Home
News

ஏப்ரல் 14 முதல் ஒரே ஜாலி தான்.. தமிழ்நாடு BSNL கஸ்டமர்களுக்கு ஒரு குட் நியூஸ்!

பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ள தனது வாடிக்கையாளர்களுக்காக ஐபிடிவி (IPTV) என்று சுருக்கமாக அழைக்கப்டுடம் இன்டர்நெட் ப்ரோட்டோகால் டெலிவிஷன் (Internet Protocol Television) என்கிற புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது. ஐபிடிவி என்றால் என்ன? இதன் கீழ் பிஎஸ்என்எல் கஸ்டமர்களுக்கு என்னென்ன கிடைக்கும்? இதோ விவரங்கள்:

ஐபிடிவி என்றால் என்ன? ஐபிடிவி அல்லது இன்டர்நெட் ப்ரோட்டோகால் டெலிவிஷன் என்பது ஒரு ஆன்லைன் சேவை (Online Service) ஆகும். இதன்கீழ் டிவி (TV) அல்லது ஸ்மார்ட்போன் (Smartphone) வழியாக லைவ் டிவி சேனல்கள் (Live TV Channels) உட்பட பல வகையான ஆன்லைன் கன்டென்ட்டை ஸ்ட்ரீம் செய்ய முடியும்.

ஏப்ரல் 14 முதல்.. தமிழ்நாடு BSNL கஸ்டமர்களுக்கு ஒரு குட் நியூஸ்!

ஒரே ஒரு கனெக்ஷன் போதும்! பிஎஸ்என்எல் ஐபிடிவி சேவையின் கீழ், இந்நிறுவனம் பிராட்பேண்ட் கனெக்ஷன் உடன் சேர்த்து "பெரிய எண்ணிக்கையிலான" டிவி சேனல்களுக்கான அணுகலை வழங்கும். அதாவது இந்த சேவையின் கீழ் இணையும் பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு டிவி மற்றும் பிராட்பேண்ட் சேவைகளுக்கென 2 வெவ்வேறு கனெக்ஷன்கள் தேவைப்படாது.

ஏப்ரல் 14 முதல்! கிடைக்கப்பெற்ற தகவலின்படி வருகிற ஏப்ரல் 14 முதல், நாகர்கோவில், திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பிஎஸ்என்எல் எஃப்டிடிஎச் (பாரத் ஃபைபர்) வாடிக்கையாளர்களுக்கு ஐபிடிவி சேவைகள் கிடைக்கும். பின்னர் இந்த சேவை தமிழ்நாடு வட்டம் முழுவதும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.

பிஎஸ்என்எல் ஐபிடிவி-யை பயன்படுத்துவது எப்படி? பிஎஸ்என்எல் ஐபிடிவி-க்காக பிஎஸ்என்எல் இ2ஐஎஸ் ஐபிடிவி (BSNL E2IS IPTV) எனப்படும் இன்-ஹவுஸ் லான்ச்சர் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு டிவி மற்றும் ஆண்ட்ராய்டு ஐபிடிவி பாக்ஸில் பயன்படுத்தும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த லான்ச்சர் கூகுள் பிளேஸ்டோரில் (Google Play Store) வழியாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.

எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும்? பிஎஸ்என்எல் எஃப்டிடிஎச் சேவையின் கீழ் கிடைக்கும் ஐபிடிவி-யை பயன்படுத்தும் போது, அதற்கான டேட்டா பயன்பாட்டிற்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது. இது ஏற்கனவே உள்ள மற்றும் புதிய எஃப்டிடிஎச் வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும். ஆனால் ஐபிடிவி-க்கான அணுகலை பெற வெவ்வேறு விலைப்பிரிவுகளில் திட்டங்கள் உள்ளன.

பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் ஐபிடிவி சேவைகளை அதன் ஃபைபர் சேவையின் வழியாக மாதம் ரூ.130 க்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. எச்டி பேக்குகளின் கீழ் இரண்டு திட்டங்கள் உள்ளன. எச்டி ஸ்டார்டர் ரூ.270 க்கு கிடைக்கிறது; இது 211 டிவி சேனல்களை வழங்கிறது. அடுத்ததாக எச்டி போனான்ஸா ரூ.400 க்கு கிடைக்கிறது; இது 223 டிவி சேனல்களை வழங்குகிறது.

ஐபிடிவி-க்காக முன்பதிவு செய்வது எப்படி? பிஎஸ்என்எல்-ன் இந்த ஐபிடிவி சேவையானது ஆண்ட்ராய்டு டிவி செட்களில், செட்-டாப் பாக்ஸ் இல்லாமலேயே வேலை செய்யும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. நீங்களொரு பிஎஸ்என்எல் எஃப்டிடிஎச் வாடிக்கையாளராக இருந்தால் "fms.bsnl.in/iptvreg" வழியாக, அல்லது இது தொடர்பாக பிஎஸ்என்எல் அனுப்பிய எஸ்எம்எஸ்-ல் உள்ள இணைப்பை பயன்படுத்தி, ஐபிடிவி-க்கான கோரிக்கையை முன்பதிவு செய்யலாம்.

ஆந்திர பிரதேசம், கேரளா, இப்போது தமிழ்நாடு! பிஎஸ்என்எல்-ன் இந்த புதிய ஐபிடிவி சேவையானது முதன்முதலில் ஆந்திர பிரதேசத்தில் (Andhra Pradesh) கடந்த ஜனவரி 2023இல் அறிமுகமானது. பின்னர் கேரளாவின் (Kerala) திருவனந்தபுரத்தில் கடந்த பிப்ரவரி 2023இல் அறிமுகமானது. தற்போது தமிழ்நாட்டிற்கும் (Tamil Nadu) வந்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Good News For Tamil Nadu BSNL Customers New IPTV Service Introduced All you need to Know
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X