எழுதி வச்சிக்கோங்க! இந்த 2 Redmi போன்களும் OnePlus-ஐ ஓரங்கட்டும்!

|

ரெட்மி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் மட்டுமே 'பேட்டரி வெடிப்பு' நிகழ்வுகளில் தொடர்புடைவைகளாக இல்லை என்றாலும் கூட, Redmi லோகோவை பார்த்தாலே சிலர் "இது போன் இல்ல, வெடிகுண்டு!" என்கிற கேலிப்பேச்சுகளை கட்டவிழ்த்து விடுவதை இன்னமும் பார்க்க முடிகிறது.

இந்த அளவிற்கு மிகவும் மோசமான விமர்சனங்களை சந்தித்து இருந்தாலும் கூட, இன்று பலரின் கைகளில் தவழ்வதே - ரெட்மி நிறுவனத்தின் மிகப்பெரிய வெற்றி ஆகும்!

அதற்கு முக்கிய காரணம் - வேற யாரும் இல்ல நம்ம 'K' தான்!

அதற்கு முக்கிய காரணம் - வேற யாரும் இல்ல நம்ம 'K' தான்!

ரெட்மியின் வெற்றிக்கு பின்னணியில் - மக்களின் மனதில், இந்த பிராண்டின் மீதான நம்பிக்கையை கொண்டு வந்ததில் - ரெட்மி நிறுவனத்தின் 'கே' சீரீஸ் ஸ்மார்ட்போன்களுக்கு முக்கிய பங்குண்டு!

எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் இன்னமும் 2019 ஆம் ஆண்டில், இந்தியாவில் அறிமுகமான ஒரு ரெட்மி கே சீரிஸ் ஸ்மார்ட்போனை இன்னுமும் பயன்படுத்தி வருகிறார்; அதுமட்டுமின்றி இது போல் இன்னொரு ரெட்மி போன் வரவே இல்லை என்று புகழும் பாடுவார்!

அது உண்மை தான்.. அப்படி ஒரு மாடல்

அது உண்மை தான்.. அப்படி ஒரு மாடல் "இன்னும்" வரவில்லை!

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் ஆன சியோமிக்கு சொந்தமான துணை நிறுவனமான ரெட்மியிடம் இருந்து கடைசியாக இந்தியாவில் அறிமுகமான கே சீரீஸ் ஸ்மார்ட்போன் - ரெட்மி கே20 ப்ரோ மாடல் ஆகும்; இது 2019 ஆம் ஆண்டில் அறிமுகமானது.

அந்த பீரியட்-இல் வந்த மொத்த ஸ்மார்ட்போன்களையும் தூக்கி சாப்பிடும் படியான - ஃபிளாக்ஷிப் சிப்செட், பாப்-அப் கேமரா மற்றும் பிரமிக்க வைக்கும் பேனல் டிசைனுடன் "கொடுக்குற காசுக்கு 100% வொர்த்து!" என்கிற விலையில் ஒரு பெஸ்ட் ஸ்மார்ட்போனாக திகழ்ந்தது (திகழ்ந்தும் வருகிறது).

இந்தியாவில் அறிமுகமான 50-இன்ச் OnePlus TV; விலையை சொன்னா நம்புவீங்களா?இந்தியாவில் அறிமுகமான 50-இன்ச் OnePlus TV; விலையை சொன்னா நம்புவீங்களா?

POCO வந்தாலும் வந்துச்சு.. Redmi K Series இன் மேட்டர் ஓவர்!

POCO வந்தாலும் வந்துச்சு.. Redmi K Series இன் மேட்டர் ஓவர்!

ரெட்மி கே20 ப்ரோ மாடலுக்கு பிறகு வெளியான ரெட்மி கே சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் (Redmi K30 தொடங்கி) இந்தியாவில் - அதே பெயரின் கீழ் - அறிமுகம் செய்யப்படாமல், Poco X2 போன்ற போக்கோ பிராண்டட் போன்களாக "மறுபெயரிடப்பட்டு" இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன.

ஒருத்தன் (ரெட்மி) கஷ்டப்பட்டு மக்கள் மனதில் நல்ல பெயரை வாங்கி மேலே வருவானாம். நடுவுல புகுந்து ஒருத்தன் (போக்கோ) எல்லாமே எனக்கு தான்னு வாங்கிப்பானாம். அது வேலைக்கு ஆகவில்லை, அதாவது ரெட்மி கே சீரீஸிற்கு இருந்த 'மவுசு' ரீபிராண்டட் செய்யப்பட்ட போக்கோ மாடல்களுக்கு கிடைக்கவில்லை!

எனவே.. டைரக்ட்-ஆ

எனவே.. டைரக்ட்-ஆ "அந்த" சிங்கமே களத்துல இறங்குது!

ஆம்! ​​​​ரெட்மி இந்தியா பதிவிட்டுள்ள ஒரு லேட்டஸ்ட் ட்வீட் வழியாக, நிறுவனத்தின் ஐகானிக் கே-சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் (அதே பெயரின் கீழ்) விரைவில் இந்தியாவுக்கு திரும்ப உள்ளதை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது.

