கேபிள் TVக்கு குட்பை.. மொத்த வீட்டுக்கும் ஒத்த ரீசார்ஜ்.. BSNL 2500GB டேட்டா, 600 சேனல், OTT, வாய்ஸ் பிளான்!
பிஎஸ்என்எல் (BSNL) அறிவித்துள்ள புதிய சில்வர் ஜூப்லி பிளானின் (New Silver Jubilee Plan) நன்மைகளை பார்க்கும் போது, "இனிமேல் எதுக்கு கேபிள் டிவி கனெக்ஷன்.. மொத்த வீட்டுக்கும் இந்த ஒத்த ரீசார்ஜ் போதுமே!" என்று நீங்கள் நினைத்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லை!
பிஎஸ்என்எல் நிறுவனம் தனது 25வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, அதன் பயனர்களுக்கு வெள்ளி விழா எப்டிடிஎச் திட்டத்தை (Silver Jubilee FTTH Plan) அறிவித்துள்ளது. இது ஏராளமான அதிவேக டேட்டா மற்றும் லைவ் டிவி சேனைகளுடன் பல கூடுதல் நன்மைகளையும் வழங்குகிறது.

பிஎஸ்என்எல்லின் சில்வர் ஜூப்லி எப்டிடிஎச் திட்டத்தின் விலை, நன்மைகள் மற்றும் வேலிடிட்டி: எக்ஸ் தளம் வழியாக பிஎஸ்என்எல் இந்தியா பக்கம் பகிர்ந்துள்ள விவரங்களின்படி, பிஎஸ்என்எல் தனது 25வது ஆண்டு தொடக்கத்தை கொண்டாடும் நோக்கத்தின் கீழ் ரூ.625 மதிப்புள்ள திட்டத்தை அறிவித்து உள்ளது.
இந்த திட்டத்தின் வேலிடிட்டி 1 மாதம் ஆகும். இதன் கீழ் 2500 ஜிபி அதிவேக டேட்டா (75எம்பிபிஎஸ் வரையிலான இண்டர்நெட் ஸ்பீட்) வழங்கப்படும். மேலும் 600 க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்கள் மற்றும் 127 பிரீமியம் சேனல்களுக்கான அணுகலும் கிடைக்கும்
கூடுதலாக, சோனி லைவ் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி ஆப்களுக்கான இலவச சந்தாக்களும் கிடைக்கும். கடைசியாக இந்தியா முழுவதும் உள்ள எந்த நெட்வொர்க்கிற்கும், அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி வாய்ஸ் கால்களும் கிடைக்கும். எஸ்எம்எஸ் நன்மைகள் குறித்த விவரங்கள் எக்ஸ் தள பதிவில் குறிப்பிடப்படாவில்லை. பிஎஸ்என்எல் வலைத்தளம் அல்லது ஆப் வழியாக ரீசார்ஜ் செய்யும் போது சரிபார்க்கும்படி பரிந்துரைக்கிறோம்.
பிஎஸ்என்எல் தொடர்பான சமீபத்திய செய்திகளை பொறுத்தவரை, இந்நிறுவனம் மொத்தம் 8 பிஎஸ்என்எல் திட்டங்களின் வேலிடிட்டி மற்றும் டேட்டா நன்மைகளை குறைத்துள்ளது. பிஎஸ்என்எல் ரூ.147 எச்டிவி ஆனது வேலிடிட்டி குறைப்பை பெறவில்லை; மாறாக இதன் டேட்டா நன்மை பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. இப்போது இது 10ஜிபி டேட்டாவிற்கு பதிலாக 5ஜிபி டேட்டாவை மட்டுமே வழங்கும்
இதேபோல பிஎஸ்என்எல்-ன் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டம் இப்போது 300 நிமிட வாய்ஸ் கால்கள், வரம்பற்ற டேட்டா (4ஜிபி க்கு பிறகு 40 கேபிபிஎஸ்) மற்றும் 100 எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளை 48 நாட்கள் என்கிற செல்லுபடியாகும் காலத்தின் கீழ் வழங்கும். முன்பு, இந்த திட்டம் 54 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வந்தது.
பிஎஸ்என்எல் ரூ.319 திட்டத்தின் வேலிடிட்டி 65 நாட்களில் இருந்து 60 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் ஹோம் எல்எஸ்ஏ-வில் உள்ள எந்தவொரு நெட்வொர்க்கிற்கும் வரம்பற்ற வாய்ஸ் கால்கள் (உள்ளூர்/எஸ்டிடி), நேஷனல் ரோமிங் (மும்பை மற்றும் டெல்லியில் எம்என்டிஎல் நெட்வொர்க் உட்பட), 300 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் டேட்டா (10ஜிபி க்கு பிறகு 40 கேபிபிஎஸ்) ஆகிய நன்மைகள் கிடைக்கிறது.
மேலும் ரூ.439 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது. இப்போது இது 90 நாட்களுக்கு பதிலாக 80 நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும். இதுவொரு வாய்ஸ் ஃபோகஸ்டு பிளான் ஆகும். அதாவது டேட்டா நன்மையை வழங்காது. இது அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 300 எஸ்எம்எஸ்களை மட்டுமே வழங்கும்.
பிஎஸ்என்எல்-ன் ரூ.599 மத்தவுள்ள வொர்க் ப்ரம் ஹோம் (WFH) ரூ.599 எச்டிவி திட்டத்தின் வேலிடிட்டி ஆனது 84 நாட்களில் இருந்து 70 நாட்களாக குறைக்கபட்டுள்ளது. நன்மைகளை பொறுத்தவரை ஹோம் மற்றும் நேஷனல் ரோமிங்கில் வரம்பற்ற வாய்ஸ் கால்கள், டெய்லி 3ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது. இதேபோல ரூ.897, ரூ.997 மற்றும் ரூ.1499 ஆகிய திட்டங்களின் வேலிடிட்டி / நன்மைகளும் குறைக்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








