Home
News

இனி 30 நாள்.. ஆண்டுக்கு 13 ரீசார்ஜ் செய்ய வச்ச Jio, Airtel, Vodafone-க்கு வேட்டு.. இந்திய அரசு புதிய உத்தரவு!

கடந்த பல ஆண்டுகளாக, ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியா ஆகிய டெலிகாம் சேவைகளின் கீழ் உள்ள மில்லியன் கணக்கான ஸ்மார்ட்போன் பயனர்கள் 28 நாள் மொபைல் ரீசார்ஜ் திட்டம் குறித்து புகார் கூறி வருகின்றனர். ஏனெனில், இந்த 28 நாள் என்கிற கணக்கின் படி, ஒரு பயனர் ஆண்டுக்கு 12 முறைக்கு பதிலாக 13 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டி உள்ளது.

28 நாட்களுக்கும் 30 நாட்களுக்கும் (28 Days VS 30 Days Plans) இடையேயான செல்லுபடியாகும் கால அளவில் உள்ள வேறுபாடு சிறியதாக தோன்றினாலும், இது வாடிக்கையாளர்களின் ஆண்டு செலவை அதிகரித்து, அவர்கள் கூடுதலாக பணம் செலுத்த வேண்டிய "கட்டாய" நிலைக்கு தள்ளுகிறது. இந்த நீண்டகால கவலையை தீர்க்கவும், மொபைல் சந்தாதாரர்களுக்கு நிவாரணம் அளிக்கவும், இந்திய அரசாங்கம் ஒரு முக்கிய நடவடிக்கையாக, 30 நாள் ரீசார்ஜ் திட்டங்களை ஊக்குவிக்குமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

ஆண்டுக்கு 13 ரீசார்ஜ் செய்ய வச்ச Jio, Airtel, Vodafone-க்கு வேட்டு!

இதுகுறித்து இந்திய அரசு என்ன சொல்கிறது? பரவலாக பயன்படுத்தப்படும் 28 நாள் சுழற்சிக்கு பதிலாக, 30 நாள் திட்டங்களை இன்னும் தீவிரமாக ஊக்குவிக்குமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு (ஜியோ, ஏர்டெல், வி என்கிற வோடாபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களுக்கு) இந்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

எம்.பி. ராகவ் சதா கொடுத்த குரல்: நுகர்வோர் மீதான நிதி தாக்கம் குறித்து எம்.பி. ராகவ் சதா கவலை தெரிவித்தபோது, ​​இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் வெளிச்சத்திற்கு வந்தது. திட்டங்களின் பலன்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் இல்லை என்றாலும், குறைக்கப்பட்ட செல்லுபடியாகும் காலம் ஒட்டுமொத்த செலவை அதிகரிக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டினார். இதையடுத்து, தொலைத்தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, பயனர்களுக்கு தொலைத்தொடர்புத் திட்டங்கள் வழங்கப்படும் விதத்தில் மாற்றம் இருக்கும் எனத் தெரிவித்து, நடவடிக்கையில் இறங்கினார்.

இதை தொடர்ந்து என்ன மாற்றங்கள் வரவுள்ளது? அரசாங்கம் விலை குறித்த மாற்றங்களை கட்டாயப்படுத்தவில்லை, ஆனால் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இதன் கீழ் 30 நாள் செல்லுபடியாகும் திட்டங்கள் மிகவும் முக்கியமாக விளம்பரப்படுத்தப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் பயனர்களுக்கு நியாயமான மற்றும் வெளிப்படையான தேர்வுகள் காட்டப்பட வேண்டும்; ஒருமுறை மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட திட்டங்களிலும் 30 நாள் செல்லுபடியாகும் விருப்பம் சேர்க்கப்பட வேண்டும்;
நிறுவனங்கள் முதன்மையாக 28 நாள் திட்டங்களில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, இந்தத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர்த்து விலை நிர்ணயம் மற்றும் கட்டணங்களை தீர்மானிக்கும் சுதந்திரத்தை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தக்க வைத்துக் கொள்வார்கள்.

OPNION: 28 நாள் திட்டம் ஏன் பலருக்கும் ஒரு கவலையாக உள்ளது? உண்மையான பிரச்சினை என்பது கருத்துக்கும் யதார்த்தத்திற்கும் இடையிலான வேறுபாடுதான். ரீசார்ஜ் செய்வதன் மூலம், பல பயனர்கள் மாதாந்திர திட்டத்திற்கு பணம் செலுத்துவதாக நினைக்கிறார்கள், ஆனால் 28 நாள் சுழற்சி ஒரு மாறுபட்ட சித்திரத்தை அளிக்கிறது:

- 28 நாள் திட்டம் என்பது ஆண்டுக்கு 13 ரீசார்ஜ்கள் ஆகும்.
- அதே நன்மைகள், ஆனால் குறுகிய வேலிடிட்டி
- மொத்தமாக (1 ஆண்டாக) பார்த்தால் அதிக பணம் செலவாகும்
- மறுபுறம், 30 நாள் திட்டம் மாத காலெண்டருடன் சிறப்பாக பொருந்துகிறது!

- 30 நாள் திட்டம் என்பது ஒவ்வொரு ஆண்டும் 12 ரீசார்ஜ்கள் ஆகும்
- திட்டங்களை மற்றும் அதற்கான மாதாந்திர செலவுகளை நிர்வகிக்கவும் புரிந்துகொள்ளவும் எளிதாக இருக்கும்
- நீண்ட கால (1 ஆண்டு கால) அடிப்படையில் சேமிப்புக்கான வாய்ப்புகள் அதிகம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Good News For Jio Airtel Vodafone Customers Govt Pushes Telecom Operators To Promote 30 Days Plans More
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X