ஓ அதுவும் பண்ணலாமா.. Incognito Mode-ல் ரகசிய வேலைகளை பார்க்கும் Google Chrome யூசர்களுக்கு ஒரு குட் நியூஸ்!
நீங்களொரு கூகுள் க்ரோம் (Google Chrome) யூசராக இருந்தால், இன்காக்னிடோ மோட் (Incognito mode) என்றால் என்ன என்கிற அறிமுகம் உங்களுக்கு தேவைப்படாது; அதே போல தனியுரிமை (Privacy) கட்டுப்பாடுகள் காரணமாக இன்காக்னிடோ மோட்-ல் ஸ்கிரீன் ஷாட்களை (Screenshots) எடுக்க முடியாது என்பதையும் நீங்கள் அறிந்திருக்கலாம்.
ஒருவேளை நீங்கள் இன்காக்னிடோ மோட்-ல் ஸ்கிரீன் ஷாட்டை எடுக்க முயற்சித்து இருந்தால், க்ரோம் ப்ரவுஸர் ஆனது "ஸ்கிரீன் ஷாட்டை கேப்சர் செய்ய முடியாது" என்கிற எச்சரிக்கையை (Warning) காண்பிக்கும் அல்லது உங்களுக்கு வெற்று ஸ்க்ரீன் (Blank Screen) மட்டுமே ஸ்க்ரீன் ஷாட் ஆக கிடைத்து இருக்கும்.

இன்காக்னிடோ மோட்-ல் இருக்கும் இந்த கெடுபிடி ஆனது, பெரும்பாலான க்ரோம் யூசர்களுக்கு ஒரு முட்டுக்கட்டையாகவே இருந்தது. குறிப்பாக க்ரோம் ப்ரவுஸர் வழியாக தாங்கள் என்னென்ன வேலைகளை செய்கிறோம், எதையெல்லாம் தேடி பார்க்கிறோம் போன்ற விவரங்களை / தரவுகளை கூகுள் "சேமித்து வைக்க கூடாது; நினைவில் வைத்து கொள்ள கூடாது" என்று விரும்பாத பயனர்களுக்கு!
இதற்கிடையில் - ஒரு சமீபத்திய அறிக்கையின்படி - கூகுள் நிறுவனமானது அதன் க்ரோம் ப்ரவுஸரில் ஒரு புதிய அம்சத்தை சோதித்து வருவதாகவும், அது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு இன்காக்னிடோ மோட்-ல் இருக்கும் போதும் கூட ஸ்கிரீன் ஷாட்களை எடுக்க உதவும் என்றும் கூறப்படுகிறது.
கிடைக்கப்பெற்ற அறிக்கையின்படி, கூகுள் நிறுவனமானது அதன் க்ரோம் 88 (Chrome 88) வழியாக ஸ்க்ரீன் ஷாட்களை எடுக்க அனுமதிப்பதற்கான "தற்காலிக தீர்வை" அறிமுகப்படுத்தி உள்ளது. இருப்பினும் இதில் சில சிக்கல்கள் இருப்பதாகவும், அவைகள் விரைவில் சரிசெய்யப்படும் என்றும் ஆண்ட்ராய்டு ஆராய்ச்சியாளர் மிஷால் ரஹ்மான் (Android Researcher Mishaal Rahman) ட்வீட் செய்துள்ளார்.
ஒருவேளை இன்காக்னிடோ மோட்-க்கு கிடைத்துள்ள ஸ்க்ரீன் ஷாட் எடுக்கும் திறனை நீங்கள் சோதித்து பார்க்க விரும்பினால்.. உங்கள் ஸ்மார்ட்போனில் 2 விஷயங்கள் இருக்க வேண்டும். ஒன்று - உங்கள் ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் அதற்கு மேலான ஓஎஸ் கொண்டு இயங்க வேண்டும். அப்போது தான் இந்த அம்சம் செயல்படும்.
இரண்டாவது - உங்கள் ஸ்மார்ட்போனில் கூகுள் க்ரோம் கேனரி ஆப் (Google Chrome Canary) ஆனது இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்க வேண்டும். ஒருவேளை இல்லையென்றால், கூகுள் பிளே ஸ்டோருக்கு (Google Play Store) சென்று இதை டவுன்லோட் செய்து கொள்ளலாம்; அங்கே இது இலவசமாக கிடைக்கும்.
உங்கள் ஸ்மார்ட்போனில் கூகுள் க்ரோம் கேனரி ஆப்பை இன்ஸ்டால் (Install) செய்த பிறகு, அட்ரெஸ் பாரில் (Address Bar) chrome://flags என்று டைப் செய்ய வேண்டும். பின்னர் 'மேம்படுத்தப்பட்ட இன்காக்னிட்டோ ஸ்கிரீன்ஷாட்கள்' (Improved Incognito Screenshots) என்கிற ஃபிளாக்கை (Flag) தேட வேண்டும்.
பின்னர் இன்காக்னிட்டோ மோட்-ல் எந்த பின்னடைவும் இல்லாமல் ஸ்கிரீன் ஷாட்களை எடுக்க குறிப்பிட்ட ஃபிளாக்கை எனேபிள் (Enable) செய்த பிறகு கூகுள் க்ரோமை ரீலான்ச் (Relaunch) செய்யவும்; அவ்வளவு தான். இப்போது உங்களால் இன்காக்னிட்டோ மோட்-ல் ஸ்க்ரீன் ஷாட்டை எடுக்க முடியும்.


Click it and Unblock the Notifications