Home
News

Google Pay பயனர்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி: அறிமுகமானது புதிய வசதி.! இதோ முழு விவரம்.!

கூகுள் பே செயலியில் அவ்வப்போது புதிய புதிய அம்சங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. அதேபோல் போன்பே, பேடிஎம் செயலிகளை விட இந்த கூகுள் பே செயலியைத் தான் மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.

அதேபோல் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அனைத்து இடங்களிலும் தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனையை மக்கள் ஆதரிக்கத் துவங்கியுள்ளனர் என்பது தான் உண்மை. குறிப்பாக இந்த போன்பே, பேடிஎம், கூகுள் பே செயலிகளின் மூலம் ஒருவருக்கொருவர் பணம் பரிமாற்றம் செய்வது, கடைக்குச் சென்று வாங்கும் சிறிய ரக பொருட்களுக்கு ஸகேன் செய்து பணம் வழங்கும் முறை இப்போது அதிகரித்து வருகிறது.

Google Pay பயனர்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி: அறிமுகமானது புதிய வசதி.!

இந்நிலையில் கூகுள் பே செயலியில் தற்போது ஒரு புதிய வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது கூகுள் பே செயலியில் யுபிஐ பின் (UPI PIN) பதிவிடாமல் ஒரே கிளிக்கில் பணம் செலுத்த முடியும். அதாவது யுபிஐ பின் பதிவிடாமல் ஒரு கிளிக் மூலம் பேமண்ட் செய்யும் புதிய UPI LITE சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இப்போது வரை எந்தவொரு யுபிஐ பேமண்ட் ஆக இருந்தாலும் பின் பாஸ்வேர்டு கொடுத்துத் தான் பேமெண்ட் செய்வோம். ஆனால் இனிமேல் பின் பதிவிடாமல் பேமெண்ட் செய்ய முடியும். சமீபத்தில் பேடிஎம் நிறுவனம் யுபிஐ லைட் சேவையை அறிமுகம் செய்தது. இந்த சேவையிலும் பாஸ்வேர்ட் பதிவிடாமல் யார் வேண்டுமானாலும் பேமன்ட் செய்ய முடியும். தற்போது இதே சேவையை தான் கூகுள் பே அறிமுகம் செய்து இருக்கிறது.

அதேபோல் இந்த யுபிஐ லைட் சேவை வங்கி கணக்குடன் இணைப்பட்டு இருந்தாலும் ஒவ்வொரு முறையும் வங்கி கணக்கில் இருந்து ரியல் டைம்-இல் பணம் டெபிட் ஆகி பேமேண்ட் ஆகாது. அதவாவது வங்கி கணக்கில் இருந்து உடனே பணம் டெபிட் ஆகி பேமேண்ட் ஆகாது. இதற்கு மாறாக யுபிஐ லைட் சேவையின் வேலெட்-இல் ஒரு குறிப்பிட்ட தொகையை லோடு செய்துகொண்டு அதன் மூலம் பாஸ்வேர்டு இல்லாமல் பேமெண்ட் செய்யலாம்.

மேலும் இந்த யுபிஐ லைட் சேவை கணக்கு பயன்படுத்தும் பயனர்கள் ஒரு நாளைக்கு 2 முறை ரூ.2000 தொகையை இக்கணக்கில் லோடு செய்துகொண்டு, ஒவ்வொரு பரிவர்த்தனையும் 200 ரூபாய்க்கும் கீழ் பாஸ்வேர்டு இல்லாமல் பேமெண்ட் செய்துகொள்ள முடியும். அதேபோல் இந்த யுபிஐ லைட்-ஐ அறிமுகம் செய்வதன் மூலம் சிறிய மற்றும் அதிவிரைவு கட்டண அனுபவத்தை அணுக உதவும் என்றும் கூகுள் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் கொண்டுவந்துள்ளது இந்த யுபிஐ லைட்-இன் முக்கிய நோக்கம் சிறிய மதிப்புள்ள பரிவர்த்தனைகளை எளிதாக்குவது மட்டுமே. பின்பு யுபிஐ லைட் மூலம் ஒவ்வொரு முறையும் பேமெண்ட் ஆப்-கள் வங்கி சர்வர்-ஐ இணைக்கும் பணி இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த UPI LITE-ஐ எப்படி ஆக்டிவேட் செய்ய வேண்டும் மற்றும் இதைப் பயன்படுத்துவது எப்படி என்பதைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

Google Pay பயனர்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி: அறிமுகமானது புதிய வசதி.!

கூகுள் பே பயனர்கள் முதலில் தங்கள் சுயவிவரப் பக்கத்திற்கு (profile page) சென்று Activate UPI LITE என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதை இணைக்கும் செயல்முறை முடிந்ததும், பயனர்கள் தங்கள் UPI LITE கணக்கில் ரூ. 2,000 வரை பணத்தைச் சேர்க்க முடியும். அதேபோல் இதில் ஒரு நாளுக்கான அதிகபட்ச வரம்பு ரூ.4,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த பரிவர்த்தனையை முடிக்க பயனர்கள் Pay PIN-Free என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.

மேலும் இந்திய ரிசர்வ் வங்கி யுபிஐ லைட் சேவையை செப்டம்பர் 2022-இல் அறிமுகம் செய்தது. தற்போது சுமார் 15 வங்கிகள் இத்தகைய யுபிஐ லைட் சேவையை வழங்குகிறது. குறிப்பாக இந்த யுபிஐ லைட் சேவை மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றே கூறலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Good News for Google Pay Users: Introducing New UPI LITE Service: Full Details Here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X