திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. பழையபடி Paytm க்கு அனுமதி கொடுத்த NCPI.. Google Pay, PhonePe ஆட்டம் முடிந்தது!
2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பேடிஎம் (Paytm) நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட தடைகள் பற்றியும், அதனால் கூகுள் பே (Google Pay) மற்றும் போன்பே (PhonePe) ஆகிய இரண்டு நிறுவனங்களால் யுபிஐ மார்க்கெட்டில் நிகழும் டூயோபோலி (Duopoly) பற்றயும், உங்களில் சிலர் நன்கு அறிந்து இருக்கலாம்.
நினைவூட்டும் வண்ணம் 2024 ஆம் ஆண்டு ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரியில், பேடிஎம் ஆப்பில் புதிய யுபிஐ பயனர்களை சேர்ப்பதற்கு இந்திய ரிசர்வ் வங்கி தடை விதித்தது. இதன்மூலம் இந்திய யுபிஐ மார்க்கெட்டில் ஒரு சேவைக்கான மொத்த சந்தையுமே 2 நிறுவனங்களின் கைகளுக்குள் செல்லும் டூயோபோலி சூழ்நிலை உருவானது; அந்நிறுவனங்கள் கூகுள் பே மற்றும் போன்பே ஆகும்.

தடை மற்றும் முடக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் பேடிஎம் நிறுவனத்தின் பெரும்பலான சேவைகள் பாதிக்கப்பட்டது; பெரிய எண்ணிக்கையிலான பயனர்கள் பேடிஎம் சேவையை விட்டு வெளியேறினர். ஆர்பிஐ-யின் (RBI) இந்த நடவடிக்கைக்கு பிறகு, பேடிஎம் நிறுவனமானது ஒரு மூன்றாம் தரப்பு ஆப் மாடலாக (Third Party App Model) உருமாற வேண்டியிருந்தது.
இதற்கிடையில் பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் ஆனது புதிய யுபிஐ பயனர்களை சேர்ப்பதற்கான அனுமதியை பெற்றுள்ளது. இந்த அனுமதி என்பிசிஐ (NCPI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவிடம் (National Payments Corporation of India) இருந்து நேற்று (அதாவது 2024 அக்டோபர் 22 ஆம் தேதி) வழங்கப்பட்டுள்ளது.
தற்போது, பேடிஎம் நிறுவனமானது அனைத்து என்பிசிஐ வழிகாட்டுதல்கள் (NPCI guidelines) மற்றும் இடர் மேலாண்மை பற்றிய சுற்றறிக்கைகள் (Circulars on risk management), பயன்பாடு மற்றும் யூஆர்-க்கான பிராண்ட் வழிகாட்டுதல்கள் (Brand guidelines for app and QR), பல வங்கி வழிகாட்டுதல்கள் (multi-bank guidelines), டிபிஏபி சந்தை பங்கு (TPAP market share) மற்றும் வாடிக்கையாளர் தரவு (customer data) போன்றவற்றை பின்பற்றுவதாக என்பிசிஐ தெரிவித்துள்ளது.
நினைவூட்டும் வண்ணம், தடைக்கு பின்னர் பேடிஎம் நிறுவனமானது டிபிஏபி சேவையில் அதன் கூட்டாளர்களாக ஆக்சிஸ் வங்கி, யெஸ் வங்கி, எஸ்பிஐ மற்றும் எச்டிஎப்சி வங்கிகளை அதன் கட்டண சேவை வழங்குநர் (PSP) வங்கிகளாக இணைக்க வேண்டியிருந்தது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. பிஎஸ்பி வங்கிகள் யுபிஐ ஆப்களை வங்கி நெட்வொர்க்குடன் இணைக்கின்றன. இந்த மாற்றம் பேடிஎம் நிறுவனத்தின் யுபிஐ சந்தைப் பங்கில் பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அனால் வரும் நாட்களில் இது மெல்ல மெல்ல மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2024 ஆம் ஆண்டு மார்ச் மாத வாக்கில் முழுமையாக வந்த தடை மற்றும் கட்டுப்பாடுகளுக்கு பின்னரும் கூட, பேடிஎம் நிறுவனத்தின் க்யூஆர் கோட் (QR Code) மற்றும் சவுண்ட்பாக்ஸ் (Soundbox) வசதியானது தொடர்ந்து செயல்பட்டது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது; அந்த நேரத்தில் பேடிஎம் நிறுவனர் மற்றும் சிஇஓ-வான விஜய் சேகர் சர்மவும் (Vijay Shekhar Sharma) இதை உறுதிப்படுத்தி இருந்தார்.
பேடிஎம் க்யூஆர், சவுண்ட்பாக்ஸ் மற்றும் இடிசி கார்டு மெஷின் (EDC Card Machine) வசதிகளானது எப்போதும் போல தொடர்ந்து செயல்படும். புள்ளி #21-இல் ஆர்பிஐ வழங்கிய சமீபத்திய FAQ-வில் இது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. பேடிஎம் தடை குறித்து எந்தவொரு வதந்திகளையும் நம்ப வேண்டாம் என்று விஜய் சேகர் சர்மா கூறி இருந்தார்.
ஏனென்றால் அந்த நேரத்தில் பேடிஎம் க்யூஆர், சவுண்ட்பாக்ஸ் வேலை செய்யாது என்கிற வதந்திகளும், தவறான தகவல்களும் கடுமையாக பரவின. அதை தடுக்க பேடிஎம் நிறுவனமானது விளம்பரம் செய்ய வேண்டி இருந்தது. அந்த விளம்பரத்தில், பேடிஎம் டிவைஸ்கள் மற்றும் க்யூர் கோட் ஆனது தொடர்ந்து செயல்படும். இன்றும், நாளையும், எப்போதும்!" என்கிற வாசகம் இடம்பெற்று இருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. இன்று அந்த வாசகம் இன்னும் பலமாகி உள்ளது போல் தெரிகிறது!


Click it and Unblock the Notifications








