Home
News

EPFO சேவையில் புதிய மாற்றம்.. இனி 7 நாட்கள் தான் கெடு.. அதுக்குள்ள சரி பண்ணனும்.. பிஎஃப் தாரர்கள் ஹேப்பி!

இபிஎப்ஓ (EPFO) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது (Employees Provident Fund Organization) ஆனது சேவையில் "7 நாட்கள்" என்கிற காலக்கெடு கொண்ட முக்கிய மாற்றம் ஒன்றை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. என்ன மாற்றம்? வாருங்கள் விரிவாக பார்ப்போம்.

2024 - 2025 ஆம் ஆண்டில், இபிஎப்ஓ ஆனது அதன் பங்குதாரர்களிடமிருந்து பல்வேறு தளங்கள் மூலம் 2 மில்லியன் குறைகளை பெற்றுள்ளது. அதாவது உங்கள் வருங்கால வைப்பு நிதி பணத்தை அணுகவோ அல்லது உங்கள் கணக்கை மாற்றவோ முடியவில்லையா? இதுகுறித்து நீங்கள் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் புகார் அளித்து உள்ளீர்களா? ஆம் என்றால் நீங்கள் மட்டுமே அதை செய்யவில்லை. பல லட்சம் பேர் இப்படி புகார் செய்துள்ளனர்.

EPFO சேவையில் புதிய மாற்றம்.. இனி 7 நாட்கள் தான் கெடு!

ஏற்கனவே இபிஎப்ஓ ஆனது அதன் செயல்முறைகள் மற்றும் தொழில்நுட்ப இடைமுகத்தை மறுசீரமைப்பதில் பணியாற்றி வரும் நிலைப்பாட்டில், தற்போது அதன் குறை தீர்க்கும் முறையை மேம்படுத்தவும், அதற்கான தொடர்பு வழிகளை வலுப்படுத்தவும் திட்டமிட்டு உள்ளது. இந்த உத்தியின் ஒரு பகுதியாக, "எந்தவொரு குறை அல்லது குறை தொடர்பான ஆவணமும் எந்தவொரு அதிகாரியின் மேசையிலும் ஏழு வேலை நாட்களுக்கு மேல் கவனிக்கப்படாமல் இருக்கக்கூடாது" என்பதை இபிஎப்ஓ உறுதி செய்ய விரும்புகிறது.

குறிப்பிட்டுள்ளபடி, கடந்த நிதியாண்டில் 2 மில்லியன் குறைகளை பெற்றதாகக் குறிப்பிட்டுள்ள இபிஎப்ஓ ஆனது அதன் சமீபத்திய செய்திக்குறிப்பில், "இந்த எண்ணிக்கை எங்களுடைய குறை தீர்க்கும் முறையை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும், பங்குதாரர்களின் பிரச்சினைகளை ஆக்கப்பூர்வமாக நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் பிரதிபலிக்கிறது" என்றும் கூறியுள்ளது

இதன்மூலம் தனது அலுவலகங்களில் குறை தீர்க்கும் முறையை மேம்படுத்த முடியும் என்றும், பங்குதாரர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க முடியும் என்றும் இபிஎப்ஓ நம்புகிறது. பிராந்திய அலுவலகங்களில் உள்ள மக்கள் தொடர்பு அதிகாரிகள் (பிஆர்ஓ-க்கள்) சரியான நேரத்தில், திறமையான மற்றும் பயனுள்ள உறுப்பினர் சேவைகளை வழங்குவதன் மூலம் பங்குதாரர்களின் குறைகளை குறைக்க முடியும் என்றும் இபிஎப்ஓ நம்புகிறது.

ஆபிசர் ஆப் தி டே (Officer of the Day) என்கிற கான்செப்ட்டும் தொடங்கப்பட்டுள்ளது, இதில் ஒரு குரூப்-ஏ அதிகாரி அனைத்து வேலை நாட்களிலும் பங்குதாரர்களின் குறைகள் மற்றும் கேள்விகளை கவனிக்க குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் பிஆர்ஓ-க்களில் இருப்பார். இதற்கான நேரத்தை பிராந்திய அலுவலகங்கள் சுதந்திரமாக தீர்மானிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

ஆனால் அது மையத்திற்கு அதிகபட்ச மக்கள் வருகை இருக்கும் நேரமாக இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் மற்றும் பங்குதாரர்களின் விவரங்கள் அவர்களின் குறைகள் மற்றும் பிரச்சினைகள் பதிவு செய்யப்பட வேண்டும், மேலும் ஒரே பிரச்சினைக்காக ஒன்றுக்கு மேற்பட்ட முறை வருகைகளை செய்த பார்வையாளர்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுத்து ஆர்த்து தீர்க்கப்பட வேண்டும் என்றும் இபிஎப்இ கூறியுள்ளது.

மேலும், குறைகளை தீர்க்க நேரம் எடுக்கும் சந்தர்ப்பங்களில், எதிர்பார்க்கப்படும் காலக்கெடு மற்றும் தாமதத்திற்கான காரணம் குறித்து பங்குதாரர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும், இது அவர்களின் பதட்டத்தைப் போக்க உதவும் என்றும் இபிஎப்இ அறிவுறுத்தி உள்ளது.

இபிஎப்இ ஆனது தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்காத நடைமுறையை முற்றிலும் வெறுப்பதாகவும் கூறியுள்ளது. மேலும் அலுவலக லேண்ட்லைன் எண்கள் போதுமான அளவு பயன்படுத்தப்படுவதையும், உறுப்பினர்கள் தொலைபேசியில் எழுப்பும் பிரச்சினைகள் அல்லது குறைகள் ஆவணப்படுத்தப்பட்டு தீர்க்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் இபிஎப்இ கூறியுள்ளது.

இபிஎப்இ ஆனது அதன் சேவையின் கீழ் 350 மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர் கணக்குகளை கொண்டுள்ளது மற்றும் இதன் சந்தாதாரர்கள் இபிஎப்இ-வின் வெப் போர்டல் மற்றும் சமூக ஊடகங்கள் உட்பட பல்வேறு வழிகளில் தங்களுடைய குறைகளை தீர்க்குமாறு இபிஎப்இ உடன் தொடர்பு கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Good News For PF Members EPFO to Ensure No Grievance Should Remain Unattended For More Than 7 Days
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X