கேபிள் TV-க்கு கட் சொன்ன அம்பானி.. 3 மாதங்களுக்கு Jio அள்ளி கொடுக்குதே.. 3.3TB டேட்டா, 16 OTT, 1000 சேனல்கள்!
முகேஷ் அம்பானி தலைமையிலான இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவின் (Reliance Jio) பெரும்பாலான பிராட்பேண்ட் திட்டங்கள் ஆனது வீட்டில் உள்ள கேபிள் டிவி கனெக்ஷனை கட் செய்யும்ப்டுயான நன்மைகளை வழங்குகின்றன. அவைகளில் இந்த 3 மாத சந்தா குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது.
அது ரூ.2222 திட்டமாகும். இந்த திட்டம் ஒரு சுவாரஸ்யமான கட்டண பிரிவின் கீழ் உள்ளது. சராசரியாக பார்த்தால், இந்த திட்டம் மாதத்திற்கு சுமார் ரூ.740 செலவாகும் ஒரு சந்தாவாக உள்ளது. ஆனாலும் கூட இதன் இண்டர்நெட் ஸ்பீட் வெறும் 30எம்பிபிஎஸ் மட்டுமே ஆகும்.

ஜியோவின் இந்த ரூ. 2,222 திட்டம் ஏன் இவ்வளவு விலை உயர்ந்ததாக உள்ளது? இதற்கு காரணம், இத்திட்டத்துடன் வழங்கப்படும் ஓடிடி (OTT) என்கிற ஓவர்-தி-டாப் (Over-the-top) சேவைகளுக்கான சலுகைகள் மற்றும் 1000 க்கும் மேற்பட்ட டிவி சேனல்களும் (TV Channels) தான்.
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.2,222 திட்டத்தின் கீழ் கிடைக்கும் நன்மைகள்: ரிலையன்ஸ் ஜியோவின் ரூ. 2,222 திட்டத்தில் பின்வரும் ஓடிடி சேவைகளுக்கான சந்தாக்கள் அடங்கியுள்ளன: JioHotstar, SonyLIV, ZEE5, SunNXT, Hoichoi, Discovery+, TimesPlay, TarangPlus, ErosNow, Lionsgate Play, ShemarooMe மற்றும் ETV Win. ஆக மொத்தம் 16 ஓடிடி சேவைகள் இதில் கிடைக்கின்றன.
இத்திட்டத்துடன் வழங்கப்படும் இண்டர்நெட் ஸ்பீட் 30 எம்பிபிஎஸ் ஆகும். நீண்ட கால திட்டத்தை தேர்ந்தெடுப்பதால், ஜியோ இதில் கூடுதலாக ஏழு நாட்களுக்கான இலவச சேவையையும் வழங்குகிறது. மேலும் பயனர்களுக்கு 1000 க்கும் மேற்பட்ட டிவி சேனல்களும் இத்திட்டத்தில் கிடைக்கின்றன. இதில் வழங்கப்படும் 30 எம்பிபிஎஸ் வேகம் என்பது பதிவிறக்கம் (download) மற்றும் பதிவேற்றம் (upload) ஆகிய இரண்டிற்கும் பொருந்தும்.
ஃபைபர் (Fiber) திட்டத்தில் வணிக ரீதியான டேட்டா பயன்பாட்டு லிமிட் 3.3டிபி ஆகவும், ஏர்ஃபைபர் (AirFiber) திட்டத்தில் 1டிபி ஆகவும் உள்ளது. உ-ங்கள் பகுதியில் ஃபைபர் மற்றும் ஏர்ஃபைபர் ஆகிய இரண்டு சேவைகளும் கிடைத்தால், ஃபைபர் இணைப்பையே தேர்ந்தெடுக்குமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம்; ஏர்டெல் நிறுவனமும் கூட இதே பரிந்துரையை தான் வழங்குகிறது
கடைசியாக இந்த திட்டத்துடன் ரூ.101 மதிப்புள்ள 100ஜிபி கூடுதல் டேட்டாவும் 90 நாட்களுக்கு வழங்கப்படும் என்றும் ஜியோ தெரிவித்துள்ளது. இத்திட்டத்தைப் பெற, நீங்கள் ரிலையன்ஸ் ஜியோவின் இணையதளத்தையோ அல்லது உங்கள் மொபைலில் உள்ள மைஜியோ (MyJio) ஆப்பையோ அணுகலாம். இந்த ஆப் ஐஓஎஸ் (iOS) மற்றும் ஆண்ட்ராய்டு (Android) ஆகிய இரண்டிலும் அணுக கிடைக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ ரூ.399 ஹோம் பிராட்பேண்ட் திட்டத்தின் நன்மைகள் (Reliance Jio Rs.399 Home Broadband Plan): ரிலையன்ஸ் ஜியோவும் தனது ரூ.399 வீட்டு பிராட்பேண்ட் திட்டத்தை நாடு முழுவதும் வழங்குகிறது. இந்த திட்டம் 30 எம்பிபிஎஸ் வேகத்தை வழங்குகிறது. இதில் டேட்டா வரம்புகள் ஏர்டெல்லை போலவே உள்ளன. அதாவது ஃபைபர் இணைப்புடன் மாதத்திற்கு 3.3டிபி டேட்டாவும், ஏர்ஃபைபர் இணைப்புடன் மாதத்திற்கு 1டிபி டேட்டாவும் கிடைக்கிறது.
பார்தி ஏர்டெல் ரூ.499 ஹோம் பிராட்பேண்ட் திட்டத்தின் நன்மைகள் (Bharti Airtel Rs.499 Home Broadband Plan Benefits): முன்னரே குறிப்பிட்டபடி பார்தி ஏர்டெல் தனது ரூ.499 ஹோம் பிராட்பேண்ட் திட்டத்தை நாட்டின் அனைத்து தொலைத்தொடர்பு வட்டங்களிலும் (telecom circles) வழங்குகிறது.
ஏர்டெல்லின் ரூ.499 திட்டம், ஃபைபர் இணைப்புடன் 40 எம்பிபிஎஸ் வேகத்தையும் மாதத்திற்கு 3.3டிபி (அல்லது 3300ஜிபி) டேட்டாவையும், ஏர்ஃபைபர் இணைப்புடன் மாதத்திற்கு 1டிபி (அல்லது 1000ஜிபி) டேட்டாவையும் வழங்குகிறது. இத்திட்டத்தில் நுகர்வோருக்கு எந்தவிதமான ஓடிடி (OTT) சேவைகளும், அதாவது எந்த ஸ்ட்ரீமிங் தளங்களுக்கான சந்தாவும் வழங்கப்படுவதில்லை.


Click it and Unblock the Notifications