார்ட்போனில் செயல்பட்டாலும் பயப்பட தேவையில்லை என்றும் ஒருசில நாட்களில் இந்த குறை சரிசெய்யப்பட்டுவிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Google accidentally enables ‘Battery Saver’ on Android Pie devices: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X