Google-க்கே இந்த நிலையா., ஆனா இந்தியர்கள் ஹேப்பி அன்னாச்சி: என்ன தெரியுமா?

|

ஸ்மார்ட் போன்கள் இல்லாத நபர்களை பார்ப்பது என்பது அரிது. இந்தியாவில் பலவகை ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் தங்களது புதிய வகை மாடல் மொபைல்களை போட்டிப்போட்டுக் கொண்டு அறிமுகம் செய்து வருகிறது. ஆனால் எத்தனை ரூபாய் மதிப்புள்ள மொபைல் போனை கையில் வைத்திருந்தாலும், ஐபோன், கூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஸ்மார்ட்போன்கள் வைத்திருப்பவர் என்றால் அது தனி மதிப்புதான்.

ஐபோன் மலிவு விலையில் அறிமுகமா

ஐபோன் மலிவு விலையில் அறிமுகமா

ஐபோன் என்றவுடன் அனைவரும் அதன் விலை 50 ஆயிரத்துக்கு மேல் இருக்கும் என்று தான் நினைக்கிறார்கள். ஆனால் தற்போது ஐபோன் விலையும் கணிசமாக குறைக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. ஐபோன் எஸ்.இ மாடல் வகை போனானது ரூ.23,999-க்கு அமேசான் இணையத்தில் கிடைக்கும். இதைவிட மலிவு விலையில் புது மாடல் ஐபோன் ஒன்றை அறிமுகம் செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியது.

2020 ஆம் ஆண்டு அறிமுகம் செய்ய வாய்ப்பு

2020 ஆம் ஆண்டு அறிமுகம் செய்ய வாய்ப்பு

ஆப்பிள் ஒரு மலிவு விலை ஐபோனை அறிமுகப்படுத்த உள்ளதாக சமீபத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. இந்த வதந்திகள் உண்மையானால் ஐபோன் எஸ்.இயின் அடிப்படை வசதி கொண்ட மாடல் போனாக இருக்க வேண்டும். மேக்ரூமோர்ஸின் அறிக்கையின்படி, பட்ஜெட் ஐபோன் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரியில் உற்பத்தி செய்யப்படும் என தெரிவித்துள்ளது. இந்த புதிய வதந்திகள் பலவற்றுடன் ஒத்துப்போகிறது, 2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஆப்பிள் புதிய பட்ஜெட் ஐபோனை அறிமுகப்படுத்துவதற்கான பரிந்துரைகள் நடந்துவருவதாக தகவல்கள் வெளியானது.

உடனே இந்த 9 அப்ஸ்களை டெலீட் செய்யுங்கள்! இல்லைனா உங்க அக்கௌன்ட் ஹேக் செய்யப்படும்!உடனே இந்த 9 அப்ஸ்களை டெலீட் செய்யுங்கள்! இல்லைனா உங்க அக்கௌன்ட் ஹேக் செய்யப்படும்!

ஒன்பிளஸ் 8 லைட் போன்கள்

ஒன்பிளஸ் 8 லைட் போன்கள்

ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் குறித்த தகவல்கள் வெளிவந்த அதே சமயத்தில், அந்த நிறுவனம் சத்தமின்றி இன்னொரு மாடல் இணைத்துள்ளதாக தகவல்கள் வெளியானது. இது ஒன்பிளஸ் 8 லைட் போனாகும். இந்த போனும் மலிவு விலையிலேயே கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்த தகவல்களை 91 மொபைல்ஸ் மற்றும் ஒன்லீக்ஸ் வெளியிட்ட லீக்ஸ் ரெண்டர்கள் வெளியிட்டது.

கூகுள் பிக்சல் மொபைல்களுக்கு தனி மவுசு

கூகுள் பிக்சல் மொபைல்களுக்கு தனி மவுசு

அதேபோல் கூகுள் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்கள் எப்போதுமே மலிவு என்ற பேச்சுக்கே இடமில்லை. கூகுள் பிக்சல் போனானது, வைத்திருப்பவர் மிகப் பெரிய தொழிலதிபர்கள், தொழில் வல்லுநர்கள் மட்டுமின்றி போனை தொழில் சம்பந்தமாகவும், முக்கியத் தேவைக்கும் பயன்படுத்துவோர் மட்டுமே உபயோகித்து வருவதை காணமுடிகிறது.

