இந்தியாவில் உள்ள Samsung போன் ஓனர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. வந்துட்டான்.. One UI 7 வந்துட்டான்!
சாம்சங் (Samsung) நிறுவனம் இந்த மாத தொடக்கத்தில் அதன் சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரீஸ், கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 6 மற்றும் ஃபிளிப் 6 ஆகியவற்றுக்கு ஒன் யுஐ 7 அப்டேட்டை (One UI 7 Update) வெளியிட்டது. குறிப்பிட்ட அப்டேட் வழியாக ஏற்பட்ட கடுமையான அன்லாக் பக் காரணமாக, இந்த அப்டேட் உடனே நிறுத்தப்பட்டது.
சில நாட்களுக்கு பிறகு, தற்போது தென் கொரிய நிறுவனமான சாம்சங் அதன் புதிய ஒன் யுஐ 7 அப்பேட்டை, இந்தியா மற்றும் பிற உலகளாவிய பிராந்தியங்களில் உள்ள கேலக்ஸி எஸ்24 சீரீஸ், கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 6 மற்றும் கேலக்ஸி இஸட் ஃபிளிப் 6 போன்களுக்கு மீண்டும் வெளியிட தொடங்கி உள்ளது.

பல பீட்டா டெஸ்ட்களுக்கு பிறகு, கிடைக்கும் ஒன் யுஐ 7 அப்டேட் ஆனது லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்டது மற்றும் ஏப்ரல் 2025 செக்யூரிட்டி பேட்சையும் உள்ளடக்கியது. இந்தியாவை தவிர, மத்திய கிழக்கு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஐரோப்பா, மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற பிற உலகளாவிய பிராந்தியங்களும் ஒன் யுஐ 7 அப்டேட் கிடைப்பதாக கூறப்படுகிறது.
இந்த அப்டேட், நோட்டிபிகேஷன் பேஜ் மற்றும் குவிக் பேனல் ஆகியவைகளுக்கு ஒரு பெரிய வடிவமைப்பு மாற்றத்தை கொண்டுவருகிறது. மேலும் குவிக் பேனல் இப்போது இன்னமும் அதிக கஸ்டமைஸ் செய்யக்கூடியதாக இருக்கும். மேலும் இது சாம்சங் ஸ்டாக் ஆப்களுக்கான புதிய ஐகான்களை கொண்டுவருகிறது. அவைகள் சிறந்த செயல்பாட்டிற்காக மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளன.
கூடவே கேமரா ஆப்பும் மறுவடிவமைப்பை பெறுகிறது. கேமரா ஆப்பில் உள்ள ஷார்ட்கட்கள் இப்போது சிறந்த ஒன் ஹேண்ட் அணுகலுக்காக கீழே நகர்த்தப்பட்டு உள்ளன. மேலும் இந்த அப்டேட் வழியாக புதிய கேலக்ஸி ஏஐ அம்சங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன; கூடவே ஏற்கனவே உள்ள அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு உள்ளன.
சாம்சங்கின் புதிய ஒன் யுஐ 7 அப்டேட் ஆனது ஹோம் ஸ்க்ரீன் மற்றும் லாக் ஸ்கிரீனுக்கு புதிய விட்ஜெட்களை கொண்டு வருகிறது. சிஸ்டம் அனிமேஷன்கள் மற்றும் டிரான்ஷிஷன்கள் மேம்படுத்தப்பட்டு, இன்னும் ஸ்மூத் ஆக உள்ளன. ஸ்டேட்டஸ் பாரில் ஒரு புதிய பேட்டரி ஐகான் மற்றும் லாக் ஸ்கிரீனில் மீடியா பிளேபேக், ஸ்டாப்வாட்ச், மேப்ஸ், டைமர், நேவிகேஷன் மற்றும் பல ஆன்கோயிங் மற்றும் லைவ் நோட்டிபிகேஷன்களை காட்டும் ஒரு நொவ் பார் (Now Bar) உள்ளது.
மேற்குறிப்பிட்ட ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து வேறு என்னென்ன மாடல்களுக்கு எப்போது இந்த அப்டேட் கிடைக்கும்? 2025 மே மாதத்தில், கேலக்ஸி எஸ்23 சீரீஸ் (Galaxy S23 Series), கேலக்ஸி எஸ்22 சீரீஸ் (Galaxy S22 Series), கேலக்ஸி எஸ்21 சீரீஸ் (Galaxy S21 Series), கேலக்ஸி இஸட் பிளிப் 5 (Galaxy Z Flip 5), கேலக்ஸி இஸட் போல்ட் 5 (Galaxy Z Fold 5) மற்றும் கேலக்ஸி டேப் எஸ்10, கேலக்ஸி டேப் எஸ்9, மற்றும் கேலக்ஸி டேப் எஸ்8 சீரிஸ் டேப்லெட்ககளுக்கும் இந்த அப்டேட் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
பின்னர் ஜூன் மாதத்தில், கேலக்ஸி ஏ05எஸ் (Galaxy A05s), கேலக்ஸி ஏ06 (Galaxy A06), கேலக்ஸி ஏ14 (Galaxy A14), கேலக்ஸி ஏ14 5ஜி (Galaxy A14 5G), கேலக்ஸி ஏ15 5ஜி (Galaxy A15 5G), கேலக்ஸி ஏ16 5ஜி (Galaxy A16 5G), கேலக்ஸி ஏ25 5ஜி (Galaxy A25 5G), கேலக்ஸி ஏ33 5ஜி (Galaxy A33 5G), கேலக்ஸி ஏ34 5ஜி (Galaxy A34 5G), கேலக்ஸி ஏ35 5ஜி (Galaxy A35 5G), கேலக்ஸி ஏ53 5ஜி (Galaxy A53 5G), கேலக்ஸி ஏ54 5ஜி (Galaxy A54 5G), கேலக்ஸி ஏ55 5ஜி (Galaxy A55 5G), மற்றும் கேலக்ஸி ஏ73 5ஜி (Galaxy A73 5G) உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் இந்த அப்டேட்டை பெறும்.
இதோடு கேலக்ஸி எப்05, கேலக்ஸி எப்14, கேலக்ஸி எப்14 5ஜி, கேலக்ஸி எப்15 5ஜி, கேலக்ஸி எப்16 5ஜி, கேலக்ஸி எப்34 5ஜி, கேலக்ஸி எப்54 5ஜி மற்றும் கேலக்ஸி எப்55 5ஜி ஆகியவற்றுடன் கேலக்ஸி எம்05, கேலக்ஸி எம்14, கேலக்ஸி எம்14 5ஜி, கேலக்ஸி எம்15 5ஜி, கேலக்ஸி எம்16 5ஜி, கேலக்ஸி எம்33 5ஜி, கேலக்ஸி எம்34 5ஜி, கேலக்ஸி எம்35 5ஜி, கேலக்ஸி எம்53 5ஜி, கேலக்ஸி எம்55 5ஜி மற்றும் கேலக்ஸி எம்55எஸ் 5ஜி ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கும் அப்டேட் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








