Home
News

கேபிள் TV காலி.. 450 சேனல், BiTV ஓடிடி, 100GB டேட்டா, வாய்ஸ், SMS.. ரூ.250 பட்ஜெட்ல BSNL புது பிளான்!

ரூ.250 பட்ஜெட்டில் 100ஜிபி டேட்டா, பிஐடிவி அணுகல் வழியாக டிவி சேனல்கள் மற்றும் ஓடிடி.. போதாக்குறைக்கு வாய்ஸ், எஸ்எம்எஸ் என கிட்டத்தட்ட எல்லா நன்மைகளையும் ஒரு பேக்கேஜ் ஆக வழங்கினால்.. யாருக்கு தான் கேபிள் டிவி கனெக்ஷன் மற்றும் விலை அதிகமான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் தேவைப்படும்? என்று கேட்கும்படியான ஒரு புதிய பிஎஸ்என்எல் (BSNL) பிளான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) ஆனது இந்திய வாடிக்கையாளர்களுக்காக ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்து உள்ளது. இதன் விலை வெறும் ரூ.251 மட்டுமே ஆகும். இது ஒரு ப்ரீபெய்ட் பிளான் ஆகும்.

கேபிள் TV காலி.. ரூ.250 பட்ஜெட்ல BSNL புது பிளான்!

கடந்த காலத்தில் ரூ.251 என்கிற விலைக்கு பல வகையான (நன்மைகளுடன்) பிஎஸ்என்எல் திட்டங்கள் ரீசார்ஜ் செய்ய கிடைத்துள்ளன. தற்போது இந்நிறுவனம் ரூ.251 திட்டத்தை மீண்டும் கொண்டு வந்துள்ளது. இப்போது து 100ஜிபி டேட்டாவுடன் வருகிறது. இதுமட்டுமல்ல இது இன்னும் நிறைய நன்மைகளை வழங்குகிறது

பிஎஸ்என்எல்-ன் ரூ.251 ப்ரீபெய்ட் திட்டம் பயனர்களுக்கு பிஐடிவி (BiTV) அணுகலையும் வழங்குகிறது. இது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஓடிடி (ஓவர்-தி-டாப்) தளமாகும்; இதன்கீழ் 450 க்கும் மேற்ப்பட்ட டிவி சேனல்களும் அணுக கிடைக்கும். கூடவே இது அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளையும் வழங்குகிறது

பிஎஸ்என்எல்-ன் ரூ.251 திட்டம் ஆனது 28 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி உடன் வருகிறது. ஆனால் 30 நாட்களுக்கு இலவச பிஐடிவி அணுகல் கிடைக்கும் என்று டெலிகாம்டால்க் வலைத்தளம் குறிப்பிட்டுள்ளது. அதாவது இந்த திட்டத்திற்க்கான ஒரு நாளைக்கான செலவு வெறும் ரூ.8.96 மட்டுமே ஆகும்

இந்த திட்டம்சர்வீஸ் வேலிடிட்டி உடன் வருகிறது, அது தான் இந்த திட்டத்தின் பெஸ்ட் பார்ட் ஆகும். எண்டர்டெயின்மெண்ட் (ஓடிடி, டிவி சேனல்கள்) தேவை இல்லை என்றாலும் கூட ஏராளமான 4ஜி டேட்டா உடன் சேர்த்து வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்கி - ஒரு தரமான மன்த்லி ப்ரீபெய்ட் பிளான் ஆகவும் மாறுகிறது

பிஎஸ்என்எல் 5ஜி எப்போது அறிமுகம்? அரசாங்கத்திற்கு சொந்தமான இந்த டெலிகாம் நிறுவனம் ஏற்கனவே சுமார் 1 லட்சம் 4ஜி தளங்களில் முதலீடு செய்துள்ளது, இப்போது அதை விரிவுபடுத்தும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இதை தொடர்ந்து பிஎஸ்என்எல்லின் 5ஜி நெட்வொர்க் அறிமுகம் ஆனது 2026 ஆம் ஆண்டில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆரம்பத்தில் இது 2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மும்பை மற்றும் டெல்லியில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது; ஆனால் நடக்கவில்லை.

ஏர்போர்ட்டில் இலவச பிஎஸ்என்எல் வைஃபை: பிஎஸ்என்எல் (BSNL) ஆனது அதானி நவி மும்பை விமான நிலைய பயணிகளுக்கு இலவச வைஃபை சேவைகளை வழங்கும் என்றும், இதற்காக நவி மும்பை சர்வதேச விமான நிலையம் (NMIAL) ஆனது டிஜிட்டல் பயணிகள் தொடர்பு அமைப்பை பயன்படுத்த பிஎஸ்என்எல் உடன் கூட்டு சேர்ந்துள்ளது என்றும் தகவல்கள் வெளியாகின.

இதன் கீழ் டிசம்பர் 25, 2025 அன்று குறிப்பிட்ட விமான நிலையம் ஆனது வணிக நடவடிக்கைகளை தொடங்கும் போது வாடிக்கையாளர்களுக்கு இலவச அதிவேக பிஎஸ்என்எல் வைஃபை அணுக கிடைக்கும். நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தில் இலவச வைஃபை வசதியை பெற விரும்பும் பயணிகள், அதானி ஒன்ஆப்பை (Adani OneApp) விர்ச்சுவல் அசிஸ்டன்ட் ஆக பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த ஆப் பயனர்களுக்கு நிகழ்நேர விமான புதுப்பிப்புகள், போர்டிங் கேட் தகவல், அட்டவணைகள் மற்றும் அறிவிப்புகளை பயனர்களின் ஸ்மார்ட்போன்களில் நேரடியாக வழங்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Goodbye to Cable TV BSNL New Plan Rs 251 With Free BiTV Access 100GB Data Voice SMS Introduced
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X