Home
News

ATM க்கு பெரிய கும்பிடு.. புதிய UPI விதிகள் அமலுக்கு வந்தன.. என்னென்ன மாறியது?

ஏடிஎம்-களுக்கும், கையில் ரொக்கமாக பணத்தை வைத்துக்கொண்டு சுற்றுவதற்கும் முற்றுப்புள்ளி வைக்கும்படியான முக்கிய மாற்றங்கள் இன்று (செப்.15) முதல் அமலுக்கு வந்தன. என்பிசிஐ (NPCI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India) ஆனது யுபிஐ (UPI) சேவையில் பல அதிரடி மாற்றங்களை அமல்படுத்தியுள்ளது.

2025 செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் பி2எம் (P2M) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பெர்சன்-டூ-மெர்சண்ட் பேமண்ட்களுக்கான பரிவர்த்தனை வரம்புகள் (Person-to-Merchant Transaction Limits) அதிகரிக்கப்பட்டு உள்ளன. அதாவது ஒரு தனிநபர், ஒரு வணிகருக்கு பெரிய அளவிலான தொகையை செலுத்த வேண்டுமென்றால், இனி அதை அவர் யுபிஐ வழியாகவே செய்ய முடியும். ஏடிஎம் சென்டர்களை தேடி அலையவோ அல்லது கையில் ரொக்கத்தை கொண்டு செல்லவோ அவசியம் இருக்காது.

ATM க்கு பெரிய கும்பிடு.. புதிய UPI விதிகள் அமலுக்கு வந்தன!

1. மூலதன சந்தை முதலீடுகள் மற்றும் காப்பீட்டு பேமண்ட்களில், ஒரு பரிவர்த்தனைக்கான வரம்பு ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது; இதற்காக தினசரி அதிகபட்சம் வரம்பு ரூ.10 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. முன்னரே குறிப்பிட்டபடி இந்த புதிய லிமிட் இன்று முதல், அதாவது செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தன.

2. பயணம் தொடர்பான துறையில் நடக்கும் யுபிஐ பேமண்ட் வரம்பும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக இதற்கான வரம்பு ரூ.1 லட்சம் ஆக இருந்தது. இப்போது இது ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான தினசரி உச்சவரம் ரூ.10 லட்சமாக ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது

3. கிரெடிட் கார்டு பில் பேமண்ட்களின் வரம்பும் உயர்த்தப்பட்டுள்ளது. இப்போது ஒரே பரிவர்த்தனையில் ரூ.5 லட்சம் வரை அனுமதிக்கப்படுகின்றன, இருப்பினும் 24 மணி நேர வரம்பு ரூ.6 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதோடு கடன் மற்றும் இஎம்ஐ வசூலுக்கான வரம்பும் உயர்த்தப்பட்டுள்ளது. இப்போது ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.5 லட்சம் செலுத்தலாம், தினசரி லிமிட் மொத்தம் ரூ.10 லட்சம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

4. நகை வாங்குதல்களுக்கான யுபிஐ பேமண்ட் லிமிட்டும் உயர்த்தப்பட்டுள்ளது. இப்போது ஒரு பரிவர்த்தனைக்கு லிமிட் ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாகவும், ஒரு நாளைக்கு ரூ.6 லட்சமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, டிஜிட்டல் ஆன்போர்டிங் மூலம் கால வைப்புத்தொகை போன்ற வங்கி சேவைகள் முந்தைய ரூ.2 லட்சத்துடன் ஒப்பிடும்போது ஒரு நாளைக்கும் ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

5. அரசு மின் சந்தைப் போர்ட்டல் (ஜெம் போர்டல்) - அர்ப்பணிப்பு பண வைப்புத்தொகை மற்றும் வரி செலுத்துதல்கள் உட்பட - ஒரு பரிவர்த்தனைக்கான வரம்பு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சம் வரை என்று உயர்த்தப்பட்டுள்ளது.

"பி2எம்" என்று பெயர் குறிப்பிடுவது போலவே, அதிகரிக்கப்பட்டுள்ள பேமண்ட் லிமிட்கள் ஆனது, அதாவது ஒரு தனி நபர் இன்னொரு தனி நபருக்கு யுபிஐ வழியாக பரிமாற்றம் செய்யக்கூடிய லிமிட் - ஒரு நாளைக்கு ரூ.1 லட்சமாக மாறாமல் உள்ளது. பி2பி பேமண்ட்டையும், பி2எம் பேமண்ட்டையும் - குழப்பி கொள்ள வேண்டாம்.

என்பிசிஐ அறிவித்துள்ள இந்த புதிய யுபிஐ பி2எம் பேமண்ட் லிமிட்களை ஃபின்டெக் நிபுணர்கள் வரவேற்றுள்ளனர். இந்த மாற்றம் - அதிக மதிப்புள்ள பிரிவுகளில் டிஜிட்டல் தத்தெடுப்பின் திறனை எடுத்துக்காட்டுவதாக தெரிவித்துள்ளனர். கேஷ்ஃப்ரீ பேமென்ட்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இணை நிறுவனர் ஆன ஆகாஷ் சின்ஹா, இந்த நடவடிக்கை சரியான நேரத்தில் வந்துள்ளது என்று கூறியுள்ளார்!

Best Mobiles in India

English summary
Goodbye to ATM Cash New UPI Rules Came to Effect P2M Per Transaction Daily Limit Increased By NPCI
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X