மிட் ரேன்ஜ் பட்ஜெட் போன்கள்

மிட் ரேன்ஜ் பட்ஜெட் போன்கள்

இந்த நிலையை முடித்து வைக்கும் விதமாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கூகுள் நிறுவனம் அதன் பிக்சல் ஸ்மார்ட் போனை மிட் ரேன்ஜ் பட்ஜெட் மாடல்களில் அறிமுகம் செய்ய பணியாற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Google அடித்த அபாய மணி: சீனாவிலிருந்து அடுத்த பிரச்னை., யோசிக்காம இதையெல்லாம் அன்இன்ஸ்டால் செய்யவும்Google அடித்த அபாய மணி: சீனாவிலிருந்து அடுத்த பிரச்னை., யோசிக்காம இதையெல்லாம் அன்இன்ஸ்டால் செய்யவும்

பிக்சல் 4A மற்றும் பிக்சல் 4A XL

பிக்சல் 4A மற்றும் பிக்சல் 4A XL

கூகுளின் மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களானது பிக்சல் 4A மற்றும் பிக்சல் 4A XL என்ற அழைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பிக்சல் 4A குறித்த சில தகவல்களும் ஆன்லைனில் கசிந்த வண்ணம் உள்ளன என்பது குறிப்பிடதக்கது.

5 ஜி ஆதரவோடு வெளிவரும் என தகவல்

5 ஜி ஆதரவோடு வெளிவரும் என தகவல்

இந்த மிட் ரேன்ஜ் பிக்சல் போன்களின் அம்சங்களானது, க்வால்காம் ஸ்னாப்டிராகன் 730 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. அதோடு இந்த வகை போன்களானது 5 ஜி ஆதரவையும் பெரும் என்பது குறிப்பிடதக்கது. சமீபத்திய பிக்சல் 4 ஸ்மார்ட்போனில் AI பவர்டு ரெக்கார்டர் அப்ளிகேஷன் இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் ரெக்கார்டர் ஆப் ஆனது பிக்சல் 4 உடன் அறிமுகப்படுத்தப்பட்டது.

வாய்ஸ் டிரான்ஸ்கிரிப்ஷன் டெக்ஸ்ட்

வாய்ஸ் டிரான்ஸ்கிரிப்ஷன் டெக்ஸ்ட்

பிக்சல் 3 மற்றும் பிக்சல் 2 சீரிஸ் உள்ளிட்ட பழைய பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு ரெக்கார்டர் ஆப்பை கொண்டு வர நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த ஆப் ஆனது இது நிகழ்நேர வாய்ஸ் டிரான்ஸ்கிரிப்ஷன் டெக்ஸ்ட், அதாவது இந்த ஆப்பினால் ஆடியோ பைலில் உள்ள இசை மற்றும் குறிப்பிட்ட சொற்களை கண்டறிய இயலும். இதன் சிறப்பம்சம் இன்டெர்நெட் கனெக்சன் இல்லாமலேயே இது இயங்கும்.

பட்ஜெட் வாடிக்கையாளர்களிடம் மிகந்த எதிர்பார்ப்பு

பட்ஜெட் வாடிக்கையாளர்களிடம் மிகந்த எதிர்பார்ப்பு

தற்போது ஆப்பிள், ஒன்பிளஸ் நிறுவனத்தை தொடர்ந்து கூகுள் நிறுவனமும் மலிவு விலை போனை அறிமுகப்படுத்த உள்ளதாக வெளிவந்த தகவல்கள், பட்ஜெட் வாடிக்கையாளர்களை மிகந்த எதிர்பார்ப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Best Mobiles in India

English summary
Google working on new mid range Pixel product mobile: Sources said

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X