Home
News

BSNL அடுத்த ஆப்பு.. கதறும் Jio, Airtel.. மாறும் டெலிகாம் கஸ்டமர்கள்.. மத்திய அரசு போட்ட போடு.. சம்பவம் பெருசு!

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), பார்தி ஏர்டெல் (Bharti Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற முன்னணி டெலிகாம் நிறுவனங்களின் கட்டண உயர்வு பிறகு டெலிகாம் மார்கெட்டில் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. நாளுக்கு நாள் பிஎஸ்என்எல் சிம் கார்டு (BSNL SIM Card) விற்பனை எகிறி வருகிறது. இந்த நேரத்தை பயன்படுத்தி கொண்ட மத்திய அரசு தரமான சம்பவத்தை செய்து முடித்துள்ளது. இது மொத்த டெலிகாம் கஸ்டமர்களையும் குஷியில் ஆழ்த்தி இருக்கிறது.

நாடு முழுவதும் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு வரவேற்பு பெருகிவிட்டது. அதன் சிம் கார்டு விற்பனையானது, இதுவரையில் கனவிலும் நினைத்திராதபடி இருக்கிறது. ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியாவின் கட்டண உயர்வுக்கு பிறகும் மிகவும் மலிவான விலைக்கு பிஎஸ்என்எல்லில் மட்டுமே திட்டங்கள் கிடைக்கின்றன. இது கஸ்டமர்களின் மாதாந்திர செலவை குறைக்கிறது.

BSNL அடுத்த ஆப்பு.. கதறும் Jio, Airtel.. மாறும் டெலிகாம் கஸ்டமர்கள்!

இதனால், கண்ணை மூடிக்கொண்டு பிஎஸ்என்எல் சிம் கார்டுகளை கஸ்டமர்கள் வாங்கி வருகின்றனர். இந்த சூடு பிடிக்கும் நேரத்தை பயன்படுத்தி மத்திய அரசானது, பட்ஜெட் கூட்டத்தொடரில் ரூ.82,916 கோடி நிதியை பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ஒதுக்கி இருக்கிறது. 4ஜி, 5ஜி உள்கட்டமைப்புகள், தொழில்நுட்ப மறுஉருவாக்கம் போன்றவற்றுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படுகிறது.

பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு கஸ்டமர்கள் செல்ல காரணம் என்ன? மற்ற டெலிகாம் நிறுவனங்களில் டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளுக்கு செலவாகும் மாதாந்திர தொகையானது பிஎஸ்என்எல்லில் மிகவும் குறைவாக இருக்கிறது. வருடாந்திர திட்டங்களும் அப்படியே இருக்கின்றன. அதாவது, வெறும் ரூ.110 விலைக்கு அன்லிமிடெட் கால்கள் கிடைக்கின்றன.

அதேபோல மற்ற நிறுவனங்கள் 28 நாட்களுக்கு கொடுக்கும் சலுகைகளை பிஎஸ்என்எல் நிறுவனம் 30 நாட்களுக்கு கொடுப்பது மட்டுமல்லாமல், அதைவிட மலிவான விலைக்கு திட்டங்களை வைத்திருக்கிறது. சொல்லப்போனால், வெறும் ரூ.153 மதிப்பிலான திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 26 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கிறது.

இந்த திட்டத்துக்கு 26 நாட்கள் வேலிடிட்டி வருகிறது. மேலும், வழக்கமாக ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் வழக்கும் ரூ 199 திட்டத்தில் 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். அதேபோல 1.5 ஜிபி டேட்டா சலுகையை மட்டுமே பெற முடியும். ஆனால், பிஎஸ்என்எல்லில் 30 நாட்களுக்கு வேலிட்டி மற்றும் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கும்.

இதுபோக வாவ் எண்டர்டெயின்மெண்ட் சந்தா, ப்ரீ ஹலோ டியூன்ஸ், அரினா கேம்ஸ் உள்ளிட்ட கூடுதல் சலுகைகளும் கிடைக்கிறது. மாதாந்திர திட்டம் மட்டுமல்ல, வருடாந்திர திட்டங்களும் நம்ப முடியாத விலையிலேயே கிடைக்கின்றன. மாதத்துக்கு வெறும் ரூ.136 செலவில் 336 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டம் பிஎஸ்என்எல்லில் மட்டுமே கிடைக்கிறது.

ரூ.1499 மதிப்பிலான திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எஸ்எம் சலுகைகளை வருடம் முழுவதும் பெற்று கொள்ளலாம். இப்படி அனைத்து திட்டங்களும் மிகவும் மலிவான விலைக்கே கிடைக்கின்றன. இதனால், ஜியோ, ஏர்டெல் சிம் இருந்தாலும் பிஎஸ்என்எல் சிம் கார்டுகள் வாங்கப்பட்டு வருகின்றன.

ஏனென்றால், பிஎஸ்என்எல் சிம் போர்ட், பிஎஸ்என்எல் 4ஜி (BSNL 4G) அப்கிரேட் போன்றவற்றுக்கு எந்தவித கட்டணமும் கிடையாது. அதேபோல புது சிம் கார்டுகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன. இதனால், நாளுக்கு நாள் பிஎஸ்என்எல் வளர்ச்சி அடைந்து வருகிறது. இப்போது கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதால், மேலும் விஸ்வரூம் எடுக்க வாய்பப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Good News For BSNL Customers Union Budget 2024 Allocated RS 82916 Crore For 4G 5G Technology Upgrade
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X