சுந்தர் பிச்சைனா சும்மாவா.. உங்க போன்ல 6GB RAM இருக்கா.. அது போதும்! Google யூசர்களுக்கு அடிச்சது அதிர்ஷ்டம்!
சுந்தர் பிச்சை (Sundar Pichai) தலைமையிலான கூகுள் (Google) நிறுவனம் ஆனது, தெற்காசிய நாடுகளில் ஜெமினி (Gemini) எனப்படும் அதன் ஏஐ சாட்பாட் தொழில்நுட்பத்தை (AI Chatbot Technology) விரிவுபடுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையை எடுத்து உள்ளது. இந்த விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக ஜெனிமி ஆப் (Gemini App) மற்றும் அதன் மேம்பட்ட அம்சங்கள் (Advanced Features) ஆனது இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் உள்ள பயனர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
முன்னதாக, ஜெமினி ஆப் ஆனது தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் மட்டுமே அணுக கிடைத்தது. அதுமட்டுமின்றி ஆரம்பத்தில் இது தேர்ந்தெடுக்கப்பட்ட கூகுள் பிக்சல் (Google Pixel) மற்றும் சாம்சங் கேலக்ஸி (Samsung Galaxy) ஸ்மார்ட்போன்களில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை!

6 ஜிபி ரேம் அல்லது அதற்கு மேலான ரேம் உடன் வரும் எந்தவொரு ஸ்மார்ட்போனிலும் எந்த தொந்தரவும் இல்லாமல், மெசேஜஸ் ஆப்பில் ஜெமினி ஏஐ சாட்பாட்டை பயன்படுத்தலாம். கூகுளின் இந்த நடவடிக்கை கூகுளின் அட்வான்ஸ்டு மெசேஜிங்ஹ் டூல்களின் பயன்பாட்டை ஜனநாயகப்படுத்துகிறது மற்றும் மில்லியன் கணக்கான புதிய பயனர்களுக்கு ஜெமினி ஏஐ-யின் அணுகலை விரிவுபடுத்துகிறது.
பயனர்களின் தகவல்தொடர்பு அனுபவத்தை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள ஜெமினி ஆப் ஆனது மெசேஜ்களை உருவாக்குதல் மற்றும் யோசனைகளை வழங்குவது போன்ற உதவிகளை செய்யும். தற்போது வரையிலாக ஜெமினி ஏஐ சாட்பாட் ஆனது ஆங்கிலம் (பல நாடுகளில்) மற்றும் பிரெஞ்சு (கனடாவில்) மொழிகளை ஆதரிக்கிறது. மேலும் பல மொழிகள் விரைவில் சேர்க்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

உலகளவில் 165-க்கும் மேற்பட்ட பிராந்தியங்களில் கிடைக்கும் போதிலும், ஜெமினி பிளாட்ஃபார்ம் ஆனது குறிப்பிடத்தக்க வகையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை சென்றடையவில்லை. எதிர்காலத்தில் பல மொழிகளுக்கான ஆதரவோடு சேரத்து, கூகுள் ஜெனிமி ஏஐ சாட்பாட் ஆனது பல பிராந்தியங்களில் அணுக கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்டாண்டர்ட் ஜெமினி சேவையுடன், 1.5 ப்ரோ தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் ஜெமினி அட்வான்ஸ்டு-ஐயும் கூகுள் வெளியிட்டுள்ளது. ஜெமினியின் இந்த வெர்ஷன் ஆனது 1-மில்லியன் டோக்கன் கான்டெக்ஸ்ட் விண்டோ, ஆவணப் பதிவேற்றங்கள் மற்றும் மேம்பட்ட தரவு பகுப்பாய்வு அம்சங்களை வழங்குவதன் மூலம் ஜெமினி ஏஐ சாட்பாட்டின் திறன்களை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்கிறது.

ஜெமினி அட்வான்ஸ்டு (Gemini Advanced) ஆனது மேற்குறிப்பிட்ட மேம்பாடுகளின் வழியாக பயனர்களின் உற்பத்தித்திறனை நெறிப்படுத்தவும், மேலும் சிக்கலான பணிகளுக்கு வலுவான ஏஐ உதவியை வழங்கவும் வடிவமைக்கப்பட்டு உள்ளன. முன்னதாக கூகுள் வொர்க்ஸ்பேஸிலும் கூட பல புதிய ஏஐ அம்சங்கள் சேர்க்கப்பட்டதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
மொத்த கூகுள் வொர்க்ஸ்பேஸ் சூட்டிற்கும் ஜெமினி 1.5 ப்ரோ (Gemini 1.5 Pro) அப்டேட் வந்துள்ளது. இந்த அப்டேட்டின் மூலம் ஜிமெயில் பயனர்கள் ஜெமினி ஆதரவுடன் இமெயில் மேனேஜ்மென்டை (Email Management) மேம்படுத்த முடியும். மேலும் சமீபத்திய ஸ்கூல் இமெயில்களை சுருக்கவும் (Summarise recent school emails), அட்டாச்மென்ட்களை அனலைஸ் செய்யவும் (analyse attachments) மற்றும் பயனர்களுக்கு முக்கிய புள்ளிகள் மற்றும் செயல்களை முன்னிலைப்படுத்தும் வேலைகளையும் செய்ய முடியும்.
ஜிமெயில் தவிர்த்து கூகுள் மீட் (Google Meet) பயனர்கள் லாங் ரெக்கார்டிங்கள் மற்றும் டிராஃப்ட் ரிப்ளைகளை (Long recordings and draft replies) சம்மரைஸ் செய்யவும் முடியும். மேலும் ஜெமினி 1.5 ப்ரோ ஆனது இப்போது வொர்க்ஸ்பேஸ் லேப்ஸ் (Workspace Labs) பயனர்களுக்கும் கிடைக்கிறது. கூகுள் போட்டோஸ்-க்கு தான் மிகப்பெரிய அப்டேட் கொண்டு வரப்பட்டுள்ளது.
புதிய ஜெமினி-பவர்டு அம்சத்தின் மூலம், கூகுள் போட்டோஸில் 'ஆஸ்க் போட்டோஸ்' (Ask Photos) என்கிற புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கூகுள் போட்டோஸில் புகைப்படங்களை தேடுவது மிகவும் எளிதாகிவிடும். லைசென்ஸ் பிளேட்டை (License Plate) கண்டறிவது அல்லது தங்கள் குழந்தையின் மைல்ஸ்டோன்களை கண்காணிப்பது போன்ற குறிப்பிட்ட கேள்விகளை கூட கேட்க முடியும்.


Click it and Unblock the Notifications