Home
News

வானத்தை போல மனம் படைச்ச நல்லவரே.. உங்கள தப்பா நினைச்சுட்டோமே மஸ்க்!

எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கிய நாள் முதல் தற்போதுவரை வெளியாகும் அனைத்து அறிவிப்புகளும் ட்விட்டர் பயனர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையிலாக தான் இருந்தது. இந்த நிலையில் தற்போது வெளியாகி உள்ள ஒரு தகவல் ட்விட்டர் பயனர்களை பெருமூச்சு விட வைக்கும் வகையில் இருக்கிறது.

எலான் மஸ்க் போடும் பக்கா பிளான்

எலான் மஸ்க் போடும் பக்கா பிளான்

ட்விட்டரில் ட்வீட் எடிட் ஆப்ஷன் ட்விட்டர் ப்ளூ சந்தாதாரர்களுக்கு மட்டுமே கிடைத்து வருகிறது. இந்த ட்வீட்டர் ப்ளூ சந்தா சேவையும் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் மட்டுமே கிடைக்கிறது. இந்த நிலையில் ட்வீட் எடிட் பட்டன் சேவையை அனைவருக்குமானதாக மாற்ற எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

திகைப்பில் இருந்த பயனர்களுக்கு விடுதலை

திகைப்பில் இருந்த பயனர்களுக்கு விடுதலை

வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடையும் அளவிற்கு என்ன அறிவிப்பு என்ற கேள்வி வரலாம். ட்விட்டரின் புதிய தலைவரான எலான் மஸ்க், ட்விட்டரின் ப்ளூ டிக் ஆப்ஷனை பெறுவதற்கு அனைத்து பயனர்களும் மாதம் 8 டாலர் செலுத்த வேண்டும் என அறிவித்தார். அதாவது இந்திய மதிப்புப்படி மாதம் ரூ.660 செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பால் திகைப்பில் இருந்த பயனர்களுக்கு தற்போது விடுதலை கிடைத்திருக்கிறது.

Twitter Blue சந்தாதாரர்களுக்கு மட்டுமா?

Twitter Blue சந்தாதாரர்களுக்கு மட்டுமா?

எலான் மஸ்க் எடிட் பட்டனை அனைத்து பயனர்களுக்கும் இலவசமாகக் கிடைக்கச் செய்ய திட்டமிட்டுள்ளதாக பிளாட்ஃபார்மரின் கேசி நியூட்டன் தெரிவித்துள்ளார். தற்போது இந்த சேவையானது அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் உள்ள Twitter Blue சந்தாதாரர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

அனைவருக்கும் ட்வீட் எடிட் ஆப்ஷன்

அனைவருக்கும் ட்வீட் எடிட் ஆப்ஷன்

உண்மையாகவே எலான் மஸ்க் ட்வீட் எடிட் பட்டன் ஆப்ஷனை அனைவருக்கும் வழங்கும்பட்சத்தில் இது மிகவும் வரவேற்க்கத்தக்க விஷயமாக இருக்கும். அதேபோல் ட்வீட்டை பதிவிட்ட 30 நிமிடங்களுக்குள் பயனர்கள் அதை எடிட் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த கால அவகாசம் நிறைவடைந்தால் ட்வீட்டை எடிட் செய்ய முடியாது என கூறப்படுகிறது. ட்வீட் எடிட் ஆப்ஷன் தற்போதே ட்விட்டர் ப்ளூ பயனர்களுக்கு கிடைத்து வருவதால் இது எப்படி செயல்படும் என்பது கணிக்க முடிகிறது.

சொன்னதை செய்யும் மஸ்க்

சொன்னதை செய்யும் மஸ்க்

உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், ட்விட்டரை வாங்குவதற்கு முன்பே ட்வீட் எடிட் ஆப்ஷன் அறிமுகம் செய்வது குறித்த விவாதத்தை முன்வைத்தார். இவர் ட்விட்டரை வாங்கினால் ட்வீட் எடிட் பட்டன் ஆப்ஷன் அனைவருக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த ஆப்ஷன் அனைவருக்கும் கிடைக்க இருக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அறிவிப்பு

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அறிவிப்பு

ட்விட்டர் பயனர்கள் பல ஆண்டுகளாக ட்வீட்களை திருத்தும் ஆப்ஷன் குறித்து கோரிக்கை எழுப்பி வந்தனர். இதுகுறித்து ட்விட்டர் நிறுவனம் எடிட் ஆப்ஷன் வேண்டுமா வேண்டாமா என்ற வாக்கெடுப்பையும் நடத்தியது. இந்த அம்சம் தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ள காரணத்தால் ட்விட்டர் இதை அறிமுகம் செய்வதில் தயக்கம் காட்டி வந்தது. ஆனால் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக ட்விட்டர் எடிட் பட்டன் ஆப்ஷன் பிரத்யேகமாக ட்விட்டர் ப்ளூ பயனர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

Edit History என்ற விருப்பம்

Edit History என்ற விருப்பம்

எடிட் செய்யப்பட்ட ட்வீட்டின் கீழ் முன்னதாகவே எதிர்பார்க்கப்பட்டது போல் பென்சில் ஐகான் காட்டப்படுகிறது. இதன்மூலம் இந்த ட்வீட் எடிட் செய்யப்பட்டுள்ளது என்பதை அறிய முடிகிறது. பென்சில் ஐகானுக்கு அருகில் Last Edited என்ற சொல்லும் இடம்பெற்றுள்ளது. இதன்மூலம் இந்த ட்வீட் கடைசியாக எப்போது எடிட் செய்யப்பட்டது என்ற நேரத்தை அறிய முடியும். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இதில் Edit History என்ற விருப்பமும் காட்டப்படுகிறது.

கால அவகாசம் நிர்ணயித்த ட்விட்டர்

கால அவகாசம் நிர்ணயித்த ட்விட்டர்

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் ட்வீட் திருத்தம் செய்வற்கான கால அவகாசம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ட்வீட் பதிவிட்ட 30 நிமடங்களுக்குள் இதை திருத்த வேண்டும் என கால அவகாசம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் ட்வீட்டில் உள்ள பிழையை திருத்தவோ அல்லது ஹேஷ்டேக்குகளை இணைக்கவோ எடிட் பட்டன் உதவும் என ட்விட்டர் குறிப்பிட்டது.

Best Mobiles in India

English summary
Good thing to expect from Elon Musk! Is twitter edit button option free for all users?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X