சாதித்து காட்டிய ராபர்ட்.. இன்னும் 48 மணி நேரத்தில்.. BSNL கஸ்டமர்களுக்கு கையும் ஓடல, காலும் ஓடலயே!
இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் ஆபரேட்டர் ஆன பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனமானது, இன்னும் 48 மணி நேரத்தில். அதாவது வருகிற செப்டம்பர் 27 ஆம் தேதி அன்று பான் இந்தியா அடிப்படையிலான 4ஜி சேவையை (PAN India 4G Service) தொடங்க உள்ளதாக அறிவித்து உள்ளது.
தற்போது வரையிலாக, அங்குமிங்குமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள பிஎஸ்என்எல் 4ஜி நெட்வொர்க் ஆனது செப்டம்பர் 27 ஆம் தேதியில் இருந்து இந்தியா முழுவதுமாக அறிமுகம் செய்யப்படும். இந்த தகவலை, பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநரும் (BSNL Chairman and Managing Director) ஆன ஏ. ராபர்ட் ஜே. ரவியும் (A Robert J Ravi) உறுதிப்படுத்தி உள்ளார்.

செப்டம்பர் 27 ஆம் தேதி அன்று நாடு முழுவதும் நாங்கள் தொடங்கி வைப்பது எங்கள் உள்நாட்டு தொழில்நுட்பம் (Indigenous technology) என்று, பாரத் டிஜிட்டல் இன்ஃப்ரா உச்சி மாநாடு 2025 (Bharat Digital Infra Summit 2025) இல் தனது உரையின் போது ரவி கூறினார். 2025 ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் இந்தியா முழுவதும் ஒரு லட்சம் தளங்களில் 4ஜி-ஐ அறிமுகப்படுத்துவதாக தொலைத்தொடர்பு நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
ஆனால் ஆகஸ்ட் 15 க்கு பின் அதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படாததால், குறிப்பிட்ட இலக்கை பிஎஸ்என்எல் நிறுவனத்தால் அடைய முடியவில்லை என்பதை [புரிந்துகொள்ள முடிந்தது. கடனில் மூழ்கியுள்ள இந்த தொலைத்தொடர்பு நிறுவனம், தேஜாஸ் நெட்வொர்க்குகள் மற்றும் சி-டாட் டெலிமேடிக்ஸ் மேம்பாட்டு மையம்) ஆகியவற்றை உள்ளடக்கிய டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) தலைமையிலான கூட்டமைப்பிலிருந்து 4ஜி தொழில்நுட்பத்தைப் பெறுகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்திய அரசாங்கம் ஆனது நிவாரண தொகுப்புகள் (relief packages) மூலம் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கான 4ஜி ஸ்பெக்ட்ரத்தை (4G spectrum) ஒதுக்கியது. நாட்டில் 700 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசையில் 4ஜி (4G on the 700 MHz band) வழங்கும் ஒரே தொலைத்தொடர்பு ஆபரேட்டர் பிஎஸ்என்எல் ஆகும்.
தொலைத்தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா சமீபத்தில் பிஎஸ்என்எல் நிர்வாகத்திடம், அடுத்த ஒரு வருடத்தில் டெல்கோவின் ஏஆர்பியு (ARPU), அதாவது ஒரு பயனருக்கு சராசரி வருவாய் (Average revenue per user) 50% அதிகரிக்க வேண்டும் என்றும், நிறுவன வணிகமும் 25-30% அதிகரிக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார்.
2025 இல் தொடர்ச்சியாக இரண்டு காலாண்டுகளுக்கு பிஎஸ்என்எல் நிறுவனம் நிகர லாபத்தை (Net profits) ஈட்டியதும் நினைவுகூரத்தக்கது. இது கடந்த பல ஆண்டுகளில் முதல் முறையாகும். பிஎஸ்என்எல் நிறுவனம் நிகர லாபத்தை ஈட்டியது மட்டுமல்லாமல், புதிய பயனர்களையும் (New Users) சேர்த்தது.
ஒட்டுமொத்தமாக பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வணிகத்தை அதிகரிக்க விரைவாக மாற்ற கடுமையாக உழைத்து வருகிறது. முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் சுனில் மிட்டல் தலைமையிலான பார்தி ஏர்டெல் ஆகிய 2 ஜாம்பவான்களுக்கு இடையே போராடி வெற்றி பெறுவது - அவ்வளவு எளிமையான காரியமாக இருக்காது.
இந்நிறுவனம் ஏற்கனவே ரூ.1 க்கு 30 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் 4ஜி திட்டம், அதனுடன் இலவச சிம் கார்டு மற்றும் பிராட்பேண்ட் திட்டங்கள் மீதான தள்ளுபடி மற்றும் விலை குறைப்பு என.. தன்னால் ஆன எல்லாவற்றையும் செய்து புதிய கஸ்டமர்களை தன்வசம் ஈர்த்து வருகிறது தான். ஆனாலும் செப்டம்பர் 27 ஆம் தேதி அறிமுகமாகும் பான்-இந்தியா 4ஜி சேவை ஆனது, அதற்கான முக்கிய படியாக இருக்குமே என்று நம்பலாம்.


Click it and Unblock the Notifications








