ரூ.350, ரூ.450-க்கு டாட்டா.. அதிக விளம்பரம் செய்யப்படாத, ரூ.200 குள்ள சர்வீஸ் வேலிடிட்டி தரும் 4 Jio பிளான்ஸ்!
பெரிதாக விளம்பரப்படுத்தப்படுவதில்லை என்பதால், ரிலையன்ஸ் ஜியோ (Jio) சேவையின் கீழ், சர்வீஸ் வேலிடிட்டி உடன், ரூ.200-க்கும் குறைவான விலையில் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் நான்கு ப்ரீபெய்ட் திட்டங்களை பற்றி உங்களில் பலருக்கும் தெரியாமல் போயிருக்கலாம். அந்த 4 திட்டங்களையும் இங்கே - அடிச்சு நொறுக்குறோம் வாங்க!
விலை உயர்வு கம்மிங் சூன்: இந்த ஆண்டின் பிற்பகுதியில் எதிர்பார்க்கப்படும் அடுத்த கட்ட கட்டண உயர்வுகளுக்குப் பிறகு, இந்த நான்கு திட்டங்களும் இருக்குமா இருக்காதா என்பது நமக்கு தெரியாது, ஆனால் தற்போதைக்கு நீங்கள் அவற்றை கொண்டு ரீசார்ஜ் செய்து உங்கள் பணத்தை மிச்சப்படுத்தலாம்.

யாரெல்லாம் டார்கெட்? ரூ.200-க்கும் குறைவான விலை கொண்ட இந்த ஜியோ திட்டங்கள் ஆனது - குறைந்த செலவு செய்யும் திறன் கொண்டவர்களையும், நீண்ட கால திட்டத்தில் சேருவதற்கு முன்பு தங்கள் பகுதியில் ஜியோவின் நெட்வொர்க்கை சோதித்து பார்க்க விரும்புபவர்களையும் இலக்காக கொண்டுள்ளன.
என்னென்ன திட்டங்கள்? நாம் இங்கே பேசும் 4 திட்டங்களின் விலைகள் - ரூ.189, ரூ.196, ரூ.198 மற்றும் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டங்கள் ஆகும். இவை அனைத்துமே சர்வீஸ் வேலிடிட்டி (Service Validity) உடன் வரும் திட்டங்கள் என்பதை நினைவில் கொள்ளவும். அதாவது இவைகள் டேட்டாசர்வீஸ் வேலிடிட்டியை வழங்காத டேட்டா வவுச்சர்கள் இல்லை.
இந்த பட்டியலில் முதலில் இருக்கும் ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.189 திட்டம், பயனர்களுக்கு சர்வீஸ் வேலிடிட்டியை வழங்கும் ஜியோவின் மலிவான திட்டமாகும். இந்த ரூ..189 திட்டத்தில் 28 நாட்கள் சர்வீஸ் வேலிடிட்டி உடன் 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் மற்றும் 300 எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகள் கிடைக்கும்.
அடுத்து, ரூ.196 திட்டம் உள்ளது. இந்த ரூ.196 திட்டத்தில், பயனர்கள் மீண்டும் 2ஜிபி டேட்டா, 1000 நிமிட வாய்ஸ் காலிங் மற்றும் ஐசிஆர் (ICR) பயன்பாட்டிற்கு மட்டும் 1000 எஸ்எம்எஸ்கள் ஆகியவற்றை பெறுகிறார்கள். பிஎஸ்என்எல் (BSNL) நெட்வொர்க் உடன் லேட்ச்சிங் (Latching) ஆன பிறகு ஐசிஆர் ரீசார்ஜ் செயல்படும். பிஎஸ்என்எல்-ன் ஐசிஆர் திட்டம் தற்போது ஜியோவின் மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். ரூ.196 திட்டத்தின் சர்வீஸ் வேலிடிட்டியும் 28 நாட்கள் ஆகும்.
அடுத்து, ரூ.198 திட்டம் உள்ளது. ஜியோவின் ரூ.198 திட்டத்தில், பயனர்கள் 14 நாட்கள் சர்வீஸ் வேலிடிட்டியை மட்டுமே பெறுகிறார்கள். இருப்பினும், இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் சிறப்பம்சம் 5ஜி பலன் ஆகும். இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் பயனர்கள் வரம்பற்ற 5ஜி டேட்டா, தினசரி 2ஜிபி டேட்டா (4ஜி), அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை பெறுகிறார்கள். இந்த திட்டத்தில் வேறு கூடுதல் நன்மைகள் எதுவும் வழங்கப்படவில்லை.
இறுதியாக, ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம் உள்ளது. ரூ.199 திட்டத்தில் பயனர்கள் 18 நாட்கள் சர்வீஸ் வேலிடிட்டியை பெறுகிறார்கள். ரூ.199 திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் ஆகிய நன்மைகள் அடங்கும். இதில் கூடுதல் நன்மைகள் எதுவும் இணைக்கப்படவில்லை.
ரூ.189 திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் பயனருக்கு ஒரு நாளைக்கு ரூ.6.75 மட்டுமே செலவாகும், அதேசமயம் ரூ.198 திட்டத்திற்கு ஒரு நாளைக்கு சுமார் ரூ.14.14 செலவாகும். ரூ.199 திட்டத்தின் தினசரி செலவு ரூ.11.06 ஆகும். ஒட்டுமொத்தமாக இதெல்லாம் மிகவும் மலிவானதும் அல்ல, அதே சமய மிகவும் விலை உயர்ந்ததும் அல்ல.
உங்களுக்கு ரூ.200 க்கு கீழ் 5ஜி டேட்டா வேண்டுமென்றால், ஜியோவின் ரூ.198 திட்டம் மட்டுமே நீங்கள் தேர்வு செய்யக்கூடிய ஒரே ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமாகும். ஜியோவை தவிர வேறு எந்தத் தொலைத்தொடர்பு நிறுவனமும் இந்த விலையில் பயனர்களுக்கு 5ஜி சேவையை வழங்கவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications