குட் நியூஸ்.. மறுபடியும் ரூ.200 க்கு இறங்கிய அம்பானி.. ஒரே ஒரு டெய்லி 1GB Jio பிளான்.. தரமான வேலிடிட்டி!
முகேஷ் அம்பானி (Mukesh Ambani) தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Relaince Jio) நிறுவனம் ஆனது, தனது ப்ரீபெய்ட் போர்ட்ஃபோலியோவை கடுமையாக நெறிப்படுத்தி, தற்போது டெய்லி 1ஜிபி டேட்டாவை (Daily 1GB Data) வழங்கும் ஒரே ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தை மட்டுமே வழங்குகிறது.
அது ரூ.209 திட்டம் ஆகும். இப்போதைக்கு ஜியோ சேவையின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ஒரேவொரு டெய்லி 1ஜிபி டேட்டா பிளான் இதுமட்டுமே ஆகும். இருப்பினும், இந்த திட்டம் ஜியோ.காம் (Jio.com) வலைத்தளத்தில் பட்டியலிடப்படவில்லை ஆனால் மைஜியோ (MyJio) ஆப் மூலம் பிரத்தியேகமாக ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது.

ஆர்வமுள்ள பயனர்கள் ரூ.209 திட்டத்தை மைஜியோ ஆப்பில் உள்ள மலிவு விலை பேக்குகள் பிரிவின் (Affordable Packs section) கீழ் உள்ள மதிப்பு திட்டங்கள் பிரிவின் (Value Plans category) கீழ் காணலாம். இல்லை என்றால் வெறுமனே உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள மைஜியோ ஆப்பிற்குள் நுழைந்து, மேலே தோன்றும் சேர்ச் பாரில் 209 என்று டைப் செய்வதன் மூலம் ரூ.209-ஐ கண்டுபிடிக்கலாம்.
ஜியோவின் ரூ.209 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? ரூ.209 ப்ரீபெய்ட் திட்டம் ஒரு நாளைக்கு 1 ஜிபி அதிவேக டேட்டாவை வழங்குகிறது. இது 22 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வருகிறது. ஆக இதன்கீழ் மொத்தம் 22 ஜிபி டேட்டா கிடைக்கும்.
மேலும் இந்த பேக்கில் வரம்பற்ற வாய்ஸ் கால், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் தொகுக்கப்பட்ட ஓடிடி நன்மைகளின் ஒரு பகுதியாக ஜியோடிவி மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் ஸ்டோரேஜிர்கான அணுகல் ஆகிய நன்மைகளும் கிடைக்கும். தினசரி அதிவேக ஒதுக்கீடு தீர்ந்தவுடன் (டெய்லி 1ஜிபி டேட்டா தீர்ந்தவுடன்) மீதமுள்ள நாளுக்கு டேட்டா வேகம் 64 கேபிபிஎஸ் ஆக குறையும்.
இதேபோல நீக்கப்பட்டதாக கூறப்படும் ரூ.249 திட்டமானது ஆஃப்லைனில் (ரீசார்ஜ் கடைகளில்) ரீசார்ஜ் செய்ய கிடைப்பதாகவும் கூறப்படுகிறது (டெலிகாம்டால்க் அறிக்கையின்படி). 28 நாட்களுக்கு டெய்லி 1ஜிபி டேட்டாவை வழங்கிய ரூ.249 திட்டமானது சமீபத்தில் மை ஜியோ ஆப் மற்றும் ஜியோ வலைத்தளம் ஆகிய இரண்டிலிருந்தும் நீக்கப்பட்டது. ஆனாலும் ரூ.249 பேக் ஆனது சில்லறை விற்பனை நிலையங்களில் கிடைப்பதாக கூறப்படுகிறது
ஜியோவிடம் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் மற்ற மலிவு விலை ப்ரீபெய்ட் பேக்குகள்:
- ரூ.189 பேக் (வரம்பற்ற வாய்ஸ், 300 எஸ்எம்எஸ் மற்றும் 28 நாட்கள் செல்லுபடியாகும், 2 ஜிபி டேட்டா) -
- ரூ.799 பேக் (வரம்பற்ற வாய்ஸ், 100 எஸ்எம்எஸ்/நாள், மற்றும் 1.5 ஜிபி/நாள் - மொத்தம் 126 ஜிபி. 84 நாட்கள் செல்லுபடியாகும்)
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.189 திட்டம் மற்றும் ரூ.799 திட்டம் - ஆகிய இரண்டு பேக்குகளிலும் ஜியோடிவி மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் சந்தா வழங்கப்படுகின்றன. மேற்குறிப்பிட்ட அதிவேக டேட்டா தீர்ந்த பிறகு 64 கேபிபிஎஸ் என்கிற குறைக்கப்பட்ட வேகத்தில் வரம்பற்ற டேட்டாவும் வழங்கப்படுகிறது.
இந்த இடத்தில் ஜியோவின் ரூ.100 ப்ரீபெய்ட் திட்டமும் கவனிக்கப்பட வேண்டும். இதுவொரு ஆட்-ஆன் பேக் ஆகும். இதன்கீழ் கிடைக்கும் டேட்டாவிற்கு மற்றும் இதர நன்மைகளுக்கு 30 நாட்கள் என்கிற வேலிடிட்டி கிடைத்தாலும், இந்த திட்டத்திற்க்கென சர்வீஸ் வேலிடிட்டி எதுவும் கிடையாது. இதை ஏற்கனவே ஆக்டிவ் ஆக உள்ள திட்டத்திற்கு மேலாக மட்டுமே ரீசார்ஜ் செய்ய முடியும்.
ரூ.100-ன் கீழ் உங்களுக்கு மொத்தம் 5ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த டேட்டா உங்கள் அக்கவுண்டில் மொத்தம் 30 நாட்களுக்கு இருக்கும். இதோடு 30 நாட்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவை (மொபைல் / டிவி), தகுதியுள்ள பயனர்களுக்கு ஜியோ கோல்டில் 1% கூடுதல் தங்கம் (இந்த சலுகையை பெற +91-8010000524 என்கிற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் கோரலாம்) மற்றும் ஜியோஹோம் சேவையின் கீழ் புதிய கனெக்ஷனில் 2 மாத இலவச சோதனை ஆகிய கூடுதல் நன்மைகளும் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








