Home
News

WhatsApp Settings-க்கு வந்த புது Default அம்சம்.. இனி ஒவ்வொரு முறையும் HD-னு கிளிக் பண்ண வேண்டாம்!

சில மாதங்களுக்கு முன்பு வரையிலாக வாட்ஸ்அப் (WhatsApp) வழியாக புகைப்படங்களை பகிர்வது என்பது.. வேறு வழி இல்லாமல் செய்யும் ஒரு "போட்டோ ஷேரிங் செயல்முறையாகவே" இருந்தது. ஏனென்றால் வாட்ஸ்அப் வழியாக பகிரப்படும் புகைப்படங்களின் குவாலிட்டி ஆனது மிகவும் மோசமானதாக இருக்கும். இதை சரிசெய்யும் நோக்கத்தின் கீழ் தான், வாட்ஸ்அப்பில் ஹை-டெஃபினிஷன் புகைப்படங்களை அனுப்ப உதவும் எச்டி அம்சம் சேர்க்கப்பட்டது. இது ஒரு புகைப்படத்தை ஷேர் செய்வதற்கு முன்பாக, இது எஸ்டி தரத்தில் அனுப்பப்பட வேண்டுமா அல்லது எச்டி தரத்தில் அனுப்பப்பட வேண்டுமா என்பதை தேர்வு செய்ய அனுமதித்தது.

ஆனால் இந்த அம்சத்தை - நீங்கள் ஒரு புகைப்படத்தை அனுப்பும் போது - ஒவ்வொரு முறையும் தேர்வு செய்ய வேண்டியிருக்கும்.ஏனென்றால் பெரும்பாலான பயனர்கள் எச்டி-க்கு பதிலாக எஸ்டி (ஸ்டாண்டர்ட்-டெஃபினிஷன்) தரத்தின்கீழ் புகைப்படங்களை அனுப்புவதே போதும் என்று நினைக்கிறார்கள். அவர்கள் டேட்டாவை வீணடிக்க விரும்பவில்லை.

WhatsApp Settings-க்கு வந்த புது Default HD அம்சம்!

ஆனால் சிலர் இதை இது சலிப்பான செயல்முறையாக அல்லது தேவையற்ற ஒரு கூடுதல் வேலையாக பார்க்கிறார்கள். இந்த பட்டியலில் நீங்களும் ஒருவர் என்றால், உங்களுக்காகவே ஒரு டீபால்ட் அம்சம் வாட்ஸ்அப் செட்டிங்ஸ்-ல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதென்ன அம்சம்? அதை ஆன் அல்லது எனேபிள் செய்வது எப்படி? இதனால் என்ன பயன்? இதோ விவரங்கள்:

வாட்ஸ்அப் நிறுவனம் அதன் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான லேட்டஸ்ட் அப்டேட்-ஐ வெளியிட்டுள்ளது. இது ஒரு முக்கியமான அப்டேட் ஆகும். ஏனென்றால் இதில் பலருக்கும் பயனுள்ள மிகவும் முக்கியமான அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் செட்டிங்ஸ்-ல் உள்ள மீடியா அப்லோட் குவாலிட்டி ஆப்ஷனில் ( Media Upload Quality Option) எச்டி குவாலிட்டி (HD Quality) என்கிற ஆப்ஷன் சேர்க்கப்பட்டுள்ளது.

WhatsApp Settings-க்கு வந்த புது Default HD அம்சம்!

இதுவொரு டீபால்ட் அம்சம் ஆகும். அதாவது இந்த விருப்பத்தை ஒருமுறை தேர்வு செய்துவிட்டால், ஒவ்வொரு முறையும் போட்டோக்களை அனுப்பும் போது எச்டி ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டிய வேலை இருக்காது. மாறாக நீங்கள் அனுப்பும் எல்லா போட்டோக்களுமே டீபால்ட் ஆகவே எச்டி தரத்தின்கீழ் அனுப்பப்படும். இது வாட்ஸ்அப் வழியாக சில வேலைகளுக்காக அடிக்கடி போட்டோக்களை டிரான்ஸ்பர் செய்து கொள்ள வேண்டியவர்களுக்கு ஒரு பெரிய நிவாரணமாக இருக்கும்.

