Home
News

இனி பழையபடி.. LPG கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு குட் நியூஸ்.. வெளியானது முக்கிய அறிவிப்பு!

அமெரிக்கா-ஈரான் நெருக்கடிக்கு பிறகு எரிபொருள் விநியோகம் சீரடைந்துள்ளதை உறுதிப்படுத்தும் வகையில், வணிக மற்றும் தொழில்துறைக்கு (Commercial and industrial sectors) வழங்கப்படும் எல்பிஜி (LPG) என்கிற திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு (Liquefied petroleum gas) மீதான அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்குவதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.

"வீட்டு உபயோகம் அல்லாத, பேக்டு (packed) எல்பிஜி விநியோகம் மீதான அனைத்துத் துறைசார் கட்டுப்பாடுகளையும் நீக்கி, விநியோகத்தை நெருக்கடிக்கு முந்தைய நிலைக்கு கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மொத்த அளவில் (bulk) வழங்கப்படும் எல்பிஜி மீதான கட்டுப்பாடும் தளர்த்தப்பட்டு, நெருக்கடிக்கு முந்தைய நுகர்வு அளவில் 50 சதவீதம் வரை விநியோகிக்க அனுமதிக்கப்படுகிறது," என்று பெட்ரோலிய துறைச் செயலாளர் நீரல் மிட்டல் மாநிலங்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இனி பழையபடி.. LPG கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு குட் நியூஸ்!

அரசின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் சிறு வணிக நிறுவனங்களுக்கு 100 சதவீத எல்பிஜி விநியோகம் வழங்கப்படும். இருப்பினும், மொத்த அளவில் எல்பிஜி-யை பெறும் பெரிய அளவிலான தொழிற்சாலைகளுக்கு, அவற்றின் சராசரி விநியோக அளவில் 50 சதவீதம் மட்டுமே வழங்கப்படும்.

அனைத்து வணிக மற்றும் தொழில்துறை நுகர்வோரின் விவரங்களும் பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களின் (OMCs) தரவுத்தளங்களில் தொடர்ந்து பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், மூன்று நிறுவனங்களும் இணைந்து துறை வாரியாக ஒரு ஒருங்கிணைந்த தரவுத்தளத்தை (Unified database) பராமரிக்கலாம் என்றும் நீரல் மிட்டல் தெளிவுபடுத்தினார்.

தனியாக வெளியிடப்பட்ட மற்றொரு அறிக்கையில், பெட்ரோலிய அமைச்சகம் கூறியதாவது "உள்நாட்டு எல்பிஜி உற்பத்தி அதிகரித்துள்ளதையும், இறக்குமதி செய்யப்படும் எல்பிஜி சரக்குகள் போதுமான அளவில் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதையும் கருத்தில் கொண்டு, சி3/சி4 வாயு ஓட்டங்களை (streams) எல்பிஜி தொகுப்பிற்கு (pool) திருப்பிவிடும் அளவை குறைக்கவும் அரசு முடிவு செய்துள்ளது"

வீட்டு உபயோகத்திற்கான எல்பிஜி கிடைப்பதில் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையிலும், மொத்த உள்நாட்டு எல்பிஜி உற்பத்தி நாளொன்றுக்கு 40,000 டன்களுக்கு குறையாமல் பராமரிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையிலும், எல்பிஜி அல்லாத பயன்பாடுகளுக்கு சி3-சி4 வாயு ஓட்டங்களை அதிகரிப்பதற்கான நடவடிக்கை செயல்படுத்தப்படும் என்று அந்த அறிக்கை மேலும் தெரிவித்தது.

பெட்ரோ கெமிக்கல் மற்றும் பிற முக்கிய துறைகளுக்கு இந்த அதிகரிக்கப்பட்ட சி3/சி4 வாயு ஓட்டத்தை நிறுவனம் வாரியாக ஒதுக்கீடு செய்யவும், அது குறித்த வழக்கமான அறிக்கைகளை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கவும் பெட்ரோலிய அமைச்சகத்தின் கீழ் இயங்கும் 'சென்டர் ஆஃப் ஹை டெக்னாலஜி' (CHT) அமைப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுவொருபக்கம் இருக்க இந்தியாவில் எல்பிஜி (LPG) சிலிண்டர் இணைப்பு மற்றும் பிஎன்ஜி (PNG) இணைப்பு ஆகிய இரண்டையும் வைத்திருக்கும் குடும்பங்களுக்கு அறிவிக்கப்பட்ட புதிய விதி தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 'திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (விநியோகம் மற்றும் பகிர்வு ஒழுங்குமுறை) திருத்த ஆணை 2026-ன் கீழ், பிஎன்ஜி இணைப்பை பெறும் குடும்பங்கள் தங்கள் எல்பிஜி இணைப்பை 30 நாட்களுக்குள் ஒப்படைக்க வேண்டும்.

பிஎன்ஜி இணைப்பைப் பெற்ற 30 நாட்களுக்குள், இந்திய குடும்பங்கள் தங்கள் இண்டேன் (Indane), ஹெச்பி (HP) மற்றும் பாரத் கேஸ் (BharatGas) இணைப்புகளை நிறுத்த வேண்டும் என்று இந்த புதிய விதிமுறை கட்டாயம் ஆக்குகிறது. உதாரணமாக, ஜூன் 6 அன்று உங்கள் வீட்டில் பிஎன்ஜி இணைப்பு நிறுவப்பட்டால், ஜூலை 6 ஆம் தேதிக்குள் உங்கள் எல்பிஜி இணைப்பை நீங்கள் ரத்து செய்ய வேண்டும். சமையலறையில் பிஎன்ஜி இணைப்பு நிறுவப்பட்ட பிறகு, வாடிக்கையாளர்களால் எல்பிஜி-யை வாங்கவோ அல்லது ரீஃபில் (refill) செய்யவோ முடியாது என்பதையும் இது குறிக்கிறது.

Best Mobiles in India

English summary
Good News For Commercial LPG Gas Cylinder Users Govt lifts all LPG restrictions Suggests Unified database
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X