Home
News

இதுக்கு தானே காத்திருந்தோம்.. PF பணத்தை ஏடிஎம் மூலம் எடுக்கும் வசதி.. வெளியானது முக்கிய தகவல்..

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான (Employees' Provident Fund Organisation) இபிஎஃப்ஓ (EPFO) அவ்வப்போது புதிய வசதிகள் மற்றும் புதிய திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக இந்த அமைப்பு கொண்டு வரும் ஒவ்வொரு வசதிகளும் மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது. இந்நிலையில் பிஎஃப் வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது தொமில்நுட்ப கோளாறு காரணமாக வருங்கால வைப்பு நிதியில் இருந்து யுபிஐ மூலம் பணம் எடுக்கும் வசதி அடுத்த மாதம் (ஆகஸ்ட்) அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுக்கு தானே காத்திருந்தோம்.. PF பணத்தை ஏடிஎம் மூலம் எடுக்கும் வசதி..

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இ.பி.எப்.ஓ.) தனது சேவைகளை எளிமையாக்கும் நோக்கில், யு.பி.ஐ. (UPI) மூலம் பணத்தை நேரடியாகப் பெறும் வசதியை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இதற்கான அடித்தளமாக, ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப சேவை தளமான சைட்ஸ் 2.01 (CITES 2.01 portal) நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆனாலும் புதிய தளம் அறிமுகமானதைத் தொடர்ந்து பல்வேறு தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டதாக உறுப்பினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக சேவைகளைப் பயன்படுத்துவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இந்தப் பிரச்சினைகளை விரைவாக சரிசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

அதேபோல் இந்த புதிய தளத்தில் பழைய வைப்பு நிதி கணக்குகளில் இருந்த தரவுகள் விடுபட்டுள்ளதாக உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குறிப்பாக இந்த இணையதளத்தில் உள்ளே நுழைவதில் கூட சிக்கல் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுதவிர வருங்கால வைப்பு நிதி இணையதளம் மெதுவாக இயங்குகிறது, கோரிக்கைகளைப் பரிசீலிப்பதில் தாமதம் போன்ற புகார்களும் எழுந்துள்ளன.

வழக்கமாக, வருங்கால வைப்பு நிதி பணத்தைப் பெற விண்ணப்பித்த பிறகு குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்குள் சந்தாதாரர்களின் வங்கி கணக்கில் தொகை வரவு வைக்கப்படும். ஆனால், சமீப காலமாக விண்ணப்பித்தும் பல நாட்கள் ஆன பிறகும் மேலாக பணம் கிடைக்கவில்லை என்ற புகார்கள் அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இந்தச் சூழலில், சேவைகள் வழக்கம்போல் செயல்படவும், உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்கவும் தேவையான தொழில்நுட்பக் கோளாறுகளை சரிசெய்யும் பணியில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

முக்கிய தொழில்நுட்பக் கோளாறுகள் அனைத்தும் முன்னுரிமை அடிப்படையில் சரிசெய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்தப் பணிகள் நிறைவடைந்த பிறகு சேவைகள் இயல்பு நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, அடுத்த மாதம் (ஆகஸ்ட்) முதல் வாரத்திற்குள் வருங்கால வைப்பு நிதியில் இருந்து யு.பி.ஐ. (UPI) மூலம் பணம் எடுக்கும் வசதி அறிமுகமாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் திட்டம் முதலில் கடந்த மார்ச் மாதமே அமல்படுத்தப்பட இருந்தாலும், தொழில்நுட்ப காரணங்களால் அதன் செயல்படுத்தல் தாமதமானது.

இதுக்கு தானே காத்திருந்தோம்.. PF பணத்தை ஏடிஎம் மூலம் எடுக்கும் வசதி..

வருங்கால வைப்பு நிதியில் இருந்து யு.பி.ஐ. (UPI) மூலம் பணம் எடுக்கும் வசதி, பீம் (BHIM) செயலி வழியாக வழங்கப்பட உள்ளது. இதன் மூலம், சந்தாதாரர்கள் தங்களின் இ.பி.எப். (EPF) கணக்கை வங்கி கணக்குடன் இணைத்து, தகுதியான கோரிக்கைகளுக்கான நிதியை விரைவாகவும் எளிதாகவும் நேரடியாகப் பெற முடியும்.

இந்த வசதியை செயல்படுத்துவதற்காக, பாரத ஸ்டேட் வங்கி மற்றும் இந்திய தேசிய பணப் பரிவர்த்தனை கழகத்துடன் (NPCI) இணைந்து தேவையான ஏ.பி.ஐ. (API) கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. டிஜிட்டல் சேவைகளை மேலும் நவீனப்படுத்தி, சந்தாதாரர்களின் கோரிக்கைகளை குறுகிய காலத்தில் தீர்ப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் என தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Best Mobiles in India

English summary
Good News for EPFO Subscribers: UPI-Based Withdrawals Likely from August
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X