ஆனாலும், சரியாக எந்த ரெட்மி கே-சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவிற்கு வருகிறது என்பது பற்றிய விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

Xiaomi-யின் தந்திரம்! ரூ.80,000-க்கு Ultra எதுக்கு? கம்மி விலையில் Pro இருக்கு!Xiaomi-யின் தந்திரம்! ரூ.80,000-க்கு Ultra எதுக்கு? கம்மி விலையில் Pro இருக்கு!

ஆனால் கண்டிப்பாக

ஆனால் கண்டிப்பாக "இது" தான் வரும்!

இருப்பினும் சீனாவில் அறிமுகமான ரெட்மியின் லேட்டஸ்ட் கே-சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வைத்து பார்க்கும் போது, புதிய கே50 சீரிஸ் மாடல்கள் இந்தியாவுக்கு கொண்டுவருவதற்கான சரியான தேர்வுகளாக இருக்கலாம் என்பது போல் தெரிகிறது.

அறியாதோர்களுக்கு Redmi K50 சீரிஸின் கீழ் வெண்ணிலா மற்றும் ப்ரோ என்கிற இரண்டு மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன!

Redmi K50 மற்றும் Redmi K50 Pro - ஏன் பெஸ்ட் ஆப்ஷன்கள்?

Redmi K50 மற்றும் Redmi K50 Pro - ஏன் பெஸ்ட் ஆப்ஷன்கள்?

ஏனெனில், ரெட்மி கே50 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது மீடியாடெக்கின் புதிய ஃபிளாக்ஷிப் சிப்களை பேக் செய்யும் பிளாக்ஷிப் மாடல்கள் ஆகும்.

வெண்ணிலா கே50 ஆனது Dimensity 8100 சிப்பைக் கொண்டிருக்க, மறுகையில் உள்ள ப்ரோ வேரியண்ட் ஆனது மிகவும் சக்திவாய்ந்த Dimensity 9000 சிப் உடன் வருகிறது.

Motorola கிட்ட இருந்து இப்படி ஒரு Budget Phone-ஐ யாருமே எதிர்பார்க்கல! ஜூலை 11 முதல் SALE!Motorola கிட்ட இருந்து இப்படி ஒரு Budget Phone-ஐ யாருமே எதிர்பார்க்கல! ஜூலை 11 முதல் SALE!

அப்போ சிப்செட் மட்டும் தான் வெயிட்-ஆ!?

அப்போ சிப்செட் மட்டும் தான் வெயிட்-ஆ!?

இல்லவே இல்லை! 6.7-இன்ச் அளவிலான AMOLED டிஸ்பிளேக்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய பெரிய பேட்டரிகள் உள்ளிட்ட "விலையை மீறிய சில அம்சங்களையும்" ரெட்மி கே50 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் பேக் செய்கின்றன.

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், கே50 ஸ்மார்ட்போனில் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்ட 5,500mAh பேட்டரியும், கே50 ப்ரோ மாடலில் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் உடனான 5,000mAh பேட்டரியும் உள்ளது.

'டெம்ப்ட்' ஏற்றும் விலை நிர்ணயம்!

'டெம்ப்ட்' ஏற்றும் விலை நிர்ணயம்!

"ஆரம்பிச்சதுல இருந்து போன்-ஐ பத்தி மட்டுமே பேசுறீயேப்பா! விலையை பற்றி வாயே திறக்க மாட்டீங்கிறீயேப்பா? என்று டென்சன் ஆக வேண்டாம்.

ஒரு ஸ்மார்ட்போனில் என்னென்ன உள்ளது என்பதை பற்றி பேசாமல் அதன் விலையை மட்டும் சொல்வதில் எந்த புண்ணியமும் இல்லை, அதனால் தான்!

சீன விலை விவரங்களை பொறுத்தவரை Redmi K50 Pro ஆனது சுமார் ரூ.35,800 முதல் என்கிற விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ஆகும்.

மறுகையில் உள்ள Redmi K50 ஆனது தோராயமாக ரூ.28,700 முதல் (8ஜிபி ரேம் + 128ஜிபி) என்கிற விலைக்கு வாங்க கிடைக்கிறது.

நிறைய பெண்கள் கையில் iPhone இருக்குற இந்த நேரத்துல இப்படி ஒரு ஆபத்தா?நிறைய பெண்கள் கையில் iPhone இருக்குற இந்த நேரத்துல இப்படி ஒரு ஆபத்தா?

ஆகமொத்தம், ஒன்பிளஸ் நோர்ட் மாடல்களுக்கு சிக்கல் ரெடி!

ஆகமொத்தம், ஒன்பிளஸ் நோர்ட் மாடல்களுக்கு சிக்கல் ரெடி!

ரெட்மி கே50 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் இதே விலையின் கீழ் இந்தியாவிலும் அறிமுகமாகும் பட்சத்தில், ரூ.30,000 மற்றும் ரூ.35,000 போன்ற பட்ஜெட் பிரிவுகளை "ஆட்சி செய்யும்" பல ஸ்மார்ட்போன்கள் காணாமல் போகும் என்பதில் சந்தேகமே வேண்டாம்; குறிப்பாக OnePlus Niord மாடல்கள்!

Photo Courtesy: Xiaomi Website

Best Mobiles in India

English summary
Good News for Redmi Fans Iconic K Series Smartphones Coming Back to India K50 Pro may launch soon

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X