அவ்ளோ வெறி மாப்பிள்ளைக்கு! 2022 இல் இந்தியர்கள் அதிகம் தேடிய விஷயம் என்ன தெரியுமா? Google உடைத்த உண்மை

|

2022 Google ட்ரெண்டிங் தேடல் முடிவுகளை கூகுள் வெளியிட்டுள்ளது. பொதுவாக நமக்கு ஏதாவது சந்தேகம் என்றால் அதை கூகுள் இடம் கேட்போம். அப்படி இந்தியர்கள் 2022 ஆம் ஆண்டில் அதிக தெரிந்துக் கொள்ள விரும்பிய விஷயங்கள் குறித்து தான் பார்க்கப்போகிறோம்.

சிறந்த தேடல்களின் முடிவுகள்

சிறந்த தேடல்களின் முடிவுகள்

கூகுள் 2022 ஆம் ஆண்டுக்கான பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட சிறந்த தேடல்களின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் ஆண்டு முழுவதும் வைரலாகி நாட்டின் தலைப்பு செய்திகளாக மாறிய விஷயங்கள் தான் இடம்பெற்றுள்ளன.

கூகுள் ஒவ்வொரு நாடுகளுக்கும் அந்தந்த நாடுக்கு தகுந்தது போல் பட்டியலை வெளியிடுகிறது. அதேபோல் தற்போது இந்தியாவிற்கு என வெளியான பட்டியலை தான் பார்க்கப் போகிறோம்.

FIFA உலகக் கோப்பை 2022 மற்றும் ஐபிஎல்

FIFA உலகக் கோப்பை 2022 மற்றும் ஐபிஎல்

இந்தியாவில் ட்ரெண்டிங் ஆன தலைப்புகளுக்கு வரும் போது, கோவிட்-19ஐ விட விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களை அறிந்துக் கொள்வதில் தான் மக்கள் ஆர்வம் காட்டி இருக்கின்றனர்.

அதிகம் தேடப்பட்ட விஷயங்கள்

அதிகம் தேடப்பட்ட விஷயங்கள்

FIFA உலகக் கோப்பை 2022 மற்றும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஆகிய இரண்டு போட்டிகள் இந்தாண்டில் அதிக தேடப்பட்டவையாக இருந்திருக்கிறது.

அதிகம் தேடப்பட்ட நபர்கள்

அதிகம் தேடப்பட்ட நபர்கள்

2022 டிரெண்டிங் தேடலில் முதலிடத்தில் இருப்பது ஐபிஎல் தான், இரண்டாவது இடத்தில் கோவின் ஆப் மற்றும் மூன்றாவது இடத்தில் ஃபிஃபா உலகக் கோப்பை இருக்கிறது.

2022 இல் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட நபர்களின் பட்டியலில் பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா முதல் இடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு இரண்டாவது இடத்திலும் பிரதமர் ரிஷி சுனர் மூன்றாவது இடத்திலும் இருக்கின்றனர். அவர்களைத் தொடர்ந்து தொழிலதிபர் லலித் மோடி, நடிகை சுஷ்மிதா சென் ஆகியோர் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

நாட்கள் ஓடியதே தெரியவில்லை

நாட்கள் ஓடியதே தெரியவில்லை

நாட்கள் ஓடியதே தெரியவில்லை என குறிப்பிடும் அளவிற்கு 2022 ஆம் ஆண்டு ஓடி விட்டது. இன்னும் சில தினங்களில் 2023 இல் அடியெடுத்து வைக்க இருக்கிறோம். 2022 ஆம் ஆண்டின் Google Play இல் சிறந்து விளங்கிய பயன்பாடுகளை கூகுள் அறிவித்துள்ளது. Turnip - Talk, chat மற்றும் stream ஆகியவை Fun ஆப்ஸ்களாக இருக்கிறது. அதேபோல் தனிப்பட்ட வளர்ச்சிக்கான சிறந்த ஆப் என்ற பட்டத்தை Filo: Instant 1-to-1 tutoring பெற்றிருக்கிறது.

ஸ்டோர் விருது வென்றவர்கள்

ஸ்டோர் விருது வென்றவர்கள்

கூகுள் வெளியிட்ட அறிவிப்பின்படி, ஷாப்ஸி ஷாப்பிங் ஆப் அதாவது சிறந்த தினசரி அத்தியாவசிய ஆப் என்ற பட்டத்தை பெற்றது. மூத்த குடிமக்கள் பயன்பாடு நன்மைக்கான சிறந்த பயன்பாடாக கியாஸ் இருக்கிறது. சமீபத்தில் ஆப்பிள் தனது 2022 ஆம் ஆண்டிற்கான ஆப் ஸ்டோர் விருது வென்றவர்களை அறிவித்தது.

கூகுள் ப்ளே

கூகுள் ப்ளே

இந்த ஆண்டுக்கான கூகுள் ப்ளேயின் சிறந்த விருது வென்றவர்களை கூகுள் இந்தியா அறிவித்துள்ளது. ஆண்ட்ராய்டு போன்களுக்கான சிறந்த பயன்பாடாக கூகுள் ப்ளே ஸ்டோர் இருக்கிறது. சிறந்த ஆப்ஸ் மற்றும் கேம்களை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள பல பயனர்களுக்கு 2022 என்பது தொற்றுநோயின் பிந்தைய காலத்தை குறிக்கிறது என கூகுள் குறிப்பிட்டுள்ளது.

சிறந்த பயன்பாடுகள் எது?

சிறந்த பயன்பாடுகள் எது?

2022 ஆம் ஆண்டின் கூகுள் ப்ளே சிறந்த பயன்பாடுகளை கூகுள் அறிவித்துள்ளபடி, டர்னிப் - பேச்சு, சேட் மற்றும் ஸ்ட்ரீம் ஆகிய சிறந்த ஃபன் ஆப்ஸ்களாக இருந்திருக்கிறது. அதே நேரத்தில் 'Filo: Instant 1-to-1 tutoring' தனிப்பட்ட வளர்ச்சிக்கான சிறந்த ஆப் என்ற பட்டத்தை வென்றிருக்கிறது. ஷாப்ஸி ஷாப்பிங் ஆப் - ஃபிளிப்கார்ட் சிறந்த அத்தியாவசிய செயலி என்ற தலைப்பை பெற்றிருக்கிறது. மூத்த குடிமக்களுக்கான சிறந்த பயன்பாடாக கியால் இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Google 2022 Trending Search Result: IPL, FIFA list! Do You Who is the Most Searched Person in Google?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X