BSNL-க்கு ஒரு கும்பிடு.. 4G சேவை.. வெளியானது முக்கியத் தகவல்.. உற்சாகத்தில் பயனர்கள்..
பிஎஸ்என்எல் (Bsnl) நிறுவனம் மொபைல் போன் பயனர்களின் நெட்வொர்க் சிக்கல்களை களையும் நோக்கில் மிகப் பெரிய நடவடிக்கையை எடுத்து வருகிறது. அதன்படி தற்போது அரசு சார்ந்த இந்த பிஎஸ்என்எல் நிறுவனம் நாடு முழுவதும் 84 ஆயிரம் புதிய 4ஜி மொபைல் டவர்களை நிறுவியுள்ளது.
குறிப்பாக உள்நாட்டு தொழில்நுட்பத்தின் உதவியுடன் 1 லட்சம் 4ஜி டவர்களை நிறுவும் நிறுவனத்தின் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த டவர்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் கிராமப்புற, நகரப்புற என மொத்தம் 9 கோடிக்கும் மேற்பட்ட பிஎஸ்என்எல் பயனர்கள் பயன் பெறுவார்கள். இந்த இலக்குடன் டவர்கள் நிறுவப்பட்டு உள்ளன. பின்பு இந்த பணிகள் நிறைவடைந்ததும், 4ஜி டவர்கள் விரைவில் 5ஜி சேவைகளை வழங்கும் வகையில் அவற்றின் தரம் மேம்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுவரை 83.99 சதவீத திட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன. இதன்படி 84 ஆயிரம் டவர்கள் நிறுவப்பட்டு உள்ளன. அதுவும் இந்த 4ஜி டவர்களை முழுமையாக நிறுவும் பணிகள் முடிவடைந்ததும், விரைவில், 5ஜி சேவைகளைத் தொடங்க பிஎஸ்என்எல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதுவும் இது ஜூன் மாதத்தில் இருந்து சாத்தியப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே இதனால் பல்வேறு நகரங்களில் 5ஜி சேவைகளை வழங்கி வரும் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற நிறுவனங்களுடன் பிஎஸ்என்எல் நிறுவனமும் போட்டியிடுவதற்கான முக்கிய நடவடிக்கையாக அமையும். அதுவும் தன்னுடைய நீண்டகால பயனாளர்களுக்கு மேம்பட்ட சேவை மற்றும் சிறந்த மதிப்பளிக்கும் வகையில் தொலைத்தொடர்பு சந்தையில் மீண்டும் தனக்கென ஒரு நிலையைப் பெற்றிட பிஎஸ்என்எல் நிறுவனம் முயன்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போதும் கம்மி விலையில் அதிக நன்மைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. இப்போது அந்த திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளைக் குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம்.
பிஎஸ்என்எல் ரூ 347 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL RS 347 Prepaid plan) 54 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. தினசரி 2ஜிபி டேட்டா வழங்கும் இந்த திட்டம். எனவே பிஎஸ்என்எல் ரூ 347 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 108ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த திட்டத்தில் உள்ளன.
குறிப்பாக தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது பிஎஸ்என்எல்ரூ.347 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு இந்த திட்டத்தில் தினசரி 2GB டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும். ஆனால் இந்த திட்டத்தில் கூடுதல் நன்மைகள் நன்மை எதுவும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 299 Prepaid Plan) 30 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தில் தினமும் 3ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. எனவே நீங்கள் பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 90ஜிபி டேட்டா கிடைக்கும்.
அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் திட்டத்தில் வழங்கப்படுகிறது. மேலும் இதில் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். பின்பு இந்த பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.
பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 485 Prepaid Plan) தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 80 நாட்கள் ஆகும். நீங்கள் பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 160ஜிபி டேட்டா கிடைக்கும். இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கின்றன.
அதன்படி அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கொடுக்கிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டம் . மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ் இதில் கிடைக்கும். ஆனால் கூடுதல் சலுகைகள் எதுவும் சேர்க்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications








