தப்பித்தது Google-ன் தலை.. சுந்தர் பிச்சை வயிற்றில் பாலை வார்த்த OpenAI சிஇஓ.. கிரேட் எஸ்கேப்!
மே 13 ஆம் தேதியோடு கூகுள் சேர்ச் எஞ்சின் (Google Search Engine) கதை முடிந்தது என்கிற அளவிற்கு ஓப்பன்ஏஐ நிறுவனம் ஒரு வேலையை பார்த்து வருவதாக கூறப்பட்டது. இந்த வாரத்தில் கூகுள் சேர்ச் எஞ்சினுக்கு போட்டியாக சாட்ஜிபிடி சேர்ச் எஞ்சின் அறிமுகமாகும் என்று கூறப்பட்டது.
பெயர் குறிப்பிடுவது போலவே இது கூகுளுக்கான மாற்றாக இருக்கும் என்றும், இது சேர்ச்.சாட்ஜிபிடி.காம் (search.chatgpt.com) என்கிற டொமைன் பெயரின்கீழ் அணுக கிடைக்கும் என்றும் கூறப்பட்டது. ஆனால் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும்படியாக ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் சிஇஓ ஒரு தகவலை வெளிப்படுத்தி உள்ளார்.

ஓப்பன்ஏஐ-ன் தலைமை நிர்வாக அதிகாரி ஆன சாம் ஆல்ட்மேன் தனது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நிறுவனமானது கூகுளை போன்ற சேர்ச் எஞ்சினை அறிமுகப்படுத்த போவதாக வெளியான செய்திகளை மறுத்துள்ளார். இதுகுறித்த எக்ஸ் பதிவில், ஓப்பன்ஏஐ நிறுவனம் அதன் ஏஐ இலக்குகளுடன் ஒட்டிக்கொள்ளும்; அதன் ஏஐ சாட்பாட் ஆன சாட் ஜிபிடி-ஐ இன்னும் சக்திவாய்ந்ததாக மாற்றும் பணிகளில் ஈடுபடும் என்று கூறியுள்ளார்.
ஓப்பன் ஏஐ நிறுவனமானது.. ஜிபிடி-5 அல்ல மற்றும் சேர்ச் எஞ்சின் அல்ல. ஆனால் மக்கள் விரும்புவார்கள் என்று நாங்கள் நினைக்கும் சில புதிய விஷயங்களில் கடினமாக உழைத்து வருகிறோம். அதுவொரு மேஜிக் போல் தெரிகிறது" என்றும் சாம் ஆல்ட்மேன் கருத்து தெரிவித்து உள்ளார். ஆகமொத்தம் கூகுல் சேர்ச் எஞ்சினுக்கு எந்த போட்டியும் "இப்போதைக்கு" இல்லை என்பது உறுதி ஆகியுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆதரவுடைய ஓப்பன்ஏஐ நிறுவனமானது கூகுளுடன் போட்டியிட ஒரு சேர்ச் ப்ராடெக்ட்டில் வேலை செய்வதாக கடந்த பல நாட்களாகவே தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன அதனொரு பகுதியாக சாட்ஜிபிடி டொமைன் பெயர் மற்றும் மே 13 ஆம் தேதி வெளியாகும் என்கிற தகவல்கள் எல்லாம் வந்தது.
கூகுள் நிறுவனம் தனது வருடாந்திர ஐ/ஓ மாநாட்டை வருகிற மே 14 ஆம் தேதி முதல் நடத்த உள்ளது. அந்த நிகழ்வை "கெடுக்கும்" வண்ணம் ஓப்பன் ஏஐ நிறுவனமானது அதன் சாட்ஜிபிடி-பவர்டு சேர்ச் எஞ்சினை மே 13 ஆம் தேதி அன்று அறிவிக்கும் என்கிற தகவல் "நேற்று வரை" பரபரப்பாக இருந்தது. ஆனால் "இன்று" காமெடியாக மாறிவிட்டது.
இன்னொரு காமெடியான தகவலும் வெளியானது அது என்னவென்றால் ஓப்பன் ஏஐ நிறுவனமானது அதன் புதிய சேர்ச் எஞ்சின் தளத்தை உருவாக்குவதற்காக, கூகுள் நிறுவனத்தின் சேர்ச் குழுவில் பணிபுரியும் ஊழியர்களை தனது நிறுவனத்தின்கீழ் வேலைக்கு சேர்த்துக்கொண்டதாகவும், வெற்றிகரமாக பணியமர்த்தப்பட்ட பணியாளர்களின் சரியான எண்ணிக்கை பற்றி தெரியவில்லை என்பதே அந்த தகவல் ஆகும்.
இது மட்டுமின்றி.. சாட்ஜிபிடி சேர்ச் எஞ்சின் ஆனது கூகுள் சேர்ச்சை விட சற்றே வித்தியாசமாக செயல்படலாம். அதாவது இது கூகுளை போன்ற சேர்ச்-லைக் ப்ராடெக்ட் ஆக இருக்கும் அதே வேளையில் இது சாட்ஜிபிடி-யின் ஜெனெரேட்டிவ் ஏஐ திறன்களையும் ஒருங்கிணைக்கும் என்றும் கூறப்பட்டது.
இன்னும் தெளிவாக கூற வேண்டுமென்றால்.. ஒரு பயனர், ஒரு கேள்வியை கேட்கும் போது அல்லது அந்த வினவலை முன்வைக்கும் போது சாட்ஜிபிடி சேர்ச் எஞ்சின் ஆனது பெர்ப்ளேக்ஸிட்டி ஏஐ (Perplexity AI) போன்ற தொடர்புடைய வெப்சைட்களில் ஏஐ-ஜெனெரேட்டட் கன்டென்ட்டை உள்ளடக்கிய முடிவை வழங்கும் என்றெல்லாம் கூறப்பட்டது.
இதன்மூலம் ஒரு பயனர் இணையத்தில் கிடைக்கும் அனைத்து தொடர்புடைய தகவல்களின் ஏஐ சுருக்கத்தை பெறுவது மட்டுமல்லாமல், அந்த சுருக்கத்தை விட சற்று கூடுதல் தகவல் தேவைப்படுபவர்களுக்கான நேரடி ஆதாரங்களையும் வழங்குமாம். ஆனால் இப்படியெல்லாம் செய்து சாட்ஜிபிடி சேர்ச்சால் கூகுள் சேர்ச்சை வீழ்த்ததி இருக்க முடியுமா என்று கேட்டால்.. வாய்ப்பில்லை ராஜா!
ஏனென்றால் தற்போது சேர்ச் எஞ்சின் வணிகத்தில் 90 சதவீத சந்தை பங்கை கொண்டு வலுவான நிலையில் உள்ளது. கூகுள் சேர்ச்சிற்கு அடுத்தபடியாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிங் சேர்ச் எஞ்சின் (Microsoft Bing Search Engine) இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆக எப்படி பார்த்தாலும் சாட்ஜிபிடி சேர்ச் எஞ்சினால் டக்கென்று கூகுள் நிறுவனத்தை பின்தள்ளிவிட முடியாது.


Click it and Unblock the Notifications