தற்போது வரையிலாக இந்த அம்சம் ஆண்ட்ராய்டு பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. விரைவில் இது ஸ்டாண்டர்ட் வெர்ஷனிற்கும் வந்துசேரலாம். அப்படி வரும் போது, நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் வாட்ஸ்அப் செட்டிங்ஸ்-க்கு சென்று ஸ்டோரேஜ் அன்ட் டேட்டா பிரிவின் கீழ் காணப்படும் மீடியா அப்லோட் குவாலிட்டி ஆப்ஷனின் கீழ் கிடைக்கும் எச்டி குவாலிட்டி என்கிற விருப்பத்தை தேர்வு செய்யவும். அவ்வளவு தான்.

WhatsApp Settings-க்கு வந்த புது Default HD அம்சம்!

இதேபோல வாய்ஸ் நோட்களை அப்படியே டெக்ஸ்ட் ஆக மாற்ற அனுமதிக்கும் புதிய அம்சத்தையும் கூட வாட்ஸ்அப் நிறுவனம் சோதனை செய்து வருகிறது. இந்த அம்சம் வாய்ஸ் மெசேஜ்களை கேட்பதை விட அதை டெக்ஸ்ட் ஆக படிக்க விரும்பும் பயனர்களுக்கு பெரிய நிவாரணமாக இருக்கும். வாட்ஸ்அப்பின் இந்த புதிய வாய்ஸ் டிரான்ஸ்கிரிப்ஷன் அம்சமானது ஆங்கிலம், ரஷ்யன், ஸ்பானிஷ், போர்த்துகீசியம் (பிரேசில்) மற்றும் இந்தி என மொத்தம் 5 மொழிகளில் சோதனை செய்யப்படுகிறது

சோதனை கட்டத்தை தாண்டிய பின்னர் இந்த அம்சத்தின் கீழ் மேலும் பல மொழிகள் சேர்க்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. அந்த பட்டியலில் தமிழ் இடம்பெறுமா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. இதற்கு முன்னதாக வாட்ஸ்அப்பிற்கு 3 புதிய க்ரூப் கால் மற்றும் வீடியோ கால் அம்சங்கள் வரும் என்பதையும் வாட்ஸ்அப் உறுதிப்படுத்தி இருந்தது.

இதன் கீழ் ஆடியோவுடன் ஸ்கிரீன் ஷேரிங் (Video Sharing With Audio), வீடியோ காலில் அதிக பங்கேற்பாளர்களை (More Participants in a Video Call) சேர்க்கும் ஆதரவு மற்றும் ஸ்பீக்கர் ஸ்பாட்லைட் (Speaker Spotlight) போன்ற அம்சங்கள் சேர்க்கப்பட உள்ளன.

இதேபோல டிவைஸ்களுக்கு இடையேயான சாட் டிரான்ஸ்பர் (Chat transfer between devices) வசதியில் புதிய மாற்றம் ஒன்றையும் வாட்ஸ்அப் கொண்டுவரவுள்ளது. வாட்ஸ்அப்பின் 2.24.9.19 பீட்டா வெர்ஷன் வழியாக சாட் டிரான்ஸ்பருக்கான புதிய அம்சம் ஒன்று சோதனை செய்யப்பட்டு வருகிறது. இது கூகுள் ட்ரைவ் தேவை இல்லாமலேயே ஒரு க்யூஆர் கோட் வழியாக சாட் ஹிஸ்டரி / சாட் டேட்டாவை நேரடியாக ஒரு டிவைஸில் இருந்து மற்றொரு டிவைஸிற்கு மாற்ற உதவும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Good News For WhatsApp Users New Default HD Quality Option Added in Settings Media Upload Quality
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X