Home
News

FASTag புதிய விதிகள்... நவ.15 முதல் அமல்.. மாறும் கட்டணம்.. கார், ஜீப், வேன் ஓட்டுனர்கள் கவனம்!

பாஸ்டாக் தொடர்பான புதிய விதிகள் (FASTag New Rules) வருகிற 2025 நவம்பர் 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (Ministry of Road Transport and Highways) அறிவித்துள்ள இந்த புதிய பாஸ்டாக் விதிகள் ஆனது யாரையெல்லாம் பாதிக்கும்? இதன்கீழ் யாருடைய கட்டணங்கள் மாறும்? இதில் இருந்து தப்பிப்பது எப்படி? இதோ விவரங்கள்.

நவம்பர் 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் புதிய விதிகளின்படி செல்லுபடியாகும் ஃபாஸ்டாக் (Valid FASTag) மற்றும் செயல்பாட்டில் உள்ள ஃபாஸ்டாக் (Functional FASTag) வைத்து இருப்பவர்களுக்கு எந்த சிக்கலும் இருக்காது. அவர்கள் எல்லாம் வழக்கம் போல, வழக்கமான கட்டணத்தின் கீழ் டோல் கேட்களை கடக்கலாம்.

FASTag: நவ.15 முதல்.. கார், ஜீப், வேன் ஓட்டுனர்கள் கவனம்!

யாரிடமெல்லாம் பாஸ்டாக் இல்லையோ, அவர்களுடைய வாகனங்களுக்கான சுங்கச்சாவடி கட்டணம் (தேசிய நெடுஞ்சாலை கட்டணம்) தான் திருத்தி அமைக்கப்பட்டு உள்ளது. இதன்கீழ் நவம்பர் 15, 2025 முதல், பாஸ்டாக் பயன்படுத்தாத வாகன உரிமையாளர்களிடம் பாஸ்டாக் வைத்து இருக்கும் உரிமையாளர்களிடம் இருந்து வசூலிக்கும் கட்டணத்தை விட 2 மடங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படும். இது ரொக்கமாக பணம் செலுத்தினால் தான் பொருந்தும்.

ஒருவேளை பாஸ்டாக் இல்லாதவர்கள் யுபிஐ (UPI) சேவையை பயன்படுத்தி பணம் செலுத்தினால் 2 மடங்கு கட்டணம் செலுத்த வேண்டாம். மாறாக 1.25 மடங்கு கட்டணம் செலுத்தினால் போதும். இது ஒப்பீட்டளவில் குறைவு தான். ஆனாலும் பாஸ்டாக் வைத்து இருந்தால், இந்த அளவு கூட அதிக கட்டணம் செலுத்த வேண்டாம். ஆக நவம்பர் 15 ஆம் தேதிக்குள் செல்லுபடியாகும் பாஸ்டாக்கை பெறவும்.

யுபிஐ பேமண்ட்-க்கு கொடுக்கப்பட்டுள்ள சலுகை ஆனது பணம் செலுத்துவோர்களுக்கு லாபகரமான வழியாக இருப்பதோடு சேர்த்து, தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல் கேட்களில் பணப்பரிவர்த்தனைகளை எளிதாக்கும் என்பதிலும் சந்தேகம் வேண்டாம். மேலும் திருத்தப்பட்ட விதிகள் டிஜிட்டல் கட்டணங்களை ஏற்றுக்கொள்வதை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், சுங்கச்சாவடி நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மையையும் மேம்படுத்தும் .

இதுகுறித்த அறிக்கையில், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் ஆனது - தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பயனர் கட்டண மையங்களில், டிஜிட்டல் கட்டணங்களை ஊக்குவிப்பதற்கும், ஃபாஸ்டாக் அல்லாத பயனர்கள் மத்தியிலான ரொக்க பரிவர்த்தனைகளை நீக்குவதற்கும் ஒரு குறிப்பிடத்தக்க படியாக, இந்திய அரசு தேசிய நெடுஞ்சாலை கட்டணம் (விகிதங்களை நிர்ணயித்தல் மற்றும் வசூல்) விதிகள் 2008 திருத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

இதோடு சேர்த்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமானது பாஸ்டாக் பயனர்களுக்கான கேஒய்வி செயல்முறையிலும் முக்கிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. சில லாரி ஓட்டுநர்கள் அதிக கட்டணம் செலுத்துவதை தவிர்க்க கார் டாக்களை பயன்படுத்துவதாக கூறப்படுவதால், ஃபாஸ்டாக் அமைப்பில் ஏற்படும் கசிவுகளை தடுக்கும் முயற்சியாக, கேஒய்வி செயல்முறை கடந்த ஆண்டு செயல்படுத்தப்பட்டது. இருப்பினும், இந்த செயல்முறை கூடுதல் சுமையாக மாறியது.

இதனால் வாகனத்தின் பல வகையான புகைப்படங்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களை பதிவேற்றுவதிலும், யூசர் பிரெண்டிலி ஆக இல்லாத வலைத்தளங்களுக்கு செல்வதிலும் - பலர் சிரமங்களை எதிர்கொண்டனர். இதன் விளைவாக கேஒய்வி சரிபார்ப்பை முடிக்காததற்காக, அவர்ர்களின் ஃபாஸ்டாக் திடீரென முடக்கப்பட்ட பிறகு, சிலர் சுங்கச்சாவடிகளை கடப்பதிலும் சிரமத்தை எதிர்கொண்டனர் .

இப்போது, ​​என்எச்ஏஐ-யின் நிறுவனமான இந்திய நெடுஞ்சாலை மேலாண்மை நிறுவனம் லிமிடெட் (Indian Highways Management Company Limited - IHMCL) வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களின் படி, கேஒய்வி-க்கு இணங்காத வாகனங்களுக்கு ஃபாஸ்டாக் சேவைகள் நிறுத்தப்படாது, மேலும் கேஒய்வி செயல்முறையை முடிக்க பயனர்களுக்கு போதுமான வாய்ப்பும் வழங்கப்படும். என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Good News For Car Jeep Van Bus Owners Without Valid FASTag Use UPI and Pay Less From November 15
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X