Home
News

ரயில் பயணிகளுக்கு செம்ம குட் நியூஸ்! டிக்கெட் முன்பதிவில் புதிய மாற்றம், இனி கடைசி நேரத்திலும் புக் செய்யலாம்!

இந்தியா முழுவதும் தொலைதூர பயணங்களுக்கு பேருந்து மற்றும் விமான போன்றவற்றில் பயணம் செய்வதை விட ரயிலில் பயணம் செய்யத் தான் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதுவும் குறைந்த கட்டணத்தில் சௌகரியமான பயணம் செய்ய முடியும் என்பதால் தான் அதிக மக்கள் ரயில் பயணத்தைத் தேர்வு செய்கின்றனர்.

இந்நிலையில் ரயில் டிக்கெட் (Train Tickets) முன்பதிவு செய்வதில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

ரயில் பயணிகளுக்கு செம்ம குட் நியூஸ்.. முன்பதிவில் புதிய மாற்றம்!

அதாவது இதுவரை, ரயில் புறப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு நிறுத்தப்பட்டு விடும். ஆனால் இனி அந்த கவலை தேவையில்லை. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் முன்பதிவு செய்யப்பட்ட ரயில்களிலும், ரயில் புறப்படுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்புவரை காலியாக உள்ள இருக்கைகளைப் பயணிகள் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அவசரமாகப் பயணம் செய்ய வேண்டியவர்களும் கடைசி நேரத்திலும் எளிதாக டிக்கெட் பெற்று பயணம் செய்ய முடியும்.

இதுவரை, ரயில் புறப்படுவதற்கு முன்பாக சார்ட் தயாரிக்கப்பட்டவுடன் டிக்கெட் முன்பதிவு நிறுத்தப்பட்டு வந்தது. இதனால், ரயிலில் இருக்கைகள் காலியாக இருந்தாலும், கடைசி நேரத்தில் பயணம் செய்ய விரும்பிய பயணிகளால் டிக்கெட் பெற முடியாத நிலை ஏற்பட்டது. இந்த சிரமத்திற்கு தீர்வு காணவும், காலியாக உள்ள இருக்கைகள் முழுமையாக பயன்படுத்தப்படவும் ரயில்வே புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், ரயில் புறப்படுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்புவரை காலியாக உள்ள இருக்கைகளை பயணிகள் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறையின்படி, ரயில் புறப்படுவதற்கு 15 நிமிடங்கள் முன்புவரை காலியாக உள்ள இருக்கைகளைப் பயணிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று நியூஸ்18 தளம் தெரிவித்தது. இந்த வசதி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அனைத்து முன்பதிவு செய்யப்பட்ட ரயில்களுக்கும் பொருந்தும். வழக்கம்போல், IRCTC இணையதளம், Rail Connect மொபைல் செயலி மற்றும் ரயில் நிலையங்களில் செயல்படும் பயணிகள் முன்பதிவு மையங்கள் (PRS கவுண்டர்கள்) மூலமாக டிக்கெட்டுகளை எளிதாகப் பதிவு செய்யலாம்.

ரயில்களில் இருக்கைகள் காலியாகச் செல்வதை குறைத்து, அவற்றை முழுமையாகப் பயன்படுத்துவதே ரயில்வேயின் முக்கிய நோக்கமாகும். குறிப்பாக, திடீர் பயணத் திட்டங்களை மேற்கொள்ளும் தொழில்முறை மற்றும் வணிகப் பயணிகளுக்கு இந்த புதிய வசதி பெரிதும் உதவியாக இருக்கும். மேலும், டிக்கெட் கிடைப்பது தொடர்பான நேரடித் தகவல்களை IRCTC இணையதளம் மற்றும் Rail Connect மொபைல் செயலி மூலம் பயணிகள் உடனுக்குடன் அறிந்து கொண்டு, கடைசி நேரத்திலும் டிக்கெட்டுகளை எளிதாக முன்பதிவு செய்ய முடியும்.

ரயில் பயணிகளுக்கு செம்ம குட் நியூஸ்.. முன்பதிவில் புதிய மாற்றம்!

சார்ட் தயாரிக்கப்பட்ட பிறகு காலியாக இருக்கும் இருக்கைகள் மட்டுமே இந்த புதிய வசதியின் மூலம் முன்பதிவு செய்ய முடியும். எனவே, அனைத்து ரயில்களிலும் கடைசி நேரத்தில் டிக்கெட் கிடைக்கும் என்று உறுதியாகக் கூற முடியாது. பயணத்திற்கு முன், IRCTC இணையதளம் அல்லது Rail Connect செயலி மூலம் இருக்கை கிடைப்பை சரிபார்த்துக் கொள்வது பயணிகளுக்கு அவசியம். மேலும், ரயில் நிலையத்திற்கு செல்லும் போது செல்லுபடியாகும் அடையாள அட்டையை கட்டாயம் உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.

குறிப்பாக அதிகாரப்பூர்வமான IRCTC தளங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட முன்பதிவு மையங்கள் மூலமாக மட்டுமே டிக்கெட்டுகளை பதிவு செய்ய வேண்டும் என்று ரயில்வே பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. திடீரென பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலையில் இருப்பவர்களுக்கும், முன்பு டிக்கெட் கிடைக்காமல் சிரமப்பட்டவர்களுக்கும் இந்த புதிய வசதி பெரும் நிவாரணமாக அமையும். இதன் மூலம் ரயில்களில் காலியாகச் செல்லும் இருக்கைகளின் எண்ணிக்கை குறைவதுடன், ரயில்வேயின் வருவாயும் அதிகரிக்கும். அதேவேளையில், பயணிகளுக்கு மேலும் வசதியான மற்றும் சீரான பயண அனுபவம் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Good News for Rail Travelers: Book Train Tickets Just 15 Minutes Before Departure
